பெரியார் - மணியம்மை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 31, 2021

பெரியார் - மணியம்மை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (31.1.2021) நடைபெற்றது. 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக, 43 ஆயிரம் மய்யங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கிவரும் பெரியார் - மணியம்மை மருத்துவமனையில் இன்று  காலை 9.30 மணிக்கு போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார்.ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் பல்லவா அமைப்புடன் இணைந்து  நடத்தப்பட்ட இந்தப் போலியோ சொட்டு  மருந்து  முகாமில், அதன் தலைவர் ராபர்ட், செயலாளர் டி.இரவி மற்றும் அதன் நிர்வாகிகள் அண்ணாமலை, மோகன்குமார், டி.வி.ரமேஷ், ஞானசேகர், செல்வராஜ், டாக்டர் ஸ்டாலினா, டாக்டர் தங்கம் ஆகியோர் பங்கேற்று  சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment