ஈழத் தமிழர்களின் சுயமரியாதையைப் பறிக்கும் செயலில் ஈடுபடுவதா?இலங்கை அரசை பிரதமர் மோடி எச்சரிக்கை வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 1, 2021

ஈழத் தமிழர்களின் சுயமரியாதையைப் பறிக்கும் செயலில் ஈடுபடுவதா?இலங்கை அரசை பிரதமர் மோடி எச்சரிக்கை வேண்டும்!

தி.மு.. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தல்                                             சென்னை,ஜன.1, "ஈழத் தமிழர் களின் குறைந்த பட்ச சுயமரியா தையையும் பறிக்கும் 'மாகாண ஒழிப்பு' திட்டத்தை உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும்; அது, இந்திய - இலங்கை உறவில் மோச மான பின்விளைவுகளை ஏற்படுத் தும் என்றும் பிரதமர் மோடி இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும்" என திமுக பொருளாளரும் நாடாளு மன்றக் தி.மு.. குழுத் தலைவருமான டி.ஆர் பாலு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (31.12.2020) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஈழத்தமிழர்களை இரண்டாந் தரக் குடிமக்களாக்கிட, தொடர்ச் சியாகக் கொண்டிருக்கும் அதே உள்நோக்கத்துடன் - "இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும்என்று இலங்கை அரசு அறிவித்து - அதற்கான நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத் திற்குரியது.

"ராஜபக்சே சகோதரர்கள்புதி தாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஈழத் தமிழர்களின் உரிமைகளை முற்றாகப் பறிக்கும் விதத்திலும் - அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்திலும், ஒவ்வொரு நாளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய பா... அரசும் கண்டு கொள்ளா மல் அமைதி காப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

மாகாணங்களை ஒழிக்கும் திட் டம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13-ஆவது சட்டத் திருத்தத்திற்கு எதிரானது. ஆணவமிக்க - அக்கிரமமான நட வடிக்கை இதுவாகும்! அந்தச் சட் டத் திருத்தத்தையே அகற்றிவிடும் ஆணவம் மிக்க, அக்கிரமமான நடவடிக்கை இது. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தமே மதிக்கப் படாமல், கேள்விக்குறியாக்கப்படு கின்ற இந்த நெருக்கடியான நேரத் தில் கூட, நமது வெளியுறவுத்துறை அமைச்சரோ, சமீபத்தில் இலங்கைச் சென்று வந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகரோ - ஏன், நம் பிரதமரோ, வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்போம் - அதுவும் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அதிகமான அதிகாரம் அளிப்போம் என் றெல்லாம் பேசிவிட்டு, தற்போது தமிழர்களுக்கென இருக்கின்ற மாகாணங்களையும் ஒழிப்போம் என்பதை, இந்திய அரசு எப்படி - ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?

ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும் பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் - அப்படியொரு முடிவு, "இந்திய- இலங்கை உறவில் மோச மான பின்விளைவுகளை ஏற்படுத் தும்'' என்றும், பிரதமர் மோடி இலங்கைக்குக் கடுமையான எச் சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், தி.மு.. சார்பில் கேட்டுக் கொள் கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment