கேள்வி
1: தமிழ்நாட்டில் சில ஊர்களில் இன்றளவும்,
ஊர் வேறு, சேரி வேறாகப்
பிரிந்து கிடப்பதும், தேநீர்க் குவளைகளில் தேநீர் தர மறுப்பதும்
இருக்கத்தான் செய்கிறது. இதனை முற்றாக ஒழிப்பது
எப்போது?
- சீ.
இலட்சுமிபதி, தாம்பரம்.
பதில்:
திராவிடர் ஆட்சி திமுக தலைவர்
தளபதி மு.க.ஸ்டாலின்
தலைமையில் வருகின்ற 5 மாதங்களுக்குள் மலரும்.
அவ்வாட்சியில்
இதுபோன்ற சமூக அநீதி பிரச்சினைகளுக்குத்
தீர்வு காண வற்புறுத்துங்கள். அதனை
நிறைவேற்றி சரித்திரம் படைப்பர். ஆட்சியை அமைக்க உதவுவது நம்
முதல் அடிப்படை கடமையாகும்.
கேள்வி
2: பெரியார்
காலத்தில் இருந்தே திராவிட இயக்கத்தை ஒழிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கும்பல்
கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றன என்று
அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி கூறியுள்ளது
பற்றி தங்கள் கருத்து என்ன?
- வேலாயுதம்,
வேளச்சேரி.
பதில்:
‘உண்மை ஒரு நாள் வெளியாகும்.
அப்போது பொய்யும் புரட்டும் பலியாகும்‘ என்ற பட்டுக்கோட்டையின் பாட்டு
அதனை நினைவுபடுத்தும். உண்மையை அப்பட்டமாக போட்டு உடைத்து விட்டார்
சகோதரர் கே.பி.முனுசாமி!
வளர்க - அவர்தம் கொள்கை உள்ளம்!
கேள்வி
3: நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் கட்சி
தொடங்கப் போவதாக அறிவித்து தற்போது
அதிலிருந்து பின்வாங்கி இருப்பதற்கு அடிப்படைக் காரணம் தந்தை பெரியாரால்
பக்குவப்படுத்தப்பட்ட மண்ணான தமிழ்நாட்டில் ஆன்மிக
அரசியல் எடுபடாது எனக் கருதி இருப்பார்
என்று எடுத்துக் கொள்ளலாமா?
- சீதாலட்சுமி,
திண்டிவனம்.
பதில்:
உங்கள் கணிப்பு மிகச்சரியானது!
கேள்வி
4: நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளானாலும், கடிதங்களானாலும் இந்தியில் பதில் தருகிறார்கள் பிரதமரும்
அமைச்சர்களும். ஆனால், வேளாண் சட்டங்கள்
தொடர்பாக விவசாயிகளுக்கு, மத்திய வேளாண்மைத் துறை
அமைச்சர் வலிய வந்து தமிழில்
விளக்கக் கடிதம் எழுதியுள்ளாரே?
- மன்னை
சித்து, மன்னார்குடி -1.
பதில்:
“அடிமேல் அடித்தால் அம்மி கூட நகரும்“
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது!
கேள்வி
5: அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான 10% ‘பார்ப்பன’ ஒதுக்கீட்டிற்கும், அந்த ஒதுக்கீட்டினர் மீது
‘உயர்நீதிமன்றம்’ அதீத அக்கறை காட்டுவதும்
ஏன்?
- சீர்காழி
கு.நா.இராமண்ணா, சென்னை
பதில்:
உயர் ஜாதி மனப்பான்மையின் வெளிப்பாடு
போலும்!
கேள்வி
6: நடிகர் ரஜினி அரசியலுக்கு வராததால்
ரஜினி ரசிகர்களைவிட, பார்ப்பனர்கள் தான் அதிகம் ஏமாந்திருப்பார்கள்
போலிருக்கிறதே?
- முகிலா,
குரோம்பேட்டை
பதில்: “ஆட்டக்காரரைவிட, மேல் பந்தய சூதாடிகளுக்குத் தானே மிகவும் பதற்றம்“ - அது போல!
(தனக்காக
மட்டுமல்லாமல் மக்களுக்கான விளக்கத்திற்காக பல கேள்விகளை அனுப்பி
விளக்கம் எழுத வாய்ப்பு தருபவர்
மறைந்த கொரநாட்டுக் கருப்பூர் தியாகராசன். அவரைச் சிறப்பிக்கும் வகையில்,
மறைவதற்கு முன் அவர் அனுப்பி
வைத்திருந்த கேள்விகளில் சிலவற்றுக்கு ஆசிரியர் விடையளிக்கிறார்.)
இப்பகுதியை
அலங்கரித்த கொரநாட்டுக் கருப்பூர் தியாகராசன் அவர்கள் என்னும் அணிமணி ஒளிவீச்சு என்றும்
மறையாது. - ஆசிரியர்
கேள்வி:
நாட்டில் மக்கள் தொகை பெருகுகின்ற
அளவுக்கு பகுத்தறிவாளர் தொகை பெருகாததற்கு என்ன
காரணம்?
பதில்:
நோயாளிகள் பெருகும் அளவுக்கு டாக்டர்கள் பெருகாததற்கு என்ன காரணமோ அதே
காரணங்கள் தான் இதற்கும்!
கேள்வி:
கல் முதலாளிகளிடம் குவிந்துகிடக்கும் பணத்தால் பயனடைவோர் யார்?
பதில்:
‘சுவாகா’ செய்யும் பெருச்சாளிகள்! (திருப்பதி பற்றி முன்பு ‘ஜூனியர்
விகட’னில் ஒரு சீரியல்
கட்டுரையே வந்ததே!
கேள்வி:
பார்ப்பனர்களுக்கு, ‘திராவிடன்’ என்று சொல்லும்போது வருகின்ற
கோபம் ‘தமிழன்’ என்று சொல்லும் போது
வராததன் காரணம் என்ன?
பதில்:
திராவிடன் என்றால் அந்த இரும்புத் தொப்பி
அவர்களுக்குப் பொருந்தாதே. ‘தமிழன்‘ என்றால் அந்த ரப்பர் தொப்பியை
வளைக்க இருக்கும் வாய்ப்பு திராவிடனில் இல்லாததே!
கேள்வி:
தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் ஒன்றாக
தமிழ் நாடே மாறியதற்கு என்ன
காரணம்? இதிலிருந்து மீள என்ன வழி?
பதில்:
உண்மையான திராவிடர் ஆட்சியான திமுக ஆட்சி அமைய
வரும் தேர்தல் மூலம் பெருவாரியாக வாக்களித்து
மீண்டும் ஆட்சியில்
அமர்த்துவது தான்.
No comments:
Post a Comment