புதுச்சேரி, ஜன. 24- புதுச்சேரி மாநிலம், காரைக்கால் டி.ஆர். பட்டினத்தைச் சேர்ந்தவர் எழிலரசி (35). பெண் தாதாவான இவர் மீது அவரது கணவர் ராமு, ராமுவின் முதல் மனைவி வினோதா, முன்னாள் சபாநாயகர் விஎம்சி சிவக் குமார் ஆகியோரின் கொலை வழக்குகள் நிலுவையிலுள்ளன.
பல்வேறு வழக்குகளில்
தொடர்புடைய எழிலரசி கடந்த 2018ஆம் ஆண்டு குண்டாசில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி, காரைக்கால் நேதாஜி நகரில்
வசித்து வந்தார். கடந்தாண்டு 2020 டிசம்பர் 31ஆம் தேதி டிஆர்
பட்டினம் காவல் நிலையத்தில் புதிதாக மற்றாரு புகார் அளிக்கப்பட்டது. அதாவது
ராமுவின் மகன் ராஜேஷ் ராம் மற்றும் ராமுவின் மாமனார் செல்வராஜ் இருவரையும் மிரட்டி
மதுபான கடையை எழுதி வாங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த
வழக்கில் தலைமறைவாக இருந்த எழிலரசியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். போலீசார்
கண்ணில் மண்ணை தூவி விட்டு மரக்காணம் அடுத்த மஞ்சங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக தலைவர் சாமிநாதன்
மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் எழிலரசி கட்சியில்
இணைந்தார். காவல்துறையால் தேடப் பட்டு வரும் நபரை சந்தித்த பாஜ தலைவர் சாமிநாதனை விசாரணை வளையத்தில் கொண்டு வர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
டெங்கு
காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் உயிரிழப்பு
மதுரை,
ஜன. 24- மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுவன் பலியானார்.
மதுரை
எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சத்தியப்
பிரியா என்பவரது ஏழு வயது மகன் திருமலேஷ். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளியன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக் காமல் ஏழு வயதுச் சிறுவன் திருமலேஷ் வெள்ளியன்று உயிரிழந்தார்.
இந்த
நிலையில் அவரது சகோதரர் ஒன்பதுவயதான மிருத்தின் ஜெயன், டெங்குகாய்ச்சல் பாதித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். திருமலேஷ் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் ஆறு பேர், நவம்பரில் 14 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
22.1.2021வரை 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. டெங்கு பாதிப்பு பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
No comments:
Post a Comment