மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 1, 2021

மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்

 

திருவனந்தபுரம். ஜூன.1, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்பதை வலியு றுத்தி, கேரள மாநில சட்டமன் றத்தில் தீர்மானம் நேற்று (31.12.2020) நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை கேரள முதல்வர் பினராயிவிஜயன் கொண்டுவந்து நிறைவேற்றினார்:

இதுபற்றிய விவரம் வருமாறு:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்சட்டங்கள் குறித்து விவாதித்து, அவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரை 25ஆம் தேதி கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந் துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆரிப் முகமதுகான் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.

ஆளுநர் ஆரிப் முகமதுகான் செயலுக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

பின்னர் 2ஆவது முறையாக கேரள அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதனை அடுத்து ஆளுநர் அனுமதி வழங்கினார்.

இந்நிலையில், வேளாண் சட் டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட் டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று (டிச.31) தொடங்கியது. கூட் டம் தொடங்கியதும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர் மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தீர்வு காணப்பட வேண்டும், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.

தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதல்வர், போராட்டம் தொடர்ந்தால் அது கேரளாவை கடுமையாகப் பாதிக்கும் என்பதை தற்போதைய நிலைமை தெளிவு படுத்துகிறது. மற்ற மாநிலங்களி லிருந்து உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டால் கேரளா பட்டினி கிடக்கும் என்பதில் சந்தேகமில்லை, என்றார்.

பின்னர் தீர்மானத்தின்மீது உறுப்பினர்கள் பேசினர். விவாதத் திற்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

No comments:

Post a Comment