அரசியல் நாகரிகம்?
கொல்கத்தாவில்
நடைபெற்ற நேதாஜி பிறந்த நாள் விழாவில் பிரதமருடன் முதல் அமைச்சர் மம்தா பங்கேற்றார். அவர் உரையாற்ற வந்தபோது 'ஜெய் சிறீராம்!' கோஷம் போட்ட நிலையில், முதல் அமைச்சர் மம்தா இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி என்று கூறி நாற்காலியில் அமர்ந்து விட்டார்.
பா.ஜ.க. சங்பரிவார்
கடைப்பிடிக்கும் அரசியல் நாகரிகம் இதுதான்! அராஜகமும், அநாகரிகமும் இவர்களுக்கு உடன் பிறந்த நோய்களே.
சபாஷ்!
சபாஷ்!!
சபரிமலையில்
92 புள்ளி 2 விழுக்காடு வருவாய் சரிவு. தங்கத்தை அடகு வைக்க ஆலோசனை.
கடவுளே
அடகுக் கடைக்குப் போகும் நிலையா? சபாஷ்! சபாஷ்!!
வருண
தர்மப்படி
தமிழர்களை
இரண்டாம் நிலை குடிகளாகக் கருதும் பிதரமர் மோடி
- ராகுல்காந்தி
கருத்து
பா.ஜ.க.வின்
ராமராஜ்ஜியத்தில் தமிழர்கள் நாலாம் வருணம், அய்ந்தாம் வருணம்தானே!
தண்டனையா
- தப்பிதமா?
நீதிபதிகள்,
அரசியல் பிரமுகர்களது காலைப் பிடித்துப் பதவிக்கு வருகிறார்கள் என்று 'துக்ளக்' குருமூர்த்தி அய்யர் பேச்சுக்குக் கண்டனம் - பிப்ரவரி 16ஆம் தேதி உயர்நீதிமன்றத்துக்கு நேரில் வர குருமூர்த்திக்கு ஆணை.
பா.ஜ.க. தேசிய
செயலாளர் என்ற பேர்வழி நீதிபதிகள் குறித்துப் பேசி மன்னிப்பு வாங்கினார். குருமூர்த்தியும் மன்னிப்புக் கேட்டு விட்டால், பேசியது சரியாகி விடுமா? உரிய தண்டனை வழங்கப்பட வேண்டாமா?
ருசியப்
புரட்சி நினைவிருக்கிறதா?
10 ஏக்கர்
பயிர்கள் நீரில் மூழ்கியதால் நாகை விவசாயி இரயில் முன் பாய்ந்து தற்கொலை!
மனுதர்மப்படி
பாவப்பட்ட தொழில் ஆயிற்றே விவசாயம்! விவசாயின் கையில் இருப்பது தற்கொலை தானா?
ருசியப்புரட்சி
விவசாயிப் போராட்டத்தால் தான் ஏற்பட்டது என்பது நினைவில் இருக்கட்டும்!
ஏன்,
பிரதமர் குரல் கொடுக்கக் கூடாதா?
மீனவர்கள்
4 பேர்களின் மரணத்துக்குக் காரண மானவர்கள் தண்டிக்கப்படும் வரை ஓய மாட்டோம்!
- அமைச்சர்
ஜெயக்குமார் பேட்டி
அப்பாடா,
இதைச் சொல்லுவதற்குக்கூட இத்தனை நாட்கள் தேவைப்பட்டனவா? இதைப் பற்றியெல்லாம் கருத்துக்கூறப் பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை- அப்படித்தானே!
சீப்பைஒளித்து
வைத்தால்...
விவசாயிகள்
நாளை டில்லியில் டிராக்டர் போராட்டம் நடத்தவிருந்த நிலையில் உத்தரப்பிரதேசத் தில் டீசல் வழங்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
சீப்பை
ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமோ!
இதோ
ஒரு சிபி சக்ரவர்த்தியோ?
திருக்கழுக்குன்றத்தில்
வழக்குரைஞராகப் பணியாற்றும் சலீம் பாஷாவின் வீட்டில் அரிய வகையான புல்புல் தாரா பறவை கூடு கட்டிக் குஞ்சு பொரித்த நிலையில் அதற்குத்
தொல்லை தரக் கூடாது என்ற மனநிலையில், தம் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் குடிபெயர்ந்தார்.
சிபி
சக்ரவர்த்தியின் கதை உண்மையோ பொய்யோ, இவர் உண்மையான சிபி சக்ரவர்த்திதான்!
அண்ணாவை
அவமதிக்கிறாரோ!
கடவுளை
இழிவாகப் பேசியவர்கள் வேல் வைத்திருந்தால் மட்டும் வரம் கிடைக்காது.
- முதல்
அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஓ
அண்ணாவை மறைமுகமாகத் தாக்குகிறாரோ - இவ்வளவுக்கு கட்சிக்கு அண்ணா திமுக என்று பெயர்.
அடிமாட்டுத்
திட்டம்!
பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தில் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்?
- ஊழியர்கள்
சங்கம் கோரிக்கை
ஒப்பந்த
தொழிலாளர்கள் என்னும் அடிமாட்டு முறையே முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment