சென்னை, ஜன. 23- இந்தியாவுக்கும், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள 54 நாடு களுக்கும் இடையே நடைபெறும் வர்த்த கத்தின் அளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இயங்கி வரும் சிறப்பு அமைப் பான - இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தகக் கவுன்சிலின் (INDIA AFRICA TRADE COUNCIL) தென்மண்டல அலுவலகம் 21.1.2021 அன்று சென்னையில் தொடங்கப்பட்டது.
தமிழகத்தின்
முன்னணி நிதி ஆலோச கரும், சென்னையில் “கார்ப்ரேட் கிளி னிக் (Corporate Clinic)” என்ற
நிதி ஆலோ சனை நிறுவனத்தை நடத்தி வருபவரு மான, பி.ராமகிருஷ்ணன், இந்தத்
தென் மண்டல அலுவலகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்பிரிக்காவில்
தொழில் புரிய விரும்பும் இந்திய நிறுவனங்கள், இந்தி யாவில் செயல்படும் ஆப்பிரிக்க நிறுவ னங்கள் ஆகியவற்றின் வர்த்தகத்தை அதிகரிக்க தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளில் இந்த அலுவலகம் உறுதுணை புரியும்
இந்த
நிகழ்ச்சியில், இந்திய அரசின் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகளில் ஒருவரும், ஆப்பிரிக்கப் பகுதிக்கான, இந்தியாவின் தூதர் மற்றும் கூடுதல் செயலாளருமான நக்மா மாலிக் மற்றும் இந்தியாவுக்கான எத்தியோப்பியா நாட் டுத் தூதரான முனைவர் திஜிதா முலு கேதா இமாம் ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாகக் கலந்து கொண்டு இந்த அலு வலகத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்த
விழாவில் பங்கேற்ற இந்தியப் பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் முனைவர் ஆஸிஃப் இக்பால் பேசுகையில், “தென்னிந்தியாவின் பல் வேறு சிறப்புப் பொருட்களை, ஆப்பி ரிக்கச் சந்தைகளுக்கு எடுத்துச் சென்று, அந்நாட்டு மக்களைக் கவர விரும்பும் நிறுவனங்களுக்கும், ஆப்பிரிக்க நாடு களில் உள்ள நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற விரும்புவோருக்கும் அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள இந்தக் கவுன்சில் உறுதுணை புரியும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment