திருவாரூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 31, 2021

திருவாரூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன. 31- திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 15 தினங்களாக பெய்த கன மழையினால் அறுவ டைக்கு தயாராக இருந்த விளைச்சல் கள் எல்லாம் வயலிலேயே முளைத் தும், இதர பயிர்களான உளுந்து, பயறு விதைக்க முடியாமல் பெரும் இழப்பு அடைந்த விவசாயிகளின் நிலங்களை பார்வையிடாத அரசு அதிகாரிகளை கண்டித்தும், விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க கோரியும், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரியும், இதற்காக டில்லியிலே நடைபெறுகிற விவசாயிகளின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், திரு வாரூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 20.01.2021 புதன் காலை 10.00 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சோழங்கநல்லூர் தந்தை பெரியார் சிலை அருகே  நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை தாங் கினார்.. மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராஜ், சோழங்கநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம் மாள் செந்தில், ஓடாச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் மதி.நெல்சன் மண் டேலா ஆகியோர் முன்னிலை வகித்த னர். முன்னதாக ஒன்றிய தலைவர் கு.ராஜேந்திரன் அனைவரையும் வர வேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர் சரவணதமிழன், தி.மு. மய்ய கமிட்டி பொறுப்பாளர் தங்கசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் பி.ரெத்தினசாமி ஆகியோர்களின் உரைக்கு பின் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் விவசாயிகளின் தற்போதைய அவல நிலையை கண்டு கொள்ளாமல் இருக்கும் அரசுகளை கண்டித்தும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் பாதகங்களை எடுத்து ரைத்தும்  சிறப்பானதொரு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, மாவட்ட துணை செயலாளர் .வீரையன், திருவாரூர் நகர செயலாளர் கோ.இராமலிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் சரசுவதி மற்றும் சைனம்பூ, அன்னதானம் உள்ளிட்ட மகளிர்கள், ஒன்றிய ..செயலாளர் கவுதமன், குடவாசல் ஒன்றிய தலைவர் என்.ஜெயராமன்,  சூரனூர் மனோ கரன், மணிவண்ணன், நடப்பூர் வீரா சாமி, திருபள்ளிமுக்கூடல் முருகை யன் மற்றும்  ஏராளாமான கழகத் தோழர்களும், இதர விவசாயிகளும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்ட முழக்க மிட்டனர். இறுதியில் ஒன்றிய செய லாளர் சாம்பசிவம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment