இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· புல்வாமா தாக்குதல் குறித்து ஊடகவியலாளருக்கும் பார்க் அமைப்பின் அதிகாரிக்குமான உரையாடல், நாட்டின் இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம் என காங்கிரஸ் தலைவர்
ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· 1950 ஜனவரி
26 அன்று இந்தியா முதன்முதலில் குடியரசு தினத்தை கொண்டாடிய பின்னர் முதல் முறையாக, டில்லியில் இரண்டு அணிவகுப்புகள் நடைபெறும். ஒன்று அரசின் சார்பில் அணிவகுப்பாக இருக்கும், இதனைக் காண உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவுகள் அழைக்கப் படுவர். மற்றொன்று இந்தியக் குடியரசின் மக்களால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு அணிவகுப்பு, எந்த அதிகாரிகளும் அழைக் கப்படவில்லை. கோபமடைந்த விவசாயிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஏற்றிச் செல்லும் டிராக்டர்களின் அணி வகுப்பாக இது இருக்கும். இது அரசின் அணிவகுப்பை சீர் குலைக்க நடத்தப்படவில்லை. மாறாக, அரசு தாங்கள் சொல் வதை செவிமடுக்க மறுக்கிறது என்பதை பறைசாற்ற நடத்தப்படு கிறது என மூத்த பத்திரிக்கையாளர்
தல்வீன் சிங் எழுதியுள்ளார்.
· ஜனவரி 26 ஆம் தேதி டில்லி தலைநகரில் நடைபெறும் 'கிசான் பரேட்' விவசாயிகள் பேரணி நிகழ்ச்சியில் உத்தரபிர தேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 25,000 டிராக்டர்கள் பங்கேற்கின்றன என்று பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ)
தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
· நம் நாட்டில் ஒரு கருத்தியல் போர் நடந்து வருகிறது: இந்தியாவுக்கு ஒரே ஒரு கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே யோசனை இருக்க வேண்டும் என்று மோடி நம்புகிறார் எனக் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் இயற்றப் பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுவரும் விவசாயிகளுக்கு தனது ஆதரவை உறுதிப்படுத் தினார்.
தி
டெலிகிராப்:
· நேதாஜியின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாள் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசத் துவங்கியதும், பாஜக வினரின் 'ஜெய் சிறீராம்' கோஷங்களால் தனது பேச்சை தொடராமல் நிறுத்திக் கொண்டார். தனது 30 நிமிட உரையில், மோடி தனது ஆதரவாளர்களின் மோசமான நடத்தை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை அல்லது அதற்கு வருத்தமும் தெரிவிக்கவில்லை.
- குடந்தை
கருணா
24.1.2021
No comments:
Post a Comment