காந்தியார் மறைவுபற்றி தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 23, 2021

காந்தியார் மறைவுபற்றி தந்தை பெரியார்

இன்று இந்த ஸ்தானத்தில் இருக்கும் நான் முதலாவதாகப் பேசவேண்டியது காந்தியாரின் மறைவுபற்றி - கொலை பற்றி பேசவேண்டியது, சம்பிரதாயப்படி மாத் திரம் அல்லாமல் உண்மைப்படியும், கட மைப்படியும் பேச வேண்டியதாகும். காந்தியார் மறைவு திராவிட நாட்டுக்கும், திராவிட மக்களுக்கும் மகத்தான நட்டமும், மாபெரும் ஏமாற்றமடையத்தக்க வாய்ப்பு மாகும். காந்தியார் கொலை திராவிட மக்க ளின் எல்லையற்ற ஆத்திரமும், இரத்தக் கொதிப்பும், திடுக்கிடும்படியான விறுவிறுப் பையும் கொள்ளத்தக்க காரியமாகும். இதைச் சொல்லுகிறபோது என் மனம் பதைக்கிறது; கை நடுங்குகிறது; நா வறட்சியடைகிறது; இதயம் துடிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரை எப்படித்தான் கொல்ல, இப்படிப்பட்ட ஒரு பார்ப்பனனுக்கு எண்ணம் வந்தது, கை வந்தது என்பதை நினைத்தால் இராமாயணக் கதையில் வரும் ஒரு இடம்தான் சற்று அதை விளக்குகிறது.

அதாவது, சம்புகன் என்ற ஒரு சூத்திரன் பிரார்த்தனை (தபஸ்) செய்ததற்காகசூத்திர னுக்குத் தபசு செய்ய உரிமை இல்லைஎன்கின்ற காரணங் கற்பித்து பார்ப்பனர் களின் தூண்டுதலின்மேல் இராமன் என் கின்ற ஒரு ஆரியனால் கண்டதுண்டமாக் கப்பட்டான் என்கின்ற இடம் தான் இக் கொலையின் காரணத்துக்குச் சிறிது விளக் கத்திற்குரிய தாகிறது. ஆகவே, காந்தியார் கொலையானது, ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு புதிய சம்பவமல்ல என்பதும்; இது ஆரியர்-சூத்திரர் (திராவிடர்), அல்லது ஆரியர்-ஆரிய ரல்லாதவர் என்கின்ற இனப் போராட்ட முறை என்றும் , அதுவும் இந்துமதப் புராணத் தத்துவங்களைப் பி ன்பற்றியதுதான் என்றும் நிச்சயிக்க வேண் டியதாகிறது. காந்தியார் சம்புக இனத்தா ராகவும், கொன்றவன் இராமன் இனத்தா னாகவும்இருந்ததுதான் இக் கொலைக்குக் காரணமே ஒழிய-மற்றபடி தனிப்பட்ட மக்கள் மீதோ, தனிப்பட்ட குணங்கள் மீதோ குறைகூறுவது பொருத்தமற்றதாகும்.

காந்தியார் மறைவை - நான் ஏன் திரா விட நாட்டுக்கு, திராவிட மக்களுக்கு எல் லை யற்ற நட்டம் என்று சொல்லுகிறேன்? இப்படிச் சொல்லுவதன் மூலம் ஏதாவது இலாபம், நலம் அடையலாமென்கிற சமயோசித புத்தியாலா? இல்லவே இல்லை! ஒருக்காலும் இல்லை! இப்போது இப்படிச் சொல்லுவதால் எனக்கோ, நம் கழகத் துக்கோ எவ்வித நன்மையும் ஏற்படாது; நம்மவர்களிலேயே சிலர் என்னை வெறுக்கக்கூடும்; மற்றும். ஒரு கூட்டத்தார், அதுவும் செல்வாக்குள்ள ஒரு கூட்டத் தாரின் வெறுப்புக்குத்தான் நான் ஆளாக நேரிடும். பின்னே ஏன் சொல்லுகின்றேன் என்றால், என்னைப் போலவே காந்தியா ரும் தாம் ஒரு சூத்திரன்என்பதை நன்றாய் உணர்ந்து கொண்டார்; இந்து மதம் திருத்தமுடியாதது என்பதயும் உணர்ந்து கொண்டார். இந்தியா, இந்தியர், இந்து மதம் என்பதாக ஒன்றும் இல்லை என்றும்; சிந்து நதியால் இந்தப் பெயர் ஏற்பட்ட தென்றம், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குக் கேடாக இருப்பது மத உணர்ச்சியே என்றும்; தீண் டாமை, அரிசன் என்பது இந்துமத உணர்ச்சி உள்ளவரை மாற்றமடைய முடியாதது என் றும், ஒரே கடவுள் தான் உண்டு-அதுதான் அல்லா, ‘காட், (God) ராம் என்றும்; குரான் இந்துக்கள் படிப்பதற்குரியதென்றும், அதைப் பாராயணம் செய்ய வேண்டு மென்றும்; இந்துக்கள் முஸ்லிம்களுக்கு மிக்க தீங்கு இழைத்து விட்டார்கள் என்றும்; அவற்றைப் பரிகரிக்காமல் மேலால் ஒரு காரியம் செய்யத் தன்னால் அனுமதிக்க முடியாதென்றும் பச்சையாகக் கூற ஆரம் பித்து விட்டார்.

பார்ப்பனர்களின் உண்மையான தன்மையை நன்றாய் அறிந்து கொண்டார், தன் பெயரைச் சொல்லிப் பதவிக்கு வந்த வர்களையும், அவர்களின் அக்கிரமங் களை, கொள்கையை , ஒழுக்க ஈனமான- நாணய ஈனமான காரியங்களையும் நன் றாய்த் தெரிந்துகொண்டார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தான் பல தவறுகள் செய்து விட்டதாகவும், அவற்றிற் குப் பரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம் என்றும் கருதிப் பரிகாரத்தில் பிரவேசித்தார். அப் பரிகாரமானது அவரால் நடைபெற்றே தீரும். அப்பொழுது திராவிடர் கழகக் கொள்கையும், திட்டமும் தான் இந்தியா முழுவதற்கும் ஏற்பட வேண்டியதாகும். நமக்கும் சட்டப்படி, சாஸ்திரப்படி, மதப்படி- சூத்திரப் பட்டம் ஒழியும்; நம் நாடும் பிரிந்து நமக்குக் கிடைக் கும்; இதில் சந்தேகமில்லை. காந்தியார் திடீரென்று தமது பழைய கருத்துக்களி லிருந்து இப்படித் திரும்பியதற்குக் காரணம், பார்ப்பனர் தன்மையும். தனது முக்கிய சிஷ்யர்கள் யோக்கியதையும் அவருக்கு நன்றாய் விளங்கிவிட்டதுதான்.

அன்றியும், இந்துக்கள் யாவரும் குரான் படியுங்கள்என்றதிலிருந்தும், தானும் குரான் படித்துக்கொண்டுராம்--ரஹீம்‘ (அல்லாஹ்) பஜனை செய்ததிலிருந்தும், மற்றவர்களையும் செய்யச் செய்ததிலி ருந்தும் - ஜாதிமத சம்பந்தமாக அவர் அடைந்த  மாற்றத்திற்கு அளவு காட்ட வேண்டுமா என்று கேட்கிறேன்.

தவிரவும், காந்தியார், விக்கிரக ஆரா தனைக்கு மாத்திரம் குறை சொல்லாமல், கடவுள் என்பதை மனித உருவாக, வஸ் துவாக, ஒரு தனிப் பொருளாகக் கற்பித்துக் கொண்டு இருக்கிறவர்களுக்குப் படும்படி யாக, ‘எனக்கு, கடவுள் ஒரு வஸ்துவாக - தனிப்பட்ட பண்டமாக இருக்கிறது என்ப தில் நம்பிக்கையில்லை (‘I have no belief in personal God’) என்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சொல்லிவிட்டார். அதாவது, கடவுள் என்பதை நான் ஒரு செயலாக, சக்தியாகக் கருதுகிறேனே ஒழிய, ஒரு மனிதன் செய்கை போலவோ ஒரு ஜீவன் செய்கை போலவோ கருத வில்லை என்பதாகச் சொல்லிவிட்டார். இதற்கு, இயற்கை நடப்புதான் கடவுள்என்பது பொருளாகும். இந்த எண்ணம் அணு அளவாவது மக்களுக்குள் வருமே யானால் கோவில், விக்கிரகம், உண்டக் கட்டி, படையல்; அவைகளுக்குக் கலியா ணம், உற்சவம் முதலியதான வழிகளில் பார்ப்பனர் பணம் பறிக்கும் தந்திரமும், சோம்பேறி வாழ்வும் அடியோடு நின்று விடும் ; அப்புறம்மேல் உலக - கீழ் உலகப் பித்தலாட்டங்களும், அவற்றால் பார்ப்பனர் களுக்கு ஏற்படும் கொள்ளை வருவாய் களும் ஒழிந்துவிடும். சுருக்கமாகச் சொன் னால், பார்ப்பனீயமே பட்டு அழிந்துவிடும். ஆகவே, நமக்கு மாத்திரம் அல்லாமல்இந்திய நாடுமுழுவதுமே சமய, சமுதாயத் துறையில் ஏற்பட இருந்த புரட்சிகரமான அனேக மாறுதல்கள் தான் காந்தியார் பார்ப்பனரால் கொலை செய்யப்பட நேர்ந்ததற்குக் காரணம். அப்படிப்பட்ட மாறுதலை விரும்பும் நாம் அதற்காக மிகமிகத் துக்கமும் துயரமும் அடைகிறோம்.

(தூத்துக்குடியில், 8, 9-5-1948இல் நடந்த 18 வது மாகாண தி.. மாநாட்டில் தலைமை உரை - ‘குடி அரசு’ 15-5-1948)

No comments:

Post a Comment