மாநில உரிமைகளைப் பறிக்கும் பிரதமருக்கு பதிலடி கொடுத்த ஜார்க்கண்ட் முதல்வர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 2, 2021

மாநில உரிமைகளைப் பறிக்கும் பிரதமருக்கு பதிலடி கொடுத்த ஜார்க்கண்ட் முதல்வர்

ராய்பூர், ஜன.2 ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா' என்னும் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மாற்றாக கிசான் பசல் ராகத் யோஜனா(விவசாயிகள் பாது காப்புக் காப்பீடு) என்ற பெயரில் புதிய திட்டத்தை ஜார்க்கண்ட் மாநில அரசு கொண்டுவந்துள்ளது.

பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத் திட்டம்)  என்ற பெயரில் நடைமுறையில் இருந்ததேசிய விவசாய காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து அதில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து நேரடி யாக விவசாயிகளுக்கு காப்பீட்டு பயன் அளிக்கும் விதத்தில் மாற்றப்பட்டது.

 இதன் மூலம் பல கோடி ஊழல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது, மத்திய அரசு தேசிய விவசாயிகள் காப்பீட்டு திட்டத் தில் மாநில அரசின் ஆலோசனைகளைச் சேர்க்கவேண்டும் என்று மாநில முதல் வர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதை மோடி அலட்சியம் செய்தார். இதன் விளைவாக தமிழகத்தில் மட்டும் 65 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. விவசாயிகள் இல்லாதவர்கள், பாஜக கட்சியினர் என பலரது வங்கிக் கணக்கில் கோடிக்கண ரூபாய்கள் செலுத்தப்பட் டது. இந்த ஊழல் கண்டறியப்பட்டு தற்போது விசாரணை நடந்துகொண்டு வருகிறது. இதே போல் வட இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த காப்பீடு திட்டத்தில் பெரும் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் உண் மையான விவசாயிகள் பலனடையவில்லை என்று விவசாயிகள் போராட்டத்தில் இந்த ஊழலும் முக்கியமான விவாதப் பொருளாக உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ்- ஜார்க் கண்ட் முக்திமோர்ச்சா கூட்டணி ஆட்சி நடத்தும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் மத்திய அரசின்பிரதான் மந்திரி பசல் பீமா யோஜானா' திட்டத்திற்கு மாற்றாக, ‘பசல் ரகத் யோஜனா' எனும் புதிய பயிர் காப்பீடு திட்டத்தை மாநில திட்டமாக அறிவித்துள்ளார். இந்த திட்டம்  2020 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த  மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இந்தத் திட்டம் நிலமுள்ள மற்றும் நிலமற்ற விவசாயிகள் அனைவருக்கும் பொருந்தும். மேலும் இந்த திட்டமானது மாநில விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது.

ஏற்கெனவே உள்ள திட்டத்தில் காப் பீடு செய்யும் போது, விவசாயிகளுக்கான ஈட்டுத்தொகை சரிவரக் கிடைக்கவில்லை என்றும், மேலும் 2018- -  2019 ஆம் ஆண்டில் மட்டும் 12.936 இலட்சம் விண்ணப்பங்கள் காப்பீடு செய்யப்பட்டு, அதில் 0. 577 இலட்சம் விண்ணப்பதாரர் களுக்கு மட்டுமே காப்பீடு தொகை வழங்கப்பட்டது.

இதன் காரணமாக, மாநில அரசு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி யுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தை மாநில அரசே ஏற்று விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் மோடியின் திட்டத்திற்கு மாற்றாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு இதன் பயனை மாநில விவசாயிகள் பெறுவார் கள் என்றும் பாஜகவினரோ அல்லது அவர்கள் கொண்டுவரும் நபர்களோ முறைகேடு மூலம் பயன்படுத்த முடியாது.

No comments:

Post a Comment