விவசாய கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 31, 2021

விவசாய கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச திட்டங்கள்

வேலூரில் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் உரை

வேலூர்,ஜன.31-  தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின்உங்கள் தொகுதியில் ஸ்டாலின்என்ற தனது பிரச்சாரப் பயணத்தை திருவண்ணா மலையில் நேற்று முன்தினம் தொடங்கினார்.

2ஆவது நாளாக நேற்று (30.1.2021) காலை 10 மணி யளவில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கந்தனேரியில் நடந்தஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் .பி.நந்த குமார்  தலைமை தாங்கினார். மக்களிடம் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டு பேசிய தாவது:-

கடந்த 10 ஆண்டுகால .தி.மு.. ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அமையும் ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தர கடமைப் பட்டுள் ளேன். கொடுத்த வாக்குறுதி களை நிறை வேற்றுவதில் தி.மு.. என்றுமே பின் தங்கிய தில்லை. விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொன்னார்.  அதேபோல் கோட்டைக்கு செல்லும் முன்பே ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை ரத்து செய்தார். 'கலர் டி.வி.' வழங் குவதாக கூறினார். அதையும் வழங் கினார். மிகபிற்படுத்தப்பட்டோ ருக்கான தனி இடஒதுக்கீட்டையும் மத்திய அரசிடம் பேசி வழங்கினார். அந்த வகையில் கொடுத்த வாக் குறுதிகளை நிறைவேற்றுவோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நான் கொடுத்த வாக்குறு திகளை மறக்கவில்லை. விவசாய கடன், நகைக்கடன், கல்விக்கடன் ஆகியவற்றை தி.மு.. ஆட்சி பொறுப் பேற்றவுடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த கடன் தள்ளுபடியால் அர சாங்கம் கடனில் மூழ்கிவிடும் என்கிறார்கள்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகைகள் கொடுக்கும்போது மூழ் காதது,  அப்பாவி மக்களுக்கு கடன் ரத்து செய்வதால் மூழ்கிவிடுமா? கடன்களை ரத்து செய்வதன் மூலம் அவர்களது வாழ்க்கையை மேம் படுத்த முடியும். இலவச திட்டங்கள் என்பது கவர்ச்சி திட்டங்கள் அல்ல, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம் படுத்தும் திட்டங்களாகும்.  இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment