தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கருத்துரை
சென்னை, ஜன.2 உடல்நலம்
கெட்டாலும் - ஊர் நலம் ஓம்பப்படவேண்டும்
என்றுழைப்பவர் - சமூகநீதி - பொதுவுடைமைக்காகத் தம்மை ஒப் படைத்துக்
கொண்ட தோழர் தா.பாண்டியன்
என்றார் தமிழர்
தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி.
தந்தை
பெரியார் 47 ஆம் ஆண்டு நினைவு
நாளான கடந்த
24.12.2020 காலை சென்னை பெரியார் திடலில்
நடைபெற்ற கருத்தரங்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மத்திய குழு உறுப்பினர் தோழர்
தா.பாண்டியன் அவர்களுக்கு ‘பெரியார் விருது' வழங்கப்பட்டது. அந்நிகழ்வில், திராவிடர்
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.
அவரது கருத்துரை
வருமாறு:
மிகுந்த
எழுச்சியோடு, நெகிழ்ச்சியோடு நடை பெறக்கூடிய அறிவாசான்
பகுத்தறிவுப் பகலவன், ஒப்பற்ற சுய சிந்தனையாளர் தந்தை
பெரியார் அவர்களுடைய நினைவு நாள் கருத்தரங்கத்தில்
அறிமுக உரையாற்றிய கழகத் துணைத் தலைவர்
மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன்
அவர்களே,
வரவேற்புரையாற்றிய
கழகத் துணைப் பொதுச் செயலாளர்
மானமிகு தோழர் பொறியாளர் இன்பக்கனி
அவர்களே,
உடல்நலம்
கெட்டாலும் பரவாயில்லை -
ஊர்நலம்
ஓம்பப்படவேண்டும்
இந்நிகழ்ச்சியில்
நம்முடைய உள்ளமெல்லாம் மகிழ்ச்சியால் நிரம்பக் கூடிய அளவிற்கு ஓர்
அறிவார்ந்த, சிறந்த என்றென்றைக்கும் பேசக்
கூடிய, உண்மைகள் பலவற்றை ஒப்பனையில் லாமல் எடுத்துரைக்கக் கூடிய
அருமையான உரையை இங்கே நிகழ்த்தி,
‘‘தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்'' நூலை வெளியிட்டு, ‘பெரியார்
விருது' பெற்ற சிறப்புக்குரிய பெரு
மகனார், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காக, பொதுவுடைமைக்காக
உழைத்துக் கொண்டு, உடல்நலம் கெட்டாலும் பரவாயில்லை - ஊர்நலம் ஓம்பப்படவேண்டும் - உலக நலம் பாதுகாக்கப்படவேண்டும் - சமுதாயத்தின்
நல் வாழ்வு என்பது எங்களைப்
போன்றவர்களுடைய வாழ்வைவிட மிக முக்கியம். அதற்காக
வாழ்கின்ற ஒவ்வொரு மணித்துளியையும் நாம் அதற்கே செலவழிப்போம்
என்று நெஞ்சுறுதியோடு இங்கே இருக்கக்கூடிய அருமை
சகோதரர், நம்முடைய சக சமூகநீதிப் போராளி,
எல்லாத் துறைகளிலும் போராடிக் கொண்டிருக்கக் கூடிய போராளி - அவருக்கு
எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், இறுதி மூச்சு உள்ளவரை
நாங்கள் போராடுவோம் சமூகநீதிக்காக என்ற உறுதியோடு, இன்றைக்கும்
அவர்கள் உடல் தளர்ந்தாலும், உள்ளத்தில்
ஒரு போதும் தளர்ச்சியில்லை என்று
இருக்கக்கூடிய பொதுவுடைமை இயக்கத்தின் முன்னணி தலைவர், சிறந்த சிந்தனையாளர் அருமைத்
தோழர் சகோதரர் தா.பாண்டியன் அவர்களே,
அதேபோல,
மிக ஆழமான கருத்துகளைத் துணிவாக,
தான் எந்தப் பயிற்சிப் பாசறையில்
இருந்தோமோ, அந்தப் பாசறையினுடைய கருத்
துகளிலிருந்து பதவிக்காக
சற்றும் மாற்றிக் கொள்ளமாட்டேன் என்ற அளவிலே, அவர்
புறப்பட்ட இடம் எதுவோ அங்குதான்
இருப்பேன் - இடையில் பொறுப்புக்குப் போனாலும், அங்கும் தன்னுடைய கடமையை சிறப்பாக ஆற்றிவிட்டு,
மறுபடியும் அதே பணியை சமூகப்
பார்வையோடு செய்வேன் என்று சொல்லுகின்ற அருமை
அய்யா மானமிகு நீதிபதி அரிபரந்தாமன் அவர்களே,
இந்நிகழ்வில்
நன்றியுரை கூறவிருக்கக் கூடிய கழக அமைப்புச்
செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களே,
இந்நிகழ்வினைத்
தொகுத்து வழங்கிக் கொண் டிருக்கின்ற திராவிட
மகளிர் பாசறையின் மாநில செயலாளர் வழக்குரைஞர்
மணியம்மை அவர்களே, இந்நிகழ்வில் சிறப்பாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கின்ற
அறிஞர் பெருமக்களே, இது சான்றோர் அவையாக
இருக்கிறது.
இந்தியாவினுடைய
வரலாற்றில், ஒரு பெரிய விஞ்ஞான
சாதனையை சாதித்த பெருமைக் குரியவர், ‘பிரமோஸ்' என்று சொல்லக்கூடிய
ஏவு கணையை உருவாக்கிய ஒரு
தமிழர் அய்யா சிவதாணு பிள்ளை
அவர்களே,
ரஷ்ய கலாச்சார மய்யத்திலிருந்து வந்திருக்கும் அருமைச் சகோதரர் தோழர் தங்கப்பன் அவர்
களே, பேராசிரியர்களே, பெருமக்களே - நேரத் தின் நெருக்கடியினால்
ஒவ்வொருவரையும் தனித்தனியே விளிக்காமல், அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தினைத்
தெரிவித்துக் கொள்கிறேன். அருமை நண்பர்களே, சில
கருத்துகளை வேகமாக சொல்லவேண்டும் என்று
ஆசை. இங்கே சிறப்பு விருந்தினர்களாக
வந்திருக்கும் இருவருக்கும் தலை வணங்கி அனைவர்
சார்பாக நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிகழ்ச்சி
முடிந்தவுடன் அனைவருக்கும் உணவு தயாராக இருக்கிறது.
எனவே, பசியோடு திரும்பிப் போகவேண்டிய அவசியமில்லை. அறிவுப் பசி, வயிற்றுப்
பசி இரண்டையும் தீர்க்கக் கூடிய அளவிற்கு இங்கே
வாய்ப்புகள் இருக்கின்றன.
இங்கே
ஒரு சில செய்திகளை மிக
அழகாகச் சொன்னார்கள். இதுவரையில் கேட்டிராத, வர லாற்றில் பதிவு
செய்யக்கூடிய செய்தியாகும்.
மூளையால்
சிந்தித்து, இதயத்தால் பேசினார் தோழர் பாண்டியன்
தோழர்
பாண்டியன் அவர்கள், மூளையால் சிந்தித்து, இதயத்தால் பேசினார். சிந்தித்தது மூளை - ஆனால், பேசியது
இதயம். அது அப்பட்டமான உண்மை;
ஒப்பணை இல்லாத உண்மை.
எப்பொழுதும்
அவருடைய தனித்தன்மையே, எங்கு பேசினாலும், ஒப்பனை
இல்லாத உண்மை யைப் பேசி,
அதனால் என்ன விளைவு வந்தாலும்,
அதனை ஏற்பேன் என்று சொல்பவர்தான் தோழர்
பாண்டியன் அவர்கள்.
ஆண்ட நாள் ஆண்டு,
மாண்ட
செந்தமிழ்ப் பாண்டியன்
மீண்டு
வந்தான் என்ற
ஒரு பாட்டு உண்டு - ஆனால்,
இந்தப் பாண் டியனோ, என்றைக்கும்
நம் உள்ளத்தை ஆண்டு கொண்டிருக்கும் அளவிற்கு,
கொள்கையால், லட்சியத்தால் மிகச் சிறப்பானவர்.
அவருக்குப்
‘பெரியார் விருதை' இப்பொழுது கொடுத்தது எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி.
நான்,
கவிஞரிடம் சொல்வதுண்டு - ஒவ் வொரு முறையும்
பாண்டியன் அவர்கள் மருத் துவமனைக்குப் போனார்
என்று கேள்விப்படும் பொழுது, எனக்கு உடல்நலம் குறைந்து
மருத்துவ மனைக்குச் சென்றபோதும் நான் அவ்வளவு கவலைப்பட்டது
இல்லை.
நாம் போனஸ் வாழ்க்கை வாழ்கிறோம்!
இருமுறை
அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு இப்பொழுது
போனஸ் வாழ்க்கை வாழ்கிறேன்.
ஆனால்,
என்னுடைய சக தோழர், சக
போராளி தோழர் பாண்டியன் அவர்கள்
உடல்நலக் குறைவு ஏற்பட்டால், சென்னை
பொது மருத்துவமனைக்குத்தான் செல்வார். பெரியாருக்கு ஒதுக்கியதுபோல, அவருக் கென்றே தனி
அறை ஒன்றை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
உடல்நலத்தைப்பற்றி
கவலைப்படாமல், தான் வாழ்கின்ற வரையில்
முழங்கிக் கொண்டே இருப்பேன் என்று
சொல்பவர்.
அவருக்கு
உடல்நலக் குறைவு ஏற்பட்டு, உசிலம்பட்டியில்
இருக்கிறார் என்ற செய்தியை கேட்டபொழுது,
எங்களுக்கு மிகுந்த வருத்த மாக இருந்தது.
உடனே அவரை பார்க்க முடி
யுமா? என்றெல்லாம் நானும், நம்முடைய கவிஞர் அவர்களும், மற்ற
தோழர்களும் ஏக்கப்பட்ட துண்டு.
திடீரென்று
ஒருநாள் அவர் தொலைக்காட்சியில் வந்தவுடன்,
எங்கள் குடும்பமே மகிழ்ச்சியடைந்தது. என்னுடைய வாழ்விணையர், ‘‘வாருங்கள், வாருங் கள், அதோ
பாண்டியன் அவர்கள் எவ்வளவு வேகமாகப் பேசுகிறார் பாருங்கள்'' என்று என்னை அழைத்தார்கள்.
பொதுவாக,
தொலைக்காட்சிக்கு முன்னால் உட்காருவதில்லை, உடல்நலம் கருதி. ஏனென்றால், அதனை
எவ்வளவுக்கெவ்வளவு பார்க்காமல் இருக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு ரத்தக் கொதிப்பு, உடல்நலம்
கெடாமல் இருக்கின்ற வாய்ப்பு கிடைக்கும். ஏதாவது முக்கிய செய்தியாக
இருந்தால்தான், புத்தகம் படிப்பதைவிட்டுவிட்டு, தொலைக்காட்சியைப் பார்ப்பேன்.
என் வாழ்விணையர் சொன்னதும், தொலைக் காட்சியைப் பார்த்தேன், தோழர்
பாண்டியன் அவர்கள் கம்பீரமாக பேசினார். அவரின் கர்ஜனை எதிலும்
குறைவில்லாமல் பேசினார்.
9 ஆயிரம்
ரூபாய் வருமான வரம்பை எதிர்த்து
நிறைய கூட்டங்களில் பேசியிருக்கிறோம்!
பெரியார்
மறைவிற்குப் பின்னால், அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்தில்,
முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் 9 ஆயிரம்
ரூபாய் வருமான வரம்பைக் கொண்டு
வந்ததை எதிர்த்து, நிறைய கூட்டங்களில் பேசி
யிருக்கிறோம். நாங்கள் எல்லாம் ஆஸ்தான பேச்சாளர்கள் - நிலைய
வித்வான்கள் போன்று.
அனந்தநாயகி,
தோழர் பாண்டியன், ரமணிபாய் மற்றும் நண்பர்கள் என்று தமிழ்நாட்டிற்குள் போகாத
இடமே கிடையாது. தொடர்ந்து ஓராண் டாக நடைபெற்ற
கூட்டங்களுக்குப் பிறகு, நடைபெற்ற நாடாளுமன்றத்
தேர்தலில், எம்.ஜி.ஆருக்கு
இரண்டே இடங்கள் தான் கிடைத்தன என்ற
வரலாற்றை, இன்றைக்கு எம்.ஜி.ஆர்.
பெயரை சொன்னால், ஓட்டுவாங்கி விடலாம், வெற்றி பெற்றுவிடலாம், மற்ற
இடங்களில் உள்ளே வந்து உட்கார்ந்து
விடலாம் என்று நினைக்கிறார்களே, அவர்களுக்குச்
சொல்லுகிறோம்,
சமூகநீதியில்
கை வைத்தபொழுது, அதே எம்.ஜி.ஆரை, இரண்டே இரண்டு
இடங்களில் மட்டும் வெற்றி பெற்று, மற்ற
இடங்களில் தோற் கடித்துக் காட்டிய
அணிதான், இந்த அணி என்பதை
மறந்துவிடாதீர்கள். அந்த வரலாற்றை இன்றைக்கு
ஞாபகப்படுத்தவேண்டும்.
அவர்களுக்கு
சம்பந்தம் இருக்கிறதோ இல் லையோ, டெபுடேசனில்
கட்சி நடத்துகிறார்கள். அந்தக் கட்சியிலிருந்து ஒரு
டெபுடேசன் - இந்தக் கட்சியிலிருந்து ஒரு
டெபுடேசன் - கொள்கை டெபுடேசன் வாங்குகிறார்களா
இல்லையா என்று தெரியாது. ஆட்கள்
டெபுடேசன் - மத்தியானம் வரைக்கும் ஒரு கட்சியில் இருப்பார்
- மாலையில் இன்னொரு கட்சியில் டெபுடேசன். இன்னொருவர் கட்சியையே இணைத்துவிட்டேன் என்கிறார். பாவம் அவர், நிறைய
பேரை முதலமைச்சர் ஆக்கி ஆக்கி அலுத்துப்
போனவர்?
ஆக, இப்படியெல்லாம் வித்தைகள் காட்டிய நேரத்தில், அன்றைக்கு இந்தக் கொள்கைகளை எடுத்துச்
சொல்லி வெற்றி பெற்றோம். அதனுடைய
விளைவுதான் நண்பர்களே, 69 சதவிகிதம் தமிழ் நாட்டில். அதற்காக
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையாரை,
பார்ப்பன அம்மை யாரைப் பாராட்டினோம்.
நீதிக்கட்சி
தேர்தலில் தோல்வியுற்றாலும்
அதன் லட்சியத்தில் தோற்கவில்லை!
தமிழநாட்டின்
அரசியல் நிலையைப்பற்றி சரசு வதி என்ற
அம்மையார் ஒரு ஆய்வு (பிஎச்.டி.) செய்திருக்கிறார்.
அதிலே,
1932 இல் நீதிக்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கலாம்.
ஆனால், எந்த லட்சியத்திற்காக நீதிக்கட்சி
தொடங்கப்பட்டதோ, அந்த லட்சியம் வளர்ந்து
வளர்ந்து வளர்ந்துதான் திராவிடர் இயக்கமாக 1969 இலிருந்து இன்றைக்கு 50 ஆண்டுகாலம் வந்திருக்கிறது என்பதை நிலை நாட்டியிருக்கிறது
என்று ஆய்வில் கூறியிருக் கிறார்.
எனவே,
இது சாதாரண வரலாறு கிடையாது.
அந்த வரலாற்றுக்காக உழைத்தவர்கள்தான் இங்கே இருக்கிறார்கள்.
இப்பொழுது
கேள்வி கேட்கிறார்கள், நாம் இது பெரியார்
மண் என்று சொன்னால், இல்லை,
இல்லை ஆழ்வார் மண் என்று சொல்கிறார்கள்.
ஏண்டா,
இது ஆழ்வார் மண்ணாக இருந்த பொழுது,
மக்கள் மண்ணாகத்தானே இருந்தார்கள்; அவனுக்கும் கல்விக்கும் சம்பந்தம் உண்டா?
ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம்
-ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ளுங்கள் - இதை வீடு வீடாகச்
சொல்லுங்கள் - தெருத் தெருவாகச் சொல்லுங்கள்
- திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள்!
உங்கள்
குடும்பத்தில் தாத்தா பட்டதாரியா? உங்கள்
தாத்தாவிற்குத் தாத்தா பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருக்கிறாரா?
ஆனால்,
இன்றைக்கு நீங்கள் படித்திருக்கிறீர்கள்; உங்கள் பிள்ளை பட்டதாரி
- உங்கள் பேரன், பேத்திகள் பட்டதாரிகள்
என்று சொன்னால், இவை யெல்லாம் சரசுவதி
பூஜை செய்வதினால் வந்ததா? சரசுவதி அந்தக் காலத்திலும் இருந்திருக்காளே?
அப்பொழுது முடியாதது, இப்பொழுது மட்டும் எப்படி முடிந்தது?
காரணம்
என்ன, ஒரு காமராசர், ஒரு
அண்ணா, ஒரு கலைஞர், ஒரு
திராவிட இயக்கம் - நூறாண்டுகாலம் சாதித்ததினால்தானே - இன்றைக்குத் தடுக்கி விழுந்
தால், பட்டதாரிகளின்மேல்தானே விழ வேண்டும். இவ்வளவு
கல்லூரிகள் உண்டா?
(தொடரும்)
No comments:
Post a Comment