அரசியல் புரோக்கரான குருமூர்த்தி ‘துக்ளக்'கில் (6.1.2021, பக்கம் 7) எழுதுகிறார்.
‘‘ரஜினியின்
கட்சி- பா.ஜ.க.
- பா.ம.க. - அ.தி.மு.க.வில் இருந்து விலகி வருவோர் - த.மா.கா.
- புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அணி சேர்ந்து, தி.மு.க.வுக்குப் பலத்த போட்டியை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை'' என்று அரசியல் புரோக்கர் எழுதியுள்ளார்.
‘கண்ணிவெடி
என்னவென்று புரிகிறதா? குருமூர்த்தி பேசுகிறார் என்றால், பா.ஜ.க.
பேசுகிறது' என்று பொருள்.
ரஜினி
ஆரம்பிக்கும் கட்சிக்கு வரக்கூடியவர்கள் யாராம்? அ.தி.மு.க.விலிருந்து விலகி
வருவோராம் - ஆக, அ.தி.மு.க.வை உடைக்கும்
திரைமறைவு திட்டத்தை எப்படியோ போட்டு உடைத்துவிட்டார்!
ஆரியம்
என்றாலே வஞ்சகமும், சூழ்ச்சியும், திரைமறைவும் கொண்டதுதானே!
ரஜினி
கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்ற தகவல் வந்தவுடனேயே அவசர அவசரமாக ‘‘வராவிட்டால் என்ன? வாய்ஸ் கொடுப்பார்!'' என்று டுவிட்டரில் பதிந்தவரும் சாட்சாத் இவரே!
‘‘நந்தவனத்தில்
ஓர் ஆண்டி - அவன்
நாலாறு
மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு
வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக்
கூத்தாடிப்
போட்டுடைத்தாண்டி'' என்ற
நிலைதானே நடிகரின் நிலை கடைசியில்!
No comments:
Post a Comment