சென்னை, ஜன.1, தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது: காலை 9.15 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு சென்றடைய வேண்டும். நேரம் தவறி வரும் தேர்வர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்தி தேர்வினை எழுத வேண்டும். விடைத்தாளில் இரண்டு இடங்களில் கையொப்பம் இட்டு இடது கை பெருவிரல் ரேகை பதிக்க வேண்டும். விடை தெரியாத கேள்விகளுக்கு விடைத்தாளில் வட்டத்தினை கருமையாக்க வேண்டும்.
விடைத்தாளில் ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட் டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் அய்ந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும். இச்செயலை செய்வதற்கு மட்டுமே தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.இவ் வாறு வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment