மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் 75 லட்சம் பேருக்கு வேலையாம்!
கொல்கத்தா,
ஜன.2, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால்
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பு அளிக்கப்படும் என்று 2014 தேர்தலில் மோடி தேர்தல் வாக்குறுதியை
அளித்தார். ஆனால், படித்த இளைஞர்கள்
பகோடா விற்று பிழைக்கலாம் என்று
அவரே கூறிவிட்டார். தற்பொழுது மேற்கு வங்க மாநிலத்தை
குறிவைத்துள்ள பாஜக, மேற்குவங்கத்தில் தாங்கள்
ஆட்சிக்குவந்தால், 75 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
அளிப்போம் என்று கூறி வருகிறது.
மேற்கு
வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இளைஞர் களைக் கவரும்
உத்தியாக வேலை வாய்ப்பு முகாம்களை
பாஜக நடத்தி வருகிறதாம். அதிலும்,
அம்மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்
என்று கூறிக்கொண்டு, அம்முகாம் களில், ‘வேலைவாய்ப்பு அட்டை’ என்ற பெயரில்
டோக்கன் வழங் கப்பட்டு வருகிறது.
மேற்கு
வங்க மாநில பாஜக தலைவர்
திலீப் கோஷ் கூறுகையில், “நாங்கள்
வழங்கிய அட்டை இருந் தாலே,
தங்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி
என்று பெரும் பாலான பொதுமக்கள்
நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் நாங்கள் வழங்குவது
தனியார் வேலை வாய்ப்பாக இருக்கலாம்
அல்லது சுயதொழில் துவங்க உதவி செய்வ
தாகவும் இருக்கலாம்" என, “பக் கோடா
விற்பதும் ஒரு வேலை வாய்ப்புதான்”
என்று முன் பொருமுறை பிரதமர்
மோடி கூறியதை நினைவுபடுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment