சூரஜ் யெங்டே (Suraj Yengde) மகாராட்டிர மண்ணில் பிறந்து வளர்ந்த இளம் எழுத்தாளர். ‘கேஸ்ட் மேட்டர்ஸ்’ (Caste Matters) என்ற தலைப்பில் இவர் எழுதி சமீபத்தில் வெளிவந்த நூல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ள துயரங்களைப் பற்றியது. பார்ப்பனர்களின் ஆதிக்கத்தாலும் குள்ளநரித் தந்திரங் களாலும் பல தாழ்த்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்பட்ட துயரக் கதைகளை மிகவும் நேர்த்தியாக விவரித்துள்ளார் சூரஜ்.
“தெரிந்த
பெயர் - தெரியாத விபரம்“ என்று நம்மைச் சொல்ல வைக்கிறார். தனது நூலின் 141ஆம் பக்கத்தில் யாரைப் பற்றிய விபரம் அது? ஜான்சி ராணி லட்சுமிபாய்!
பிரிட்டிஷ்
ராணுவப் படைக்கு எதிராக புயலென கிளம்பி தன் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு போரிட்ட 22 வயது வீராங்கனையாகத் தான் இவ்வளவு காலமும் வரலாற்றுப் பக்கங்களில் நாம் பார்த்து வந்துள்ளோம் - ஜான்சிராணி லட்சுமிபாயை! அது வரலாற்றுப் பிழை என்று ஆதாரத்துடன் கூறுகிறார் எழுத்தாளர் சூரஜ் யெங்டே (Suraj Yengde)
ஹ்யூ
ரோஸ் (Hugh Rose) என்ற ராணுவ அதிகாரியின் கட்டளையின் கீழ் நடந்த அந்த யுத்தத்தில் போரிட்டது லட்சுமிபாயே அல்ல - அவருக்குச் சேவை செய்து வந்த தாழ்த்தப்பட்ட சமூக பெண் ஜல்காரி பாய் (Jhalkari Bai) தான் என்கிறார் சூரஜ். 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மைக் கதை இது.
இதற்கு
ஆதாரமாக அவர் குறிப்பிடும் நூல், மோகன் தாஸ் நய்மி-ஷராய் (Mohandas Naimi - Sharay) என்பவர் எழுதியுள்ள “வீராங்கனா ஜல்காரிபாய்” (Veerangana Jhalkari Bai) என்ற புத்தகம். 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் நியூ டில்லி ராதாகிருஷ்ணன் பிரகாஷன் என்ற பதிப்பகத்தார் வெளியிட்டதாகும். இனி சற்று விவரமாக படிப்போமா?
வாளேந்தி
போர் புரிவதில் பயிற்சி பெற்ற வீரமங்கையாம் ஜல்காரிபாய். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணான இவர் பார்ப்பன மங்கையான லட்சுமிபாயின் பணிப்பெண்ணாக இருந்துள்ளார். இருவருக்கும் அதிசயத் தக்க உருவ ஒற்றுமை இருந்ததால் தனக்குப் பதிலாக அவரைப் போரிட வைத்து உலகையே ஏமாற்றியுள்ளார் லட்சுமிபாய். இந்த ஆள் மாறாட்டம் நம் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டு உலகின் பார்வைக்கு தெரியாமல் போனது புரியாத புதிர் அல்லவா?
பிரிட்டிஷ்
படை கோட்டையை முற்றுகையிடும் தறுவாயில் தப்பியோட முயன்றுள்ளார் லட்சுமிபாய். அதற்கு உதவ முடிவு செய்து ஜல்காரிபாய், லட்சுமிபாயைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் உருமாறி பிரிட்டிஷ் படையோடு போரிட்டாராம். வாளேந்தி குதிரைமீது தாவி ஏறி வீரத்தோடு அவர் போரிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் லட்சுமிபாய் ரகசியமாக கோட்டையிலிருந்து தப்பியோடி நேபால் தராய் (Nepal Tarai) என்ற அடர்ந்த கானகத்தில் ஒளிந்து கொண்டாராம்.
லட்சுமிபாயை
வீரமங்கை ஜான்சி ராணியாக திட்ட மிட்டே சித்தரித்து வந்துள்ளனர் பார்ப்பனர்கள் என்கிறார் சூரஜ் யெங்டே, காலவெள்ளத்தில் கரைந்து போய் விட்டார் நிஜ வீராங்கனை ஜல்காரிபாய். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள்
அவரைப் போற்றிப் புகழ்ந்து இயற்றியுள்ள
பாடல்கள் கிராமப்புறங்களில் இன்றும் பிரபலம் தானாம். பல திருவிழாக்களில் போற்றப்பட்டு வருகிறாராம்
அவர். 1907ஆம் ஆண்டிலேயே பல இலக்கிய படைப்புகளில்
இந்த உண்மை குறிப்பிடப்பட்டுள்ளதாம். ஜல்காரிபாய் தாழ்த்தப்பட்ட மக்களால்
நீங்காத நினைவாக பாதுகாக்கப் பட்டு வந்துள்ளார். சில பார்ப்பன எழுத்தாளர்கள் அவரைப் பற்றி இழிவாக எழுதுவதும் நடந்துள்ளது. மாடுகள் முட்டி சாயுமா கோபுரங்கள்? ஜான்சிராணி உண்மையில் ஜல்காரிபாய் தான் என்ற உண்மை இன்றைய இளைய தலைமுறையினருக்கு இப்போது தெரிய வரும். போர்க்களத்தில் மாண்டது ஜல்காரிபாய். தப்பியோடிய நிஜ ஜான்சிராணி என்ன ஆனார் என்பது இன்றுவரை புதிராகவே உள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் புகழ் பெற்றுவிடக் கூடாது என்பதே அந்தக் காலகட்டத்திலும் பார்ப்பனர்களின் நோக்கமாக இருந்து வந்துள்ளது என்கிறார் சூரஜ் யெங்டே. இரண்டாம் பேஷ்வா பாஜிரா வின் வாரிசான லட்சுமிபாயின் நிஜப்பெயர் மணிகர்ணிகா தாம்பே (Manikarnika Tambe) என்கிறார் அவர். பார்ப்பன பரம்பரை அது. ஆனால் ஜல்காரிபாய் - கோரி (Kori) எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே ஆள் மாறாட்ட புதிர் வெளிப்படாமல் இருந்ததில் வியப்பொன்றும் இல்லையே!
No comments:
Post a Comment