+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்து வம் படிக்க வாய்ப்பு கிடைப்பவர்கள் ஊடகங்கள் முன்பு நான் மருத்துவராகி ஏழைகளுக் குச் சிகிச்சை அளிப்பேன் என்று கூறுவதையும், பின்னர் அதை மறந்து விடுவதையும் பார்த்து வருகிறோம்.
ஆனால்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத் தைச் சேர்ந்த டாக்டர் நூரி பர்வீன் தான் கூறியதை நடைமுறையில் செயல்படுத்தி வருகிறார்
எம்.பி.பி.எஸ்.
தேர்ச்சிக்குப் பின்னர் கடப்பா மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமத் தில் கிளினிக் தொடங்கி ஏழைகளுக்குச் சிகிச்சை செய்து வருகிறார். நாள்தோறும் 40 நோயாளிகளைப் பார்வையிட்டு மருத்துவ ஆலோசனை வழங்கும் நூரி பாவீன் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக வாங்குகிறார். உள்நோயாளிகளாக அனுமதிக்கப் படுபவர்களுக்கு அறை வாடகைக் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே.
தம்மிடம்
சிகிச்சைக்கு வருபவர்களில் பெண் கள், குழந்தைகள் பலரும் ஊட்டச் சத்து குறை பாட்டால் அவதிப்படுவதை உணர்ந்த நூரி பர்வீன், தனது பெற்றோர் உதவியுடன் தொடங்கிய NOOR CHARITABLE TRUST மூலம் கிராமப்புறங்களில் சுகாதார விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தி மதிய உணவும் வழங்கி வருகிறார். கரோனா முழு ஊர டங்கு காலத்தில்
மருத்துவ சிகிச்சையுடன் கிராமங் கள்தோறும் சென்று பல்லாயிரம் பேருக்கு மளிகைப் பொருள்கள் வழங்கி உதவியுள்ளார்.
எதிர்காலத்தில்
சைக்காலஜி மருத்துவத் தில் முதுகலை படித்து தனது கிளினிக்கை பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றத் திட்டமிட்டுள் ளார் டாக்டர் நூரி பர்வீன்.
எண்ணங்கள்
நிறைவேற வாழ்த்துக்கள்.!
- குளச்சல்
ஆசிம்
No comments:
Post a Comment