ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 23, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·அய்தராபாத் பல்கலைக்கலைக் கழகம், ஆங்கிலம், எப்லூ எனப்படும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம், கலோஜி நாராயணராவ் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் நியமனங் களில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டினை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் தல்லோஜூ ஆசாரியிடம் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஸ்ராவன் தஜோஜூ அளித்தார்.

.பி. ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்தது போன்று, பாஜக ஆளும் மத்திய பிரதேசம் போபாலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மரணமுற்ற பெண்ணின் உடலை பெற்றோருக்குத் தராமல் காவல்துறை எரித்துள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் விசாரணை நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

பெண்கள் இல்லங்களில் பணிபுரிய மட்டுமே படைக்கப்பட்ட வர்கள் என்ற ஜாதி மற்றும் பரம்பரை பழக்கம் இன்றும் நிலவி வருகிறது. கரோனா காலத்தில் இந்த வேறுபாடு இன்னமும் அதிகரித் துள்ளது என அம்ரிதா தத்தா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி வருகிற 26ஆம் தேதி விவசாயிகள் நடத்த உள்ள பேரணியில் தங்களது குழு உறுப்பினரை காவல்துறை அதிகாரிபோல் வேடமிட்டு, தடியடி நடத்திட கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் நான்கு பேரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், விவசாய அமைப்பின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தி டெலிகிராப்:

வேறு எந்த அரசாங்கமாக இருந்திருந்தாலும் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் 18 மாதங்கள் கைவிடப்படும் என்ற உறுதி மொழியைப் பெற்ற பின்னர் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டிருப்பார்கள். ஆனால் இந்த அரசாங்கத்துடன் அல்ல என்று பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த வயதான விவசாயி வாரியம் சிங் கூறியுள்ளார்.

பிபிசி நியூஸ் தமிழ்:

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்களுக்கு இடையே நடந்த 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படாமலே முடிந்தது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ இந்த ஆண்டு நான்கு முறை தேர்வுகள் நடத்தப்பட்டதைக் கணக்கில் கொண்டு, வரும் ஆண்டில் நீட் தேர்வும் ஆண்டுக்கு இருமுறை நடத்த முடியுமா? என்பது பற்றி ஆலோசிக்க மத்திய கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் வரும் 25ஆம் தேதி முடிவு செய்வார்கள்.

- குடந்தை கருணா

23.1.2021

No comments:

Post a Comment