டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· மோடி ஆட்சியின் எட்டாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. திறமை மற்றும் வளர்ச்சியின் விகிதங்கள் பற்றி இல்லாமல், அடிப்படைப் பொருளாதார வளர்ச்சி பற்றி இல்லாமல், கவர்ச்சியான பேச்சு மட்டுமே இருக்கும் என மூத்த எழுத்தாளர்
ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.
· டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத் தில் பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை தற் காலிகமாக 18 மாதங்கள் நிறுத்தி வைக்க அரசு தயாரக இருக்கிறது என்றார்.
· காந்தியைக் கொன்ற கோட்சே எனும் பயங்கரவாதியின் வெறுப்பு சித்தாந்தத்தைத்தான் இன்றைய மோடி ஆட்சியும் செய்கிறது என எம்.அய்.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி சாடினார்.
· உ.பி.யைச்
சேர்ந்த ராகேஷ் திகாயத் தலைமையில் விவசாயிகளின் போராட்டம் புது உத்வேகத்தை தந்துள்ளது.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
· இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர்
ஹமீத் அன்சாரி தனது புதிய சுயசரிதையில், "சர்வாதிகாரவாதம், தேசியவாதம் மற்றும் பெரும்பான்மைவாதம்"
2019 தேர்தலில் ஒரு பங்கைக் கொண்டிருந்ததாகவும், "முக்கிய மதிப்புகளைத் தாழ்த்துவது இப்போது நடந்து வருகிறது" என்றும் கூறியுள்ளார்.
· பட்ஜெட்டை எதிர்பார்க்க நான் விரும்பவில்லை. சுகாதார உள்கட்டமைப்பில் முதலீடு அதிகரிப்பதற்கும் பாதுகாப்பு செல வினங்களை அதிகரிப்பதற்கும் உலகளாவிய கோரிக்கை உள்ளது, அந்த கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். நிதி அமைச்சர் இந்த திட்டங்களுக்கும் அதிக நிதியை வழங்கக்கூடும். இல்லையெனில், இந்த அரசாங்கத்தின் மீது எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. கடந்த காலங்களில், அவர்கள் விதிவிலக்காக பிடிவாதமாகவும், நல்ல ஆலோசனையைப் பெறமுடியாதவர்களாகவும் இருந்தனர், அவர் களின் அணுகுமுறை அல்லது நடத்தையில் எந்த மாற்றத்தையும் நான் காணவில்லை என காங்கிரஸ் தலைவர்
ப.சிதம்பரம் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· புதிய விவசாய சட்டங்கள் விவசாயத் துறையின் முது கெலும்பை உடைத்து, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கட்டுப் பாட்டைக் கொடுக்கும். மத்திய அரசு போராட்டத்தை இழிவுபடுத்த முயற்சிப்ப தாகவும் எழுத்தாளர் அருந்ததி ராய் குற்றம் சாட்டினார்.
- குடந்தை
கருணா
31.1.2021
No comments:
Post a Comment