இந்து என்ற சொல் நமக்கானது இல்லையென்றால் இதற்கான பழைய சொல் என்னவாக இருக்கும் ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 2, 2021

இந்து என்ற சொல் நமக்கானது இல்லையென்றால் இதற்கான பழைய சொல் என்னவாக இருக்கும் ?

நம்முடைய நாட்டிலே இந்து என்ற சொல் சிந்து நதிக்கு இந்தப்புறம் வாழுகிற மக்களைக் குறிப்பதற்கு வெள்ளைக்காரர் களால் பயன்படுத்தப்பட்ட சொல். நம்மு டைய நாட்டிலே என்ன வகையான பழைய இனப் பாகுபாடு எனக் கேட்டால், ‘ஆரியஎன்ற ஒரு சொல் இருக்கிறது. ‘திராவிடஎன்று ஒரு சொல் இருக்கிறது. இந்தச் சொற்கள் இரண்டு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மக்களைக் குறிக்கின்றவை ஆகும். இந்த இரண்டும் தனித்தனியே தம்மிலே வேறுபட்டவை. ஆரிய மொழிகளைப் பேசுகிறவர்களுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. திராவிட மொழிக் குடும்பத் தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுகிற மக் களுக்கென்று ஒரு கலாச்சாரம் உண்டு. இந்த இரண்டு சொற்களுக்குத்தான் மிகப் பழைய அங்கீகாரம் உண்டு. நம்முடைய சங்க இலக்கியத்திலேயேஆரியம்என்ற சொல் வந்திருக்கிறது. வடநாட்டுக்காரர்கள் என்ற பொருளில், ‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்என்று வந்திருக்கின்றது. திராவிடம் என்ற சொல்லை 13-ஆம் நூற்றாண்டில் இருந்து முதலிலே வடமொழி நூல்களிலேதான் தென்னகத்து மக்களைக் குறித்து வழங்கியிருக்கிறார்கள். அந்தச் சொல் தமிழ்நாட்டில் உருவான சொல்லாகத் தெரியவில்லை. ஆனால், திராவிட மொழி பேசுகிற தென்னாட்டு மக்களைக் குறிக்கக் கூடியதாகவும், தமிழ்மொழியைக் குறிக்கக் கூடியதாகவும், இந்தச் சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ உரையாசிரியர்களைக் கேட்டால்திராவிட உபநிஷத்என்று தான் நம்மாழ்வாரின் திரு வாய்மொழியைச் சொல்வார்கள். ‘வேதம் பஹுவிதம். இதில் ஆரியம், திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலேஎன்பார் 13-ஆம் நூற்றாண்டிலே ஒரு வைணவ உரையாசிரியர். ரிக், யஜுர், சாமம் போலேதான் ஆரியம், திராவிடம் என்ற பிரிவு என்பது இதன் பொருளாகும். ‘திராவிடஇயக்கம் பிறப்பதற்கு முன்வரை தென்னிந்தியபிராமணர்கள்பஞ்ச திரா விட பிராமணர்கள்என்றுதான் தங்களை அழைத்துக் கொண்டனர்.

இரவீந்திரநாத் தாகூர், பஞ்சாப சிந்து குஜராத மராட்ட திராவிடஎன்று பாடும் போது நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நிலப்பரப்பைதிராவிட என்ற சொல்லாலே குறிக்கிறார். எனவே, ஆரியம், திராவிடம் என்ற சொல்லுக்கு ஒரு வரலாறு உண்டு. இந்து என்ற சொல்லுக்கு அப்படி யொரு வரலாறு கிடையாது.

காமகோடி பீடம் என்பது உண்மை யில்லையா ?

காஞ்சி காமகோடி பீடம் என்று அவர்கள் சொல்கிறார்கள். சங்கராச்சாரியார் உருவாக்கிய கிழக்கு மடம், பூர்வ ஆம்னாய மடம் இதுதான் என்பது அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது. ஆனால், ‘காஞ்சி காம கோடி பீடம் ஒரு கட்டுக்கதைஎன்று வாரணாசி ராஜகோபால சர்மா என்று ஒருவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். சங்கராச்சாரியாருடைய வரலாறு பற்றி குடுமியாமலை சங்கரன் என்பவரால் எழு தப்பட்ட இன்னொரு புத்தகம் வந்துள்ளது. ‘தாட்சிணாம்னாய பீடம் சிருங்கேரியா, காஞ்சியா?’ என்று இன்னொரு புத்தகம் வந்துள்ளது. இந்த மூன்று புத்தகங்களையும் எழுதியவர்கள் பிராமணர்கள். சிருங்கேரி மடம்தான் இவர்களுடைய மூலமடம். சிருங்கேரி மடத்தின் கிளையொன்று கும்பகோணத்திலே இருந்தது. அந்த மடத்தை இவர்கள் நிருவகித்து வந்தார்கள். 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரசியல் அமைதியின்மை காரணமாக, இவர்கள் கும்பகோணத்திலிருந்து காஞ்சிக்கு வருகிறார்கள். அதாவது சிருங்கேரி மடத்தின் கிளை மடம் காஞ்சிபுரத்திற்கு வருகிறது. பின்னாளிலே இவர்கள் காமாட் சியம்மன் கோவிலை கையகப்படுத்திக் கொள்கிறார்கள். காமக்கோட்டம் என்பது காமாட்சியம்மன் கோவிலின் பெயர். சங்க ராச்சாரியார் குறித்த பழைய சமஸ்கிருத நூல்களிலே காமக்கோட்டத்தைப் பற்றிக் குறிப்புகள் கிடையாது. காமக்கோட்டம் கோயிலைக் கைப்பற்றிக் கொண்டதினாலே தங்கள் மடத்தை இவர்கள்காமகோடி பீடம்என்று சொல்கிறார்கள். ‘காம கோடி மடம்என்றுதான் சொல்லியிருக்க வேண் டும். ஆனால்காம கோடி பீடம்என்று சொல்கிறார்கள். மேலே சொன்ன மூன்று புத்தகங்களையும் பார்த்தாலே காஞ்சி மடம் ஆதி சங்கராச்சாரியாரால் தோற்று விக்கப்பட்ட மடம் அல்ல என்பது தெரியும். அது மட்டுமல்ல. இப்பொழுதுள்ள சங்கராச் சாரியாரைத் தவிர கிளை மடத்தின் மடாதி பதிகள் எல்லாருமே ஒன்று தெலுங்கு அல் லது கன்னடம் பேசுகிறவர்களாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் சிருங்கேரி மடம், இவ்விரண்டு மொழி பேசுகிறவர் களைத்தான் மடாதிபதிகளாக ஏற்றுக் கொள்ளும். ஆதிசங்கரர் பிறந்த காலடியில் போய்க் கேட்டுப் பாருங்கள். இந்த மடத்தை ஆதிசங்கரர் நிறுவியதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுபோல பூரி சங்கராச் சாரியாரைக் கேட்டால் காஞ்சிமடத்தை ஆதி சங்கரர் நிறுவினார் என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார். 19-ஆம் நூற்றாண்டு ஆவணங்களில்கூட காஞ்சி மடாதிபதியை சிக்க உடையார்’ (சின்ன சாமிகள்) என்று தான் குறித்திருக்கிறார்கள். பெரிய சாமிகள் (தொட்ட உடையார்) என்பவர் சிருங்கேரி சங்கரமடத்தின் தலைவர்தான். இந்த மடத் தின் தோற்றமே ரொம்ப சிக்கலுக்குள்ளான ஒரு விஷயம்.

No comments:

Post a Comment