பீகார்,
உத்தரப்பிரதேச மாநிலங்களில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு 20 முதல் 30 ஆயிரம் மக்கள் வரை பித்தநீர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மும்பையில் டாடா நினைவு மருத்துவமனையில் பித்த நீர்ப்பை நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலோர் பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கங்கை நதிக்கரை ஓரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கங்கையில்
நச்சுக்கலவைக் கழிவுநீர் அதிகம் கலப்பதால் கங்கை நதிக்கரையில் உள்ள நிலத்தடி நீரும் கடுமையாக மாசுபட்டுள்ளது. அந்த நிலத்தடி நீரில் அளவுக்கு அதிகமான இரும்புச் சத்தும் நச்சுப் பொருள்களும் மலிந்துள்ளன என்று அந்த ஆய் வறிக்கை கூறுகிறது. மற்றொரு அருவருக்கத்தக்க தகவலும் உண்டு. அண்மையில் சுவிட்சர்லாந்து அரசு ஓர் ஆய்வு நடத்தி உலக சுகாதார நிறுவனத்திடம் சமர்ப்பித்தது. அதில், அய்ரோப்பிய நாடுகளில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு கடுமையான தடைவிதிக்கப்பட்டிருப்பதால்,
ஆன்மீகப் பயணம் என்ற பெயரில் பல அய்ரோப்பிய இளைஞர்
இளைஞிகள் வட இந்திய நகரங்களான
வாரணாசி, அரித்துவார், ரிஷிகேஸ், அலகாபாத் போன்ற நகரங் களுக்கு வந்து; கடவுளின் பிரசாதம் என்று கருதப்படும் கஞ்சா உடன் அபின், ஹெராயின் மற்றும் சரஸ் போன்ற போதை வஸ்துக்கள், ஊசிகள் தங்குதடையின்றி சாமியார் மடங்களில் கிடைக்கின்றன. போதை ஏறிய பிறகு பாதுகாப்பற்ற உறவு கொள்கிறார்கள். இதனால் புனித கங்கை ஓடும் பகுதிகளில் வாழ்வோரிடையே ‘எய்ட்ஸ்’ நோய் தொற்றியவர்கள் எண்ணிக்கை அதிகம்.
No comments:
Post a Comment