ஆசிரியர்
வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா, நூல்கள் அறிமுக விழா 3.1.2021 அன்று மாலை 6 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில் நடை பெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் கோவி.செழியனின் நூல்கள் ஆய்வுரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
28.07.1949இல்
விடுதலை இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்த வருத்தமும் விஞ்ஞாபனமும் என்னும் பொய் கடிதம் பற்றி தந்தை பெரியார் எழுதிய அறிக்கை - தமிழர் தலைவர் படிக்க படிக்க நெஞ்சில் உதிரம் கொட்டும் உணர்வு. பெரியார் எனக்கு என்றுமே துணைவர்கள் இருந்ததில்லை, எதிரிகள், சதிகாரர்கள், மத்தியில் இருந்து பழகிப்பழகி கடுமையான பாதிப்புக்கு ஆளாகிவிட்டேன் என்பதை கேட்கும் பொழுது அய்யா பட்ட பாடு சித்திரமாய் மனக் கண்ணில் விரிகிறது.
22 வயதில்
ஆசிரியர் கி.வீரமணி கட்டுரை:
‘தலைவரென்போர்
யாரெனக் கேட்டால்' 22 வயதில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
எழுதிய கட்டுரை. 65 ஆண்டுகளுக்கு முன்பு டார்பிடோ, ஏ.பி.ஜனார்த்தனம்
நடத்திய தோழன் இதழின் அன்றைய திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளராக இருந்த 22 வயது நிரம்பாத இளைஞர் மாணவர் "கடலூர் வீரமணி. "ஆந்தூரு மராய்" (பிரெஞ்சு பெயரை அப்படித்தான் உச்சரிக்க வேண்டும்) என்ற புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரின் (The Arts of Living) என்ற நூலின் 9 அத்தியாயங்களில் தலைமைப் பண்புக்கான இலக்கணத்தைப் படித்து விட்டு அந்த இலக்கணத்திற்கு வாழும் இலக்கியமாக தாம் ஏற்றுக் கொண்ட தலைவர் திகழ்வதைக் கண்டு, தந்தை பெரியாரின் தலைமைத்துவத்தின் பொருத்தப்பாட்டை வியந்து எழுதியுள்ளார் அன்றும் இன்றும் பெரியாரின் மாணவரான நம் ஆசிரியர் அவர்கள். தமிழ்நாட்டில் பொது வாழ்க்கைச் சேற்றிலே முளைத்த செந்தாமரை! ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு (A Leader is Born and not Made) என்ற தலைமை வகித்து நடத்தும் ஆற்றல் என்பது இயற்கையிலே அமைதல் வேண்டும் - தந்தை பெரியார். ஒரு பேரறி ஞர், விருப்பு வெறுப்பற்றவர், சுயநலமற்றவர், தாழ்த்தப்பட்ட தன் இனத்தை உயர்த்துவது, சொந்த வாழ்வு, உல்லாச வாழ்வை இளமையிலே துறந்து, பெரியாரை பற்றி நாம் நன்றாக மனத்திலிருத்த வேண்டியது ஒன்று. பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல. ஓர் இயக்கமே அவர் (He is an Individual, But and Institution) அவர் யாருக்கும் சொந்தமானவ ரல்ல, தனிப்பட்ட முறையில் திராவிடத்தின் பொது சொத்து என்பதே.
தந்தை
பெரியாரின் தலைமை பண்பு-தத்துவம் கொள்கை, இவையெல்லாம் நிலைக்கவேண்டுமானால் தலைமை என்பது மிக முக்கியம். ஓர் இனத்தின் மானத்தை மீட்க வேண்டும், உரிமைப் போராட்டக் களத்திலே நிற்க வேண்டும்.
திராவிட
இயக்கத்தின் சாதனை-நீதிக்கட்சி என்று எளிய மக்களால் அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரி மைச்
சங்கம் சர்பிட்டி தியாகராஜர், டி.எம்.நாயர்,
நடேசனார் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்டு உணர்வுகளால் ஆட்சியைப் பிடித்தது.
பெரியார்
சந்தித்த எதிர்ப்புகள்:
பெரியார்
மீது மலம் வீசப்பட்டது, சாணி வீசப்பட்டது, அழுகிய முட்டை பெரியார் மீது வீசப்பட்ட பொழுது கூட தன்னுடைய பிரச்சார உரையை நிறுத்தாமல் தன்னுடைய உரையை தொடர்ந்தார். எதை வீசினாலும் இந்த இயக்கம் தன்னுடைய பணியைச் செய்து கொண்டேயிருக்கிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இழிவாய் கருதப்பட்ட மக்கள், தீண்டாதார், கீழ் ஜாதியார், ஈன ஜாதியார், சூத்திரர்,
பிறவி இழிவும் இந்திய மக்களின் சுயமரியாதைக்கும் விடுதலைக்கும் சமத்துவத்திற்கும்,மனித தன்மைக்குமாக வேண்டி பிரவாகமும், வேகமும்,கொண்ட வெள்ளத்தில் எதிர்நீச்சல் செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கைக்கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர். நூறாண்டுக்களுக்கு முன்பு இந்த இயக்கம் என்ன செய்தது? யாருக்காக பாடுபட்டது?அன்றைய பணி,இன்றைக்கும் அஸ்திவாரமாய் இருக்கிறதை நன்றாக ஆழமாகக் கவனிக்க வேண்டும்.அஞ்சாத இரும்பு நெஞ்சம், உண்மை யென்று கண்டதை ஒருவருக்கும் அஞ்சாமல் உரைக்கும் தன்மை, சொல்வதை செயலிலே நடத்திக் காட்டும் துணிகரமான போக்கு. நன்மையென்று நம்பியதை எவன் எதிர்ப்பினும் நழுவ விடாத பிடிவாதம், எண்ணியவைகளை எண்ணியவாறே செய்து முடிக்கும் சிறந்த குணம் இவை எல்லாம் பெரியாரிடம் என்றும் பணிந்து நிற்கும் பண்புகள். தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை "தமிழர் தலைவர்" என்னும் தலைப்பிலே முதல் பகுதியை எழுதியவர் அறிஞர் சாமி.சிதம்பரனார் ஆவார். 1938 இந்தி எதிர்ப்பு போராட்டம் வரை எழுதிய நூல். 1973 டிசம்பர் 19ஆம் தேதி அய்யா இறுதி உரை - இரவு 2.00 மணிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவ மனைக்கு செல்லல். 24ஆம் தேதி காலை 7:30 மணிக்கு அய்யாவினுடைய உயிர் பிரிகிறது.
இந்தி
எதிர்ப்பு இயக்கம் தோல்வியுற்றால் இன்னும் குறைந்தபட்சம் 200 ஆண்டுகளுக்கு தமிழர்கள் தலைநிமிர முடியாதென்பது அவருடைய திடமான அபிப்பிராயம் - இந்தி எதிர்ப்புப் போர் வெற்றியிலேயே தமிழர்களுடைய எதிர்கால வாழ்வு அடங்கியிருக்கிறது என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை. விடுதலையும், குடியரசும் பெரியா ரின் இரு கண்கள். அம்மட்டுமோ உயிர்நாடி என்றாலும் மிகையாகாது. தமிழர் இயக்க வெற்றிக்கு விடுதலையும், குடியரசும் இன்றியமையாப் போர்க்கருவிகளாகும். ஆகவே அவ்விரு பத்திரிகைகளும் செல்வனே நடை பெறுவதற்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டியது தமிழ் மக்களின் நீங்காத கடமை. கும்பகோணம் கலவ ரத்தை பற்றியும் ‘இந்து' பத்திரிக்கை மற்றும் 8 ஆம் தேதி ‘தினமணி' சுயமரியாதைக் காலிகள் - குடியரசு தலையங்கம் 13.03.1938.
கருஞ்சட்டை
மாநாடு:
மதுரையில்
கருஞ்சட்டை அணிந்து சென்ற ஒரு முதல் மாநாடு "கருப்பு சட்டை மாநாடு 15.05.1946இல் நடைபெற்றது. டில்லி ரேடியோ மற்றும் நமது மாகாண ரேடியோக்களும் அசோசியேட் பிரசுக்கும் விபரமான அறிக்கை "லிபரேட்டர் தவிர வேறு எந்த பத்திரிகையும் சரியாகப் பிரசுரிக்கவில்லை. திரு.வி.க எழுதுகிறார்,
06.12.1938இல் இந்தி எதிர்ப்பில்
ஈ.வெ.ரா.வுக்கு
கடுங்காவல் தண்டனை - நண்பர் நாயக்கருக்கு சிறைவாசம் பழையது. தீண்டாமையை முன்னிட்டும், சமதர்மத்தை கூறிக்கொண்டும் பலமுறை சிறை சென்றுள் ளார் - ஒரு வித தவக்கோட்டம். அய்யா அவர்கள் ஓர் அனுபவ களஞ்சியம். 1922இல் ஜனவரி மாதம் 20ஆம் தேதி இந்து பத்திரிகையில் தேசத் துரோகி, மதத்துரோகி நாஸ்தி கள், கோழை, சர்க்கார்தாசன் - எந்தப் பட்டம் கிடைப்பதானா லும் நாம் செய்யும் வேலையில் மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்பட வேண்டுமென்று கருதி சில திட்டங்களை அதில் என் இஷ்டப்படி உழைத்து வருகிறேன் இனியும் சாகும் வரை அந்த படியே உழைத்து வரத்தான் செய்வேன்.
"தோழர்
ஜீவானந்தம் எழுதிய வியாசத்தை பத்திரிகை யில் போட்டதற்கு ஜாமீன் கொடுத்தேன். நானும் என் தங்கையும் சிறைப்பட்டோம்" அவருடைய எண்ணம் என்ற பாடத்தைத் தெரிந்துக்கொள்வோம் நன்கு கற்போம் அதன் வழி நடப்போம்.
ஒரு
மார்க்சிஸ்ட் பார்வையில்
திராவிடர்
கழகம்-பேராசிரியர் அருணன்
மார்க்கிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் சீரிய சிந்தனை யாளரும் பல அரிய படைப்புகளுக்கு
சொந்தக்காரருமான பேராசிரியர் அருணன் அவர்கள், காலத்தால் அழிக்கப்பட முடியாத பெட்டகமாக காலந்தோறும் பிராமணியம் என்னும் தலைப்பில் எட்டு தொகுதிகள் உருவாக்கினார். 22.05.1967 விடுதலையில் தந்தை பெரியார் நாட்டில் நடப்பது ஆரியர்-திராவிடர் போராட்டமே அடிப்படைத் தத்துவம் கம்யூனிஸ்ட் உள்பட. ரஷ்யா சென்று வந்து அதன் கொள்கைகளை (கம்யூனிஸ்ட்) மக்களிடம் முதன்முதலில் கூறியவர் பெரியார் ஒருவரே. பார்ப்பனர்கள் - இந்த விஞ்ஞான காலத்திலும் பழங்கால வழக்கங்களை பின்பற்றி நடக்கிறார்கள்.கம்யூனிஸ்ட் கொள்கையை திராவிடர் கழகம் கொண்டுள்ளது. சர்க்காரின் அடக்குமுறைக்கு, சிறையில் சுட்டுகொல்லப்பட்ட பொழுது நம்மைப்பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. திராவிடத்தின் "பெரியாரும்" "விடுதலை" பத்திரிகையும் மட்டுமே நம்மை கைவிடாமல் காப்பாற்றியது.ஆகவே நாம் திராவிடர் கழகம் உண்மையான மக்கள் கழகம் என்பதை உணருகிறோம் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.கே.டாங்கே 69 ஆண்டுகளுக்கு
முன்பே கூறினார். பொதுவு டைமை கட்சியும், திராவிடர் இயக்கமும் தண்டவாளங்கள் போல் சமத்துவ உலகம் நோக்கி பயணம் செய்வதற்காகப் பயன்பட வேண்டியவை. 1938இல் இந்தி எதிர்ப்பு - நாட்டு பிரிவினை சமூக பிரச்சினை மொழிப் பிரச்சினை, மொழி உணர்வு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜனசங்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை போல தி.மு.க
வை தி.க வைத்திருக்க
வேண்டும் அதை சுமுகமாக தீர்க்க பெரியார் தவறிவிட்டார் என நூலாசிரியர் அருணன்
கூறுகிறார். இப்பொழுது "தி.மு.க
வை வழிநடத்துவது பெரியார் திடலே என்று தி.மு.க
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
கூறியதை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும். தி.க விலிருந்து
தி.மு.க பிரிந்து
சென்றது பிளவாகும் என நூல் ஆசிரியர்
கூறுகிறார். தி.மு.க
அரசியலில் நுழைந்து ஆளும் நிலைக்கு சென்ற போது இடையில் ஏற்பட்ட மனத்தாபங் களை தூக்கி எறிந்துவிட்டு தி.மு.க.வை பயன்படுத்திக் கொண்டார்
பெரியார். அண்ணா மொழியில் சொல்ல வேண்டும் என்றால் வழி நடத்தினார் என்றே கூறவேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்
நீதிபதி:
சென்னை
உயர்நீதிமன்றம் தோன்றி நூறு ஆண்டு களாகியும் ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக வரமுடிய வில்லையே ஏன் என்று தந்தை பெரியார் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த விடை தான்,தி,மு.க
ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த முதல் நீதிபதியாக திரு.ஏ.வரதராசன், 1973இல்
உச்சநீதி மன்றத்திற்குள் நுழைந்த முதல் நீதிபதியும் அவர்தானே. ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு எப்பொழுதும் திராவிடர் கழகம் செவி சாய்க்கும் என்னும் வகையில் கழகத்தின் மீதான விமர்சனங்களுடன் கூடிய பார்வையை முன் வைக்கும் பேராசிரியர்.அருணன் அவர்களின் கட்டுரைகளை தொகுத்து இந்நூலை திராவிடர் கழகம் வெளியிடுகிறது.
புதிய
தலைமுறையினருக்கும் முற்போக்குச் சிந்தனை யாளர்களுக்கும் இந்நூல் ஓர் ஊட்டச்சத்தாகும் என்பதில் அய்யமில்லை.
இந்நூலின்
உள்ளடக்கம்:
> சமூக
சீர்திருத்த இயக்கம்
> வைக்கம்
போராட்டம்
> சேரன்
மாதேவி குருகுல விவகாரம்
> வகுப்புவாரி
உரிமை
> தேசம்
- பத்திரிகை
> குடியரசு
- பத்திரிகை
> சுயமரியாதைக்
கொள்கைப் பிரகடனம்
> சுயமரியாதை
இயக்க முதல் மாநாடு
> மாதர்
விடுதலை
> சுயமரியாதை
திருமணம்
> பெண் ஏன் அடிமையானாள்
> கீதை
- சங்கராச்சாரியார் விமர்சனம்
> ராஜாஜி அரசாங்க எதிர்ப்பு
> இந்தி எதிர்ப்பு
> மொழி பிரச்சினை
> இந்து-முஸ்லிம் ஒற்றுமை
> திராவிட
நாடு தீர்மானம்
> திராவிடர்
கழகம் பிறப்பு
> சமூகசீர்திருத்தம்
- தந்தை பெரியார் பெரும் பங்கு
> வகுப்புவாரி
இட ஒதுக்கீடு
> ராஜாஜியின்
குலக்கல்வித் திட்டம்
> பிள்ளையார்
உடைப்பு போராட்டம்
> குலக்
கல்வி திட்டம் ஒழித்தது
> இந்தி
திணிப்புக்கும் அடி
> ராமன்
படம் எரிப்பு போராட்டம்
> பிராமணாள்
ஓட்டல் ஒழிப்பு
> அரசியலமைப்பு
சட்ட எரிப்புப் போராட்டம்
> பெரியார்
வழியில் பாரதிதாசன், எம்.ஆர்.ராதா.
> சமூகச்
சீர்த்திருத்த இயக்கம்-திராவிடர் இயக்கம், தி.மு.கழகம்.
> 69% - வந்தது
ஆபத்து.
> நீதிபதிகளின்
கொடும்பாவி கொளுத்தப்பட்டது.
> தீண்டாமை
ஒழிப்பு
> ஜாதி
ஒழிப்புப் பிரச்சாரம் பெரும்பான்மை.
> ஜாதி
ஒழிப்பிற்கான பத்து அம்சத் திட்டம்
> பெண்ணுரிமைப்
பாரம்பரியம் தொடர்ந்தது.
> தொலைக்காட்சியில்
இந்தி திணிப்பு
> பாபர்
மசூதி இடிப்புக்கு கண்டனம் போன்ற திராவிடச் சித்தாந்தங்கள், மாணவர்களின் வளர்ச்சிக்கும், கல்விக்கும் உதவும் பல்வேறு
கருத்துகள் - நூலில் என்றென்றும் காலத் தால் அழியாத காவிய தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய கல்வி ஆயுதம்.
(தொடரும்)
No comments:
Post a Comment