ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்றால் தமிழ், வங்கமொழிகளுக்கென்று வரலாறு இல்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 25, 2021

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்றால் தமிழ், வங்கமொழிகளுக்கென்று வரலாறு இல்லையா?



ஈரோட்டில் ராகுல்காந்தி எம்.பி. எழுப்பிய கேள்வி

ஈரோடு,ஜன.25- தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸ் கட்சி யின் மேனாள் தலைவர் ராகுல்காந்தி காந்தி எம்.பி., தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்தமிழில் பேசுவதால் தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என மத்தியில் ஆள்பவர்கள் நினைக்கிறார்கள் என்று  அவர் கூறினார்.

ஈரோட்டில் அவர் பேசுகையில்,

இந்த நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்று சொல்கிறது. அப்படி என்றால், தமிழ் என்பது மொழி அல்லவா? தமிழருக்கு என்று  வரலாறு இல்லையா? வங்க மொழி இல்லையா, வங்க மொழிக்கு வரலாறு இல்லையா? வடகிழக்கு மாநிலங்களுக்கு மொழி இல்லையா? பஞ்சாப் மக்களுக்கு அவர்கள் பேசுகின்ற மொழி இல்லையா? அவர்களுக்கு என்று வரலாறு இல் லையா? இப்படி இருக்கும்போது ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்று சொல்வது எந்த விதத்தில் நியா யம்? இது இந்த நாட்டின் அஸ்தி வாரத்தின்மீது நடத்தப்படும் தாக்குதல் என்றார்.

  நேற்று (24.1.2021) அவர் 2ஆம் நாளாக திருப்பூர் மாவட்டத்திலும், ஈரோடு மாவட்டத் திலும் பிரச்சாரம் செய்தார்.  ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள ஓடாநிலையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் ராகுல் காந்தி பேசுகையில், தமிழில் பேசுவதால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என மத்தியில் ஆளுபவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். நான் தமிழகத்தில் பிறக்கவில்லை. ஆனால், தமிழ் மொழிக்கான மதிப்பை நன்கு அறிவேன். ஆனால், மத்தியில் ஆளும் மோடிக்கோ, பா..வினருக்கோ இது தெரியாது. தமிழக மக்களுக்கு அநீதி இழைத்துவிட்டு மோடி வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் அதிகம் உள்ளது. வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் வளம் பெறாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களை ஜி.எஸ்.டி., பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவை நசுக்குகிறது. என்றார்.

நெசவாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து அங்கு நடந்த நெசவாளர் சந்திப்பு கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:

சீனா ராணுவம் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. ஜவுளித்தொழிலில் பங்களாதேஷ், இந்தியாவுக்கு போட்டி யாக இருந்து வருகிறது. இந்திய எல்லை களை ஆக்கிரமிப்பு செய்யும் அளவுக்கு சீனாவுக்கு எப்படி தைரியம் வந்தது என்றால், நமது இந்திய நாடு மிகவும் பலவீனமாக உள்ளதை தெரிந்து வைத் துள்ளனர். நமது நாட்டின் பிரதமர் மோடி சீனாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி உள் ளது என்று சீனாவுக்கு நன்கு தெரியும். நாட்டில் உள்ள 95 சதவீத மக்களான விவசாயிகள், நெசவாளர்கள், தொழி லாளர்களை பலவீனப்படுத்திக்கொண்டு 5 சதவீத பணக்காரர்களை மோடி அரசு வாழ வைக்கிறது.

இந்தியாவில் விவசாயிகள், சிறு, குறு முதலீட்டாளர்கள் தன்னிறைவு பெறும் பட்சத்தில் சீனா அதிபர்கூட இந்திய தயாரிப்பு துணிகளையும், கார்களையும் பயன்படுத்துவார். ஆனால் மத்திய அரசு 5 தொழில் அதிபர்களுக்காக மட்டுமே பாடுபடுகிறது. மோடி அரசு தொழிலா ளர்களின் மீதான முதல் தாக்குதல் என்பது பண மதிப்பிழப்பு நடவடிக் கைதான். பண மதிப்பிழப்பு நடவ டிக்கையின் முக்கிய நோக்கம் எந்த ஏழையும் தொழில் செய்யக்கூடாது என்பதுதான். அடுத்த கட்டமாக நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. கரோனா காலத்தில் பா.. அரசு மிகப்பெரிய தொழிலதிபர்களின் பல ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயிகள், நெசவாளர்கள், ஏழைகளின் ஒரு சதவீத கடன்கள்கூட தள்ளுபடி செய்யப்பட வில்லை.

தந்தை பெரியார் உட்பட தலைவர்களுக்கு ராகுல் மாலை அணிவிப்பு

இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே மகளிர் காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள முன்னாள் முதல்வர் காமராஜர்,

.வெ.கி. சம்பத் ஆகியோரின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சர். .டி.பன்னீர்செல்வம் பார்க்கில் அமைந்துள்ள தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர் பேசியதாவது:  பிரதமர் மோடி, பா..., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டோர் தமிழ் பாரம்பரியம், பண்பாட்டுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பினை கொடுக்க தவறிவிட்டனர். அவர்களுக்கு அதை பற்றிய புரிதலும் இல்லை. தமிழக மக்கள் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். அதிகாரத்தால் அவர்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. அன்பு, மரியாதையுடன் தமிழக மக்களிடம் பழகினால் அவர்களும் திரும்ப அதே அன்பு, மரியாதையை கொடுப்பார்கள். இதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாடு என்பது பல மொழிகளையும், ஜாதிகளையும், மதங்களையும், பண்பாடுகளையும் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். இதுதான் இந்தியாவின் பலம். ஆனால் இதை மாற்ற மோடி அரசு முயற்சித்து வருகிறது என்றார்.

No comments:

Post a Comment