இந்தியாவில்
இறக்குமதி ஆகும் அயல்நாட்டுப் பழங் களில் ஆப்பிளை அடுத்து டிராகன் பழம் முக்கியத்துவம் பெறுகிறது
இந்தப்
பழம் டிராகன் போன்ற உருவத்தை (ஒருவகைப் பாம்பு) ஒத்து இருப்பதால் இதற்கு ஆங்கிலத்திலேயே டிராகன் பழம் என்று பெயர் சூட்டப்பட் டுள்ளது. கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் அகராதிகளில் இந்த விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது.
இந்த
நிலையில் குஜராத் பா.ஜ.க.
முதல்வர் விஜய் ருபானி புதிய பெயர் ஒன்றை சூட்டியுள் ளார். அதற்கு அவர் கூறிய கார ணமும் விசித்திரமாக உள்ளது.
''டிராகன்
என்பது சீனாவின் அடையாளம். ஆகவே அந்தப் பெயர் நமக்குத் தேவையில்லை, கமல் என்பது நமது கலாச்சாரச் சின்னம். ஆகையால் இந்தப் பழத்திற்கு கமலம் என்று பெயர் சூட்டுகிறோம்'' என்றார்.
''இங்குள்ள
மக்கள் அப்பழம் தாமரைப் போல் உள்ளதாக கூறியுள்ளனர். ஆகவே, கமலம் பழம் என்று அதன் பெயரை சரியாகவே மாற்றியுள்ளோம்.
இதன்
மூலம் சீனாவின் கலாச்சாரத் திணிப்பை முறி யடித்து விட்டோம். மேலும் இப்பெயர் மாற்றம் நாட்டுப்பற் றின் அடையாளமும் ஆகும். பெயர் மாற்றியதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் கிடையாது'' என்று சப்பைக் கட்டு வேறு.
இதையடுத்து
அந்தப் பழத் தின் பெயரை மாற்ற அந்த மாநில அரசு முடிவு செய்தது.
கமலம்
என்றால் தாமரை என்று பொருள். தாமரை பா.ஜ.க.வின் தேர்தல் சின்னம் என்பதுதான் இதன் உள்ளீடு.
எதிலும்
மதவாத - அரசியல் பார்வை - கண்ணோட்டம் என் பது சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.
வுக்கு உடன் பிறந்த நோய்!
இதேபோல
இன்னொரு தகவலும் உண்டு. அது காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் முஸ்லிம் எதிர்ப்பு - ஹிந்து வெறி சம்பந்தப்பட்டது.
'ஜூனியர்
விகடனில்' வெளிவந்தது. இதோ அத்தகவல்.
''அண்மையில்
மதுரைக்கு விசிட் அடித்தார் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர். அவரைச் சந்தித்து ஆசிவாங்கிய பக்தர்கள் கூட் டத்தில் ஒருவர் மாம்பழங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு, ''இது உரம் போடாமல் இயற் கையாகக் காய்த்துப் பழுக்க வச்ச பழம்'' என்று சொல்ல...
''அப்படியா?
இந்த மாம்பழத் தின் பெயர் என்ன?'' என்று ஆர்வமாகக் கேட்டிருக்கிறார், சங்கராச்சாரியார்.
உடனே
அந்த பக்தர், ''இமாம் பசந்த்'' என்று சொல்லியிருக் கிறார்.
''மாம்பழத்திற்கு
இப்படி ஒரு பெயரா?'' என்றபடி சிரித்த சங்கராச்சாரியார், ''பரவாயில்லை, சீக்கிரமே இதையும் ''இராம் பசந்த்துன்னு'' மாத்திட்டாப் போச்சு'' என்றாராம்.''
இது
ஜூவி வெளியிட்ட செய்தி.
'டிராகன்'
பழத்தை 'கமலம்' என்று மாற்றுவதும், ''இமாம்சந்த்'' என்னும் பெயருடைய மாம் பழத்தை ''இராம் பசந்த்'' என்று மாற்றுவதும் பார்ப்பன - பனியா பி.ஜே.பி.
கூட்டத்தின் நெறி கெட்ட துவேஷ வெறியைக் காட்டவில்லையா?
- மயிலாடன்
No comments:
Post a Comment