சு.அறிவுக்கரசு
குகையை
விட்டு வெளியே போகும் சிங்கம், சிறிது தூரம் செல்லும். நிற்கும். திரும்பிப் பார்க்கும். குகை வாயிலையும் தான் நடந்து வந்த பாதையையும் பார்க்கும். பின், தொடர்ந்து நடைபோடும். இதனை அரிமா நோக்கு என்கிறார்கள் விலங்கியல் அறிஞர்கள். அப்படிப்பட்ட அரிமா நோக்கில், தமிழ்ப் பேசும் திராவிடர்கள் இன்றுள்ள சமூக நிலையைப் பார்க்கலாமா?
1918இல்
சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி. சேலம் கல்லூரியில் ஒரு கடைநிலை ஊழியர் (பியூன்) நியமிக்கப் பட்டார். அவர் ஒரு பஞ்சமர். (ஆதி திராவிடர் என்று நீதிக் கட்சி ஆட்சியில் 1922இல் பெயர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது) எப்படி அவரை நியமிக்கலாம் என்ற எதிர்ப்பு - எதிர்த்த வர்கள் பார்ப்பனர்கள்.
அதுபோலவே,
பார்ப்பனக் குடியிருப்பில், குடிநீர் திறந்துவிடும் பணியாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டதற்கும் பார்ப்பனர் எதிர்ப்பு. குடிநீர்க்குழாய் அமைக்கப்பட்டிருந்த நகராட்சி வார்டில் ‘அவாள்’ அக்ர(ம)காரம் இருந்ததாம்.
அவர்களைப்
பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை. நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம். வாதம், எதிர்வாதம் நடைபெற்றது. இறுதியில் சட்டப்படி வாக் கெடுப்பு. பணி நீக்கம் கூடாது என முடிவு. ஒரே
ஓர் ஓட்டில் முடிவு. பஞ்சமர் பணியாளர்கள் பணி நியமனம் காப்பாற்றப் பட்டது.
அகண்ட
காவேரி ஆறு, வடக்கே முசிறி, தெற்கே குளித் தலை எனும் ஊர்களுக்கிடையே ஓடுகிறது. கலைஞர் காலத்தில்தான் முசிறிக்கும் குளித்தலைக்கும் தொடர்பு ஏற்படுத்தும் பாலம் கட்டப்பட்டது. அதுவரை வட்டப் பரிசலில் ஏறித்தான் பயணம். வண்டிகள் திருச்சி போய், கரூர் சாலையில் பயணிக்க வேண்டும். (வட்டப் பரிசலில் ஏறி நானும் முசிறியிலிருந்து குளித்தலை சென்றேன் 1958இல்).
1918 ஆகஸ்ட்
மாதத்தில் ஒரு நாள் பரிசலில் நான்கைந்து பேர் பயணம். ஒருவர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள். சக பயணியை அடையாளம்
கண்டுபிடித்த பார்ப்பனர்கள், அவரைப் பரிசலிலிருந்து இறக்கிவிடச் சொன்னார்கள். பரந்த ஆற்றின் நடுவே காணப்பட்ட மணல் குன்றில் அவர் இறக்கிவிடப்பட்டார். நான்கு புறமும் சுழித்து ஓடும் ஆற்று வெள்ளத்தில் ஆதரவு அற்ற நிலையில் இறக்கிவிடப் பட்டவர் பறையராம். பரிசல் ஓட்டிமீது நடவடிக்கை எடுக் கப்பட்டு தண்டிக்கப்பட்டார். தண்டித்தவர் பார்ப்பன ரல்லாத சப்மாஜிஸ்திரேட் (தாசில்தார்). மேல் முறையீடு வழக்கை விசாரித்து, விடுதலை செய்துவிட்டார் சப் டிவி ஷனல் மாஜிஸ்திரேட் (கோட்டாட்சியர்), இவர் பார்ப்பனர்.
திருச்சி
மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) கோட்டாட் சியரின் உத்தரவை ரத்து செய்தார். 1950க்குப் பிறகுதான் நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறை பிரிக்கப்பட்டது. ஆளுக் குத் தக்கவாறு நீதி வழங்கப்பட்டது என்பதை அறியலாம்.
ஜாதிச்
சண்டைகள் பெரும்பாலும் கோயில் விழாக் களில்தான் அரங்கேறும். சேலம் மாவட்டத்தில் ஓர் ஊரில் தேர் இழுக்கும் விழா. சில கிலோ எடை உள்ள பொம்மையை 2-3 டன் எடையுள்ள தேரில் வைத்து ஊர்மக்கள் எல் லோரும் கூடி இழுக்கும் நிகழ்ச்சி. இது தேவையற்ற வேலை எனும் சிந்தனை எவருக்கும் எழுவதில்லை, இன்றளவும். தேரைக் கட்டி இழுப்பதைவிட பின்னிருந்து தள்ளுவது சுலபம் என்பதால் அப்பழக்கம் அவ்வூரில் நீண்ட கழியைக் கொண்டு தேரின் பின் சக்கரத்தை உந்தித் தள்ளுவர். ஒரு சக்கரத்தை ஆதி திராவிடர்களும் மற்றொரு சக்கரத்தை பிற்படுத்தப்பட்டோரான கவுண்டர்களும் தள்ளுவது வழக்கம். ஆகும் செலவை இருதரப்பாரும் சமமாக ஏற்க வேண்டுமாம். ஆதி திராவிடர்கள் உரிய பங்குச் செலவுத் தொகையைத் தருவதில்லை என்ற புகாரால் 1924இல் விழா நிறுத்தப்பட்டது. மறு ஆண்டில் விழா நடந்தபோது கலவரம், கல்லெறி, 11.2.1925 இரவு ஆதி திராவிடர்களின் குடிசை வீடுகள் கொளுத்தப்பட்டன. 17 மாடுகளைத் திருடிவிட்டனர். ஒருவர் கொலையே செய்யப்பட்டு விட்டார். வழக்கு, விசாரணை நடந்தது. கடவுள் கலவரத் தைத் தடுக்கவில்லை. மக்களும் விழாவைத் தவிர்க்க வில்லை. “பிணக்கு ஏற்படுத்தும் கடவுளைக் கணக்குத் தீர்ப்பது நம் கடன்” என்றார் புரட்சிக் கவிஞர். எப்பொழுது கணக்கைத் தீர்ப்பது?
தஞ்சை
மாவட்டம் சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டே பெரியாரியக் கொள்கையில் ஊறி வளர்ந்த மாவட்டம். நீதிக்கட்சி காலத்திலும் பெரியாருக்குப் பலவகையிலும் பக்கபலமாக விளங்கிய பகுதி. 1932இல் அம்மாவட்டத்தில் பென்ச் மாஜிஸ்ட்ரேட் ஆக ஆதிதிரா விடர்
ஒருவர் நியமிக்கப்பட்டார். அவருடன் பணியாற்ற வேண்டிய ஜாதி இந்துக்கள் என்போர் பதவிகளை விட்டு விலகினர். ஆதிதிராவிடர் அமர்ந்தால் பென்ச் தீட்டாகி விடுமோ? பார்ப்பனருக்குப் பிற்படுத்தப்பட்டோரும் கீழா னவர்களே! தாழ்த்தப்பட்ட இனத்தவரும் கீழானவர்களே!
படிநிலை
ஜாதி அமைப்பை எவ்வளவு குயுக்தியாக அமைத்துள்ளனர். பார்ப்பனர்கள்!
மோகன்தாஸ்
கரம்சந்த்காந்தி தாழ்த்தப்பட்ட இனத்த வரை அரிஜன் என்று அழைத்தார். அரி என்பது விஷ்ணு எனும் இந்து கடவுள். அதன் மக்கள் என்ற பெயரில் அம்மக்கள் பெருமை அடைவர் என்று அவர் கருதி இருப்பார் போலும். குஜராத்திக் கவிஞர் நார்சிமேத்தா என்பவர் கவிதை ஒன்றில் இச்சொல்லைப் பயன்படுத்தி தேவதாசியின் புத்திரர்களைக் குறிப்பிட்டார். “தேவடியாள் பிள்ளை” என்பது தெரிந்திருந்தும் காந்தியார் பயன்படுத் தினார். 19.4.1933இல் சென்னையில் நடந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர்கள் இச்சொல் கூடாது என்று முடிவு செய்தனர். தேசியர்கள் சொல்லை விரும்பி ஏற்றனர். சூத்திரன் என்ற சொல்லுக்கும் அதே பொருள்தானே! சற்சூத்திரர்கள்
என்றுகூடச் சிலர் தம்மை அழைத்துக் கொண்டனர். நல்ல தேவடியாள் மகன் என்ற அதற்குப் பொருள் என்று பெரியார் தானே கூறினார்?
கோயில்
விழாக்கள் ஜாதி மோதலுக்குக் காரணி என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு. ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்ட இனத் தோருக்கும் இடையே மோதல் இன்றளவும் உள்ளதே! 1933இல் பஞ்சாயத்து நடந்து ஒற்றுமை காணப்பட்ட நிலையில் ஒரு விழாவில் மோதல் ஏற்பட்டது. விழாவுக்கு வந்த ஆதிதிராவிடர்கள் மேல்சட்டை போட்டிருந்ததே மோதலுக்கு வழிவகுத்தது. பிற்படுத்தப்பட்ட நாட்டார் தரப்பு ரவுடிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விழா நிறுத்தப்பட்டது. ஒன்றும் செய்ய இயலாத கடவுள் “ஙே” என்று விழித்துக்கொண்டிருந்ததாம்.
ஆனாலும்
சாமி கும்பிடும்போது “பள்ளர்” எனப் படுவோர் கும்பிடும் சடங்கு முறைகளை ஆட்சேபித்த ஜாதி இந்துக்கள் எனப்படுவோர் பள்ளர்களைத் தாக்கினர். ஒருவர் கொல்லப்பட்டார். அய்வர் படுகாயம் அடைந்தனர். தாக்கியவர்கள் தரப்பிலும் ஆறு பேர்கள் காயம் பட்டனர். என்னதான் கடவுளோ? என்னதான் ஜாதியோ?
எட்டயபுரம்
ஜமீன்தார் “அரிஜன்”களுக்கு இரண்டு சிறிய கோயில்களைத் திறந்து விட்டார். இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தவர் இராஜகோபாலாச்சாரியார். கோயில் களின் கதவுகளை மூடி வைத்து ஆதிதிராவிடர்களை அனுமதிக்காத நிலைக்குக் காரணமான பார்ப்பனர் தலைவரே நிகழ்வின் தலைவர். இதைத்தான் பெரியார் குறிப்பிடுவார், “பலித்தவரை பார்ப்பனியம்“ என்று.
காந்திமதி
உடனுறை நெல்லையப்பன் குடியிருக்கும் திருநெல்வேலியில் உயர்ஜாதியினர் வசிக்கும் தெருக்களில் சாலைப் பணியைச் செய்பவர்கள் ஜாதி இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 1924இல் தந்தை பெரியார் வைக்கத்தில் போராட்டம் நடத்திய நேரத்தில் வந்த கோரிக்கை இது. கோரிக்கை நிறை வேறவில்லை என்றாலும் ஜாதித்திமிர் எந்த அளவுக்கு படமெடுத்து ஆடியது என்பதை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதைப்
போலவே, சித்தூர் மாவட்டத்தில் பஞ்சம மாணவர்களுக்கான அரசுப்பள்ளி தொடங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் சாலையில் நடந்து பள்ளிக்கு வருவதைப் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சித்தூர் சட்டமன்றம் உறுப்பினர் பஞ்சமர்கள் பள்ளியிடத்தில் சாப்பிடக்கூடாது என்று கூறி விட்டார். இவர் பார்ப்பனர். ஆண்டு 1924.
1927இல்
மதுரையில் பார்ப்பனருக்கு என ஒதுக்கப்பட்ட சித்தி
விநாயகன் கோயிலின் உள்ளே போக பார்ப்பனர் அல்லாதார் முயற்சி செய்தனர். பார்ப்பனர் தடுத்தனர். பின்வாங்கிய பார்ப்பனரல்லாதார், மீனாட்சி கோயிலுக்குப் போயினர். பிள்ளையார் கோயிலில் நடந்ததை போன்று பார்ப்பனப் பூசாரிகள் (பட்டர்கள்) கோயிலின் அர்த்த மண்டபம் கடந்து போகும் கதவைப் பூட்டிவிட்டனர். வாய்ச்சண்டை நடந்தது. தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்திப் பூட்டிய கதவுக்கருகில் கும்பிட்டனர்.
மறுநாள்,
நீதிக்கட்சித் தலைவர் ஜே.என்.ராமநாதன்
தலைமையில் கூட்டம் நடந்தது. இரண்டாயிரம் பேர்கள் கலந்து கொண்டனர் என்பது காவல்துறை அறிக்கை, கூடு தலாக மக்கள் கூடியிருப்பார்கள். பட்டர்களின் செயலைக் கண்டித்தனர். மறுவாரமும் பார்ப்பனரல்லாதார் கோயிலின் உள்ளே செல்ல முயன்றனர். பூசாரிகள் தடுத்தனர். இவை நடந்தது 1927 பிப்ரவரியில்.
அதுபோலவே,
1928 ஜூலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் விழாவின் கடைசி நாளன்று ஜே.என்.ராமநாதன்
தலைமையில் மீனவர்கள் கோயிலின் கரு வறைக்குள் நுழைந்து வழிப்படச் சென்றனர். கதவை மூடிவிட்டதால் போக முடியவில்லை.
இவை
நடந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு மதுரை குள்ளநரி வைத்தியநாதன் எனும் பார்ப்பனர் மீனாட்சி கோவிலின் அர்த்தசாம பூஜை எல்லாம் முடிந்து, மீனாட் சியும் சொக்கநாதனும் சோபன அறையில் இருந்தபோது ஆதிதிராவிட, நாடார் இளைஞர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு உள்ளே போனார். பூட்டிய கோயிலை திறந்து உள்ளே விட்டவர் ஆர்.எஸ்.நாயுடு எனும் கோயில் மேலாளர். அவர் நீதிக்கட்சி அனுதாபி. இந்த லட்சணத்தில் ஆலயப் பிரவேசம் செய்த ஆள் என்ற பட்டத்தை வெட்கமில்லாமல் பெற்றவர் வைத்தியநாதய்யர். மதுரை கருஞ்சட்டை மாநாடு 1946இல் நடந்தபோது கைக்கூலித் தமிழர்களைத் தூண்டிவிட்டுப் பந்தலைக் கொளுத்தியதும் இதே ஆள்தான்.
No comments:
Post a Comment