பறக்குது பட்ஜெட்!
நிதிநிலை
அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிதியைவிட 135 விழுக்காடு நிதி பற்றாக்குறை. (ரூ.10.75 லட்சம் கோடி)
அதுதான்
பிரதமர் 'மன் கி பாத்' மூலம்
'சரி' செய்து கொண்டு இருக்கிறாரே, அது போதாதா?
அது
கிடக்கு ‘வெங்காயம்!'
வெளிநாட்டுக்கு
ஏற்றுமதி செய்ய மத்திய பி.ஜே.பி.
அரசு அனுமதி அளித்ததன் காரணமாக, வெங்காய விலை 2 நாள்களில் 28 விழுக்காடு உயர்வு.
வெங்காய
விலை அதிகரிப்பால் டில்லியில் ஆட்சி கவிழ்ந்தது நினைவிருக்கிறதா?
‘அய்யோ
பாவம்' அ.இ.அ.தி.மு.க.!
தமிழக
அரசியலை பா.ஜ.க.தான் தீர்மானிக்கும்: - எல்.முருகன், தமிழக பா.ஜ.க.
தலைவர்.
ஆசை
இருக்கலாம்; அது கண்மூடித்தனமாகவோ, ஆணவமாகவோ இருக்கக் கூடாது அல்லவா!
‘அய்யோ
பாவம்!' அ.இ.அ.தி.மு.க.!
சிதம்பரம்
தீட்சதர்கள் வீட்டில்!
தமிழ்நாட்டில்
குழந்தைத் திருமணங்கள் அதிகம்.
சிதம்பரம்
தீட்சதர் குடும்பங்களில் முதலில் ஆய்வு செய்யப்பட்டு, அவர்களின்
குடுமியைப் பிடித்தால் விஷயங்கள் வெளியில் வரும். உரிய தண்டனை அளிக்கப்பட்டால், மற்ற மற்ற பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுமே!
முக்கிய கேள்வி!
சென்னையில்
நட்சத்திர ஓட்டல்களில் கரோனா. பரவியது.
எதில்
நட்சத்திர ஓட்டல்களில்?
இதுபோன்ற
இடங்களிலேயே இந்த நிலை எனில், சாதாரண மக்கள் மத்தியிலும், வியாபார இடங்களிலும் கரோனா பரவுவதைத் தடுக்க முடியுமா? என்பது முக்கிய கேள்வி.
அகில
இந்திய அண்ணா தி.மு.க.
அல்லவா?
குரூப்
ஒன்று முதல் நிலை தேர்வு இன்று நடக்கிறது.
இதில்
அகில இந்திய அளவில் யார் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். ஏனெனில், நாட்டில் நடப்பது அகில இந்திய அண்ணா தி.மு.க.
அல்லவா!
No comments:
Post a Comment