கேள்வி.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது பலன் அளிக்குமா?
- வேல்முருகன், வில்லிவாக்கம்.
பதில்: பலன்
அளிக்காது என்பது நேற்று (22.1.2021) வரை 11 முறை நடந்த பேச்சுவார்த்தைகளின் தோல்வியே தெளிவாக உலகத்திற்குப் பறை சாற்றுகிறதே!
கேள்வி: மராத்தி
மொழியின் முன்னணி
எழுத்தாளர்களில் ஒருவரான யஸ்வந்த் மனோகர் அவர்களை திராவிடர் கழகம் பயன்படுத்திக் கொண்டு அவர் வாயிலாக அம்மாநிலத்தில் தந்தை பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முயலுமா?
- மல்லிகா, மாங்காடு
பதில்:
தங்கள் கேள்வியை நமது மராத்திய மாநில பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தவர்கள், பெரியாரிஸ்டுகளாக உள்ள நம் கொள்கை உறவுகளுக்கு முன் வைக்கிறோம். இந்த நல்ல வாய்ப்பினை அவர்கள் நழுவவிடக் கூடாது!
கேள்வி: அரை
நூற்றாண்டுகாலமாக தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் பதவியிலிருந்தும் தந்தைபெரியாரின் அறிவியல், சமூக நீதி சிந்தனை களைக் கொண்ட கல்விமுறை உருவாகாமல், மதவாதிகளின் சிந்தனை அடிப்படையில் கல்வித் திட்டத்தை வைத்திருப்பது சரியா?
- சீர்காழி
இராமண்ணா
பதில்:
கலைஞர் காலத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் வந்ததுபோல, வரும் ஆட்சிக் காலத்தில் கல்வியில் பெரும் சீர்த்திருத்தங்கள் செய்ய முனையலாம். எல்லாவற்றிற்கும் அடிப்படையாக முதலில் செய்ய வேண்டியது, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டிய லுக்கு மாற்றுவதுதான். அது முதல் தேவை; அதன் பிறகே மற்ற மாற்றங்களுக்கு கதவு திறக்க வாய்ப்பு உண்டு. சில காலம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
கேள்வி:
மராட்டியக் கவிஞர் யஷ்வந்த் மனோகர் சரஸ்வதி பூஜை விழாவின்பேரில் தனக்கு கொடுக் கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை புறக் கணித்ததுடன், சரஸ்வதி படத்திற்குப் பதிலாக ஆசிரியர் சாவித்ரி பூலே படம் வைக்க வலியுறுத்துவது பற்றிய தங்கள் கருத்து?
-செல்வம், பஹ்ரைன்
பதில்:
நாம் அவரை அழைத்து வரும் ஆண்டில் பெரியார் விருது கொடுப்போம். அதன்மூலம் அவர் பெரியார் பணி பற்றி அறிய வாய்ப்பு ஏற்படுத்துவோம். நூல்களை அனுப்பியும், மராத்திய நண்பர்கள் மூலமும் தொடர்பு கொள்வோம். இவர் கொள்கைத் தெளிவுள்ள பகுத்தறிவுவாதி.
கேள்வி:
புதுவையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அரசு பள்ளி மாணவர்களுக் கான உள்ஒதுக்கீட்டை தர மத்திய அரசு
மறுப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள இடஒதுக்கீடு தங்களுக்கு தெரியாது என்று கூறியிருப்பது பற்றி?
- அயன்ஸ்டின்
விஜய், சோழங்குறிச்சி
பதில்:
சட்டம் - தீர்ப்பு - இவைகளைத் தெரியாது என்று தனி மனிதர் கூட கூறக்கூடாது.
‘Ignorance of law is no excuse?’ என்பது சட்டவிதி!
அப்படி
இருக்கும் போது இப்படி ‘அறியாமையில்’ இருந்தால், ஆளுமை, மத்திய ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதைக் கண்டு உலகம் கைகொட்டி நகைக்காதா?
கேள்வி:
பொங்கலை மகா சங்கராந்தியாக இந்துக்கள் பண்டிகையாக மாற்ற முயலும் நிலையில், தமிழ்நாட்டில் கிருத்துவ, இஸ்லாமிய மதத்தினர் சமுதாய விழாவாக கொண்டாடுவது தந்தை பெரியார் விதைத்த கருத்துகளால்தானே?
- த.மரகதமணி, வியாசர்பாடி.
பதில்:
அதிலென்ன சந்தேகம்? திராவிடர் இயக்கம் குறிப்பாக சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் இவர்களால் தானே - தி.க.வும்,
தி.மு.க.வும்,
ம.தி.மு.க.வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் போன்றவை இல்லையெனில் இன்று இவ்வளவு பெரும் அளவுக்குக் கொண்டாடப்படுமா? விழா என்றால் அது பொங்கல் விழா - உழவர் திருவிழா தானே நம் மக்களுக்கு, இதை மக்களிடம் போய்க் கேளுங்கள் - இதே பதிலைத்தான் கூறுவார்கள்.
கேள்வி:
அண்மைகாலமாக பாஜக கட்சியில் சேர்பவர்கள் அனைவருமே திருட்டு, போதைப் பொருள் கடத்தல், கொலை, பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களாகவே உள்ளனரே!- விளைவு என்னவாக இருக்கும்?
-ஆ.சே.அந்தோனிராஜ், தென்காசி
பதில்:
விடுதலையில்
22.1.2021 அன்று இது பற்றி விளக்கமாக எழுதியுள்ள அறிக்கையை காண்க. வளருது! வளருது! - இப்படி வளருது! இதுபற்றி அக்கட்சித் தலைமை வெட்கப்படுவதாகவோ, தடுத்து நிறுத்துவதாகவோ தெரியவில்லை!
பரிதாபம்!
பரிதாபம்!!
கேள்வி:
சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்திய பதிவுகள் மீது காவல்துறை நட வடிக்கை எடுக்காமல்
பெண்களுக்கு அறிவுரை கூறும் விதத்தில் நடந்துகொள்கிறதே?
- திராவிட
விஷ்ணு, வீராக்கன்
பதில்:
இழிவுபடுத்துகிறவர்களை
விட இவர்கள் மோசமானவர்களாக நடந்து கொள்வது மிகவும் வேதனையாகும்!
கேள்வி:
மத்திய அரசின் தமிழர் நலனுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எவ்வளவுதான் ஒத்துழைப்பு கொடுத்தாலும், இவர்கள் கேட்கும் நிதியில் 10 சதவீதம் கூட மத்திய அரசு தருவதில்லையே - ஏன்?
- ச.இன்பதாமரை, உல்லியக்குடி
பதில்:
எனக்கு, உங்களுக்கு இருக்கும் உணர்வு நம் முதல்வருக்கோ, துணை முதல்வருக்கோ இல்லையே!
உதைத்த
காலுக்கு முத்தம் கொடுப்பது போன்று நடந்து கொள்கிறார்களே!
காரணம்,
வெளிப்படை! விளக்கவா
வேண்டும்?
தமிழ்
மக்கள் வரும் தேர்தலில் சரியான பாடம் கற்பிப்பதை தவிர வேறு வழியில்லை!
No comments:
Post a Comment