பொது மக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்
புதுடில்லி,
ஜன.2 வேளாண் சட் டங்களுக்கு
எதிராகப் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும் வெளிநாட்டு கைக்கூலிகள் என்றும் மத்திய அமைச்சர்கள் துவங்கி,
பாஜகவின் உள்ளூர் தலை வர்கள் வரை
கொச்சைப்படுத்தி வருவதற்கு எதிர்க்கட்சித் தலை வர்கள் கடும்
கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
“விவசாய
சட்டங்களை ஆதரிக் கின்ற தலைவர்களை
உங்கள் கிரா மங்களுக்குள் நுழைய
விடாதீர்கள். விவசாயிகளின் உணர்வுகளை, வாழ்வாதாரப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவோரை புறக் கணிப்பு செய்யுங்கள்”
என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்
கோவிந்த் சவுத்ரி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல
காங்கிரஸ் கட் சியைச் சேர்ந்த
பஞ்சாப் முதல் வர்அம்ரீந்தர் சிங்,
சிரோமணி அகாலிதளத்தின் விவசாயிகள் பிரிவுதலைவர் சிகந்தர் சிங் ஆகி யோரும்
பாஜக பிரச்சாரத்தைக் கண்டித்துள்ளனர்.
“டில்லியில்
போராடுவது பஞ்சாப் விவசாயிகள் மட்டும் அல்ல. பாஜக ஆளும்
ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களின் விவசாயிகளும்
போராட்டக்களத்தில் இருக்கின்றனர். இவர்கள் அனை வருமே நக்சல்கள்
எனில் நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்
சட்டம் - ஒழுங்கு அந்த அளவிற்கு மோசமாக
இருக்கிறது என்று அர்த்தம்” என்று
பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், பாஜகவைச் சாடி
யுள்ளார்.“உழைத்து வாழும் விவசாயிகள் மீது
எளிதாக ஏதேனும் ஒரு முத்திரை குத்திவிட்டுப்
போகும் போக்கை, பாஜக கைவிட வேண்
டும்; இல்லாவிட்டால், விவசாயி களைக் கொச்சைப்படுத்தும் தலைவர்களுக்கு
எதிராக போராட் டங்கள் நடத்தப்படும்''
என்று அகாலிதளம் தலைவர் சிகந்தர் சிங்கும்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment