சென்னை,ஜன.1, தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி தற்போது தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
அதனால், திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். இந்த மழை 3ஆம் தேதி வரை நீடிக்கும்.
No comments:
Post a Comment