இந்த
சீனிவாசய்யங்கார் பக்தவத்சலத்தை, "அடேய் பக்தவத்சலம்" என்றுதானே கூப்பிட்டுக்கிட்டிருக்கிறார்!
இந்தக் காமராசரை சத்திய மூர்த்தி அய்யர் "டேய் காமராஜ்” என்றுதானே கூப்பிட்டுக் கொண்டிருந்தான். நம் இயக்கம் தோன்றி இந்த 40 வருடமாகத் தொண்டாற்றாமல் இருந்தால், இன்றைக்கும் பார்ப்பான் தானே ஆதிக்கத்திலிருப்பான்.
அவன்
தானே ஆட்சியிலிருந்து கொண்டிருப்பான். நம்முடைய பிரச்சாரத்தால் மக்கள் உண்மையை உணர முடிந்தது. அவன் மட்டும் எதற்காகப் பார்ப்பானாக இருக்க வேண்டும். நாம் ஏன் சூத்திரனாக, நாலாஞ் சாதிக்காரனாக இருக்க வேண்டுமென்கிற எண்ணம் நம் மக்களுக்கு ஏற்பட்டு, பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி வளர ஆரம்பித்தபின் தான் பார்ப்பானின் ஆதிக்கம் ஒழிந்தது. அவனாகத் தனியே எந்தக் காரியமும் செய்ய முடியாமல் போனதோடு, எந்தப் பார்ப்பானும் தேர்தலில் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறமுடியாமலும் போய்விட்டது.
நாங்கள்
இருந்ததனாலே பார்ப்பான் தயவு எங்களுக்குத் தேவையில்லை என்று அண்ணாதுரையாலே சொல்ல முடிந்தது. இல்லாவிட்டால் ஆட்டி விட்டுவிடுவானே பார்ப்பான். நம் ஆதரவு அவர்களுக்கு இருப்பதால் பயப்படுகின்றான்.
-12.6.1968 அன்று
பெரம்பூர் செம்பியத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு “விடுதலை “. 29.6.1968.
இராமலிங்க
சுவாமி (1823 - 1874)
வடலூர்
வள்ளலார் என்றழைக்கப்படும் இவர் சிதம்பரம் வட்டம் மருதூரில் 5.10.1823இல் பிறந்தார். பெற்றோர் இராமய்யாப்பிள்ளை - சின்னம்மை. இளமையிலேயே சென்னைக்குக் குடும்பம் குடி பெயர்ந்தது. தீவிர இறை நம்பிக்கையாளராக கந்தன் முதலிய தெய்வங்கள் மீது நிறைய பாடல்கள் இயற்றினார்.
சமய
ஒற்றுமை, சன்மார்க்கம் போன்ற கொள்கைகளைப் பரப்ப வடலூர் வந்து சன்மார்க்க சங்கம், சத்திய தருமசாலை போன்றவற்றை நிறுவினார். 1865க்குப் பின்னர் இவர் பாடிய ஆறாந்திருமுறை வேதம், சாத்திரம், ஜாதி, கோத்திரம், உருவ வணக்கம் இவற்றைக் கண்டனம் செய்வதாகும். மேட்டுக்குப்பம் என்னும் இடத்தில் 1874ஆம் ஆண்டில் சித்தி அடைந்தாரென்பர். தந்தை பெரியார் இவரைப் போற்றியுள்ளார். தமிழ்நாட்டில் வேத மத மூடநம்பிக்கையை எதிர்த்தவர்களுள்
முதலாமவர் எனக் கொள்ளத்தக்கவர். இவருடைய காலத்தில் வாழ்ந்த அத்திப்பாக்கம் அ.வேங்கடாசல நாயக்கர்
(1799 - 1897) மூடநம்பிக்கைக்கு
எதிராக 1873இல் எழுதத் தொடங்கினார்.
வள்ளலார்
அவர்களின் கருத்துகள் தந்தை பெரியார் கருத்துகளோடு இணைந்த வைகளாக வள்ளலாரின் சிந்தனைகள் பல அமைந்ததால் ‘வடலூரும்
ஈரோடும்‘ என்ற நூலினை வெளியிட்டார் திருக்குறளார் வீ.முனுசாமி அவர்கள்.
- மதத்தால்
மனிதருக்குள் குடி புகுந்திருக்கும் வெறி
சமூக நல்வாழ்வு
நெறிக்கு எதிரானது என்பதை வலியுறுத்திய
வள்ளளார்
நினைவு நாள் 30.01.1874.
ஞானியார்
சுவாமிகள் (1873 -
1942) நினைவு நாள்
இயற்பெயர்
- பழநியாண்டி, ஞானியாரடிகள், சிவசண் முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் என்னும் பெயரினர். மதுரை பாண்டித்துரைத் தேவர் 1901இல் நான்காவது தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவிப்பதற்கும், சென்னையில் சைவ சமாஜத்தைத் தோற்றுவித்துப்பல நூல்களையும் புராணங் களையும் செம்பதிப்பாக வெளியிடவும் வழிகண்டார்.
திருவையாற்றில்
அப்போது இருந்த அரசர் கல்லூரி வடமொழிக் கல்லூரியாக மட்டும் இன்றித் தமிழ்க் கல்லூரியாக விளங்கிட, உமா மகேசுவரம் பிள்ளை ஏ.டி. பன்னீர்செல்வம்
ஆகியோரின் வழியாக முயன்றார். 2.5.1925இல் தந்தை பெரியார் தொடங்கிய ‘குடி அரசு’ ஏட்டின் அலுவலகத்தை தொடங்கி வைத்தார். தமிழ்மொழி, தமிழஇன, சைவ சமய மேன்மைக்குப் பாடுபட்டவர். இவர் காலத்தில் நிகழ்ந்த பெரும்பாலான இலக்கிய - சமய விழாக்களை இவர் தலைமை ஏற்று நடத்தியுள்ளார். பல நூல்களை இயற்றியுள்ளார்.
இவர் 52 ஆண்டுக்காலம் திருப்பாதிரிப் புலியூர் மடத்துத் தலைவராக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவர். தமிழும் சைவமும் தழைக்கப் பாடுபட்டவர். தந்தை பெரியார் இவரைப் பெரிதும் மதித்தார்.
அவரது
(நினைவு நாளில் (31.1.1942) நினைவு கூருவோம்.
No comments:
Post a Comment