சென்னை அரசு அருங்காட்சியகத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘நிரந்தர புத்தகக் காட்சி’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 23, 2021

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘நிரந்தர புத்தகக் காட்சி’

சென்னை,ஜன.23- சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கன்னி மரா நூலகம் அருகில் புதுப்பிக்கப் பட்டநிரந்தர புத்தகக் காட்சி' அரங்கை அமைச்சர் .பாண்டிய ராஜன் நேற்று (22.1.2021) திறந்து வைத்தார்.

அதில் இடம்பெற்ற நூல்களை பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சி யில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளை மின்னாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தபோது, அந்தப் பணிகளை செய்ய தமிழகத்தில் ஒருவரும் இல்லை. வட மாநிலத்தில் இருப்போருக்கு ரூ.4 கோடி மதிப் பிலான அந்த பணி கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் மின் பதிப்பில் மிகப் பெரிய நிறுவனத்தை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் நடத்துகிறார். தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. அதைத்தடுக்க முடியாது. தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு தொழிலை மாற்றிக் கொள்வது சிறந்தது. நூல் பதிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் மின் பதிப்புக்கு மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென்னிந்திய புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் பேசும்போது, ‘‘இந்த புத்தகக் காட்சி 30 ஆயிரம் தலைப்புகளுடன் ஆண்டு முழுவதும் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும் புத்தக விற்பனை நிலைய மாக செயல்படும். உலகில் வேறு எங்கும் இத்தனை தலைப்புகளுடன் தமிழ் நூல்கள் கிடைக்காது. ஆண்டு முழுவதும் நூல்களுக்கான விலையில் 10 சதவீதம் கழிவும் வழங்கப்படும். வருங்காலத்தில் கைபேசி செயலி வழியாக விற்பனை செய்யவும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புத்தகக்காட்சி வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும்வருவோருக்கு ஒரே இடத் தில் அனைத்து விதமான புத்தகங்க ளையும் சிரமம் இன்றி வாங்க உதவி யாக இருக்கும்’’ என்றார். இந்நிகழ்ச் சியில் பபாசி செயலர் எஸ்.கே.முரு கன், பொருளாளர் ஜி.கோமதிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment