பத்திரிகையாளர்கள் கண்டனம்!
சென்னை,
ஜன.2- முதலமைச்சர் எடப் பாடி பழனிச்சாமிக்கு
எதிராக செய்திகள் வெளியிடக் கூடாது என ஊடகங்க
ளை அ.தி.மு.க. சட் டப்பிரிவு
மிரட்டியுள்ளதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர்
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான
ஊழல் பட்டி யலை திமுக
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆதாரங்களுடன் கூறி வருவதை அச்சு
ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.
ஆனால்,
இதை பொறுத்துக் கொள்ள முடியாத அ.தி. மு.க.
சட்டப்பிரிவு அனைத்து அச்சு ஊடகங்கள் மற்றும்
தொலைக் காட்சி செய்தி ஆசிரியர்களுக்கு
நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான
செய்திகளை வெளியிடக்கூடாது என்று கூறப் பட்டுள்ளது.
ஊடகங்களை மிரட் டும் வகையில்
அ.தி.மு.க.
சட்டப் பிரிவு அனுப்பியுள்ள இந்த
நோட் டீசுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மூத்த பத்திரி கையாளர்
லட்சுமி சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில்
வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து அச்சு மற்றும் தொலைக்காட்சி
ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு வழக்கத்துக்கு மாறாக அ.தி.மு.க. சட்டப்பிரிவு
மிரட்டும் வகையில் நோட் டீஸ் அனுப்பியுள்ளதற்கு
கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அ.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு
அனைத்து ஊடக நிறுவனங்களுக் கும்
எதிராக சட்ட நடவ டிக்கை
எடுக்க அச்சுறுத் தும் வகையில் உள்ளதாகவும்
மூத்த பத்திரிகை யாளர் லட்சுமி சுப்பிரமணியன்
தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment