ஒற்றைப் பத்தி: பெரியார் மாணாக்கன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 25, 2021

ஒற்றைப் பத்தி: பெரியார் மாணாக்கன்

பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் இதுவரை வழங்கிய நன்கொடைகள்:

பெரியார் பெருந்தகையா ளர் நிதி - மாதம் ரூ. 100 என பணியில் சேர்ந்த முதல் மாத ஊதியத்திலிருந்து இந்த மாதம் வரை - (283 X 100) - ரூ.28,300

டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - மாதம் ரூ.100 - (225 X 100) - ரூ.22,500,

விடுதலை' வைப்பு நிதி - மாதம் ரூ. 1000 - (109 X 1000) - ரூ.1,09,000,

அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில் 19 ஆண்டுகளாக ஆண் டுக்கு ரூ.1200 என இதுவரை - (19 X 1,200) - ரூ.22,800,

திருச்சி, சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில், ஆண்டுக்கு ரூ.25,000 என 8 ஆண்டுகளில்  - (8 X 25,000) - ரூ.2,00,000,

ஈ.வெ.ரா மணியம்மையார் அறக்கட்டளைக்கு - ரூ.1,00,000,

விடுதலை' வளர்ச்சி நன் கொடை மாதம் ரூ. 100 என இதுவரை 138 மாதம் செ.பெ.தொண்டறம் வழங்கியது - (138 X 100) ரூ.13,800,

பெரியார் பிஞ்சு' மாதம் ஒரு சந்தா என இதுவரை 55 மாதங்களில் 55 ஓராண்டு சந்தா செ.பெ.தொண்டறம் வழங் கியது  - (55 X 240) - ரூ.13,200,

உண்மை' சந்தா மாதம் ஒரு சந்தா என 55 மாதங்களில் 55 ஓராண்டு சந்தா மு.செல்வி அவர்கள் நன்கொடையாக வழங்கியது - (55 X 350) -

ரூ. 19,250.

விடுதலை' சந்தா, மாதம் ஒரு சந்தா என 78 மாதங்களில் 78 சந்தா (சென்ற ஆண்டு ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில் 10 ஓராண்டு சந்தா - ரூ.18,000), 78 ஆறு மாத சந்தா. இடையில் சந்தா கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டதால் எவ்வளவு ரூபாய் என கணக்கிட முடியவில்லை.

மொத்தம் ரூ.5,28,850

இவ்வளவுத் தொகையையும் நன்கொடையாகத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் பெரியார் மாணாக்கன் (வாழ் விணையர் மு.செல்வி, மகள் செ.பெ.தொண்டறம்) பெரிய தொழில் அதிபராக இருப்பாரோ! அல்லது வணிகராக இருப்பாரோ! என்றுதான் இதனைப் படிக்கும் யாரும் யூகிப்பார்கள்.

அதெல்லாம் ஒன்றும் கிடை யாது; சென்னை மாநகரப் போக் குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் ஒப்பற்ற கொள்கை மாமணிதான் இவரும், இவர்தம் குடும்பத்தவரும்.

தன் வீட்டுச் சோற்றைத் தின்று விட்டு, தன் செலவில் இயக்கத்தில் ஈடுபட்டு ஊருக்கு உழைக்கும் திராவிடர் கழகத் தொண்டர்கள் என்ற மதிப்பீடும், மரியாதையும் பொதுவாக சமூகத்தில் உண்டு.

ஆனால், ஓட்டுநரான ஒரு தொழிலாளி குடும்பம் இவற்றை யெல்லாம் தொடர்ந்து மாதந் தோறும் இயக்கத்துக்கும், இயக்க ஏடுகளுக்கும் நன்கொடையை நல்கி மனநிறைவு பெறுகின்றது என்றால், இந்த மானமிகு தோழர் களின் ஒப்பற்ற பீடுறு தொண் டறத்திற்கு ஈடு இணை இந்த உலகில் ஏது - ஏது?

பணம் உள்ள இடத்தில் மனம் இருப்பதில்லை. மனம் உள்ள இடத்தில் பணம் இருப்பதில்லை.

ஆனால், இவர் எப்படி?

எண்ணிப் பாரீர்!

 - மயிலாடன்

No comments:

Post a Comment