பெரியாரைக் கொண்டாடுவது அறிவுலகத்துக்கு அடையாளம் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. மார்க்சியவாதிகள் கூட பெரியாரைக் கொண்டாடினார்கள். பகுத்தறி வின் சிகரம் பெரியார் என்று சொல்லி 1954இல் தொழிற்சங்கத் தலைவர் தோழர் அய்ய ங்கார் ஏ.எஸ்.கே. புத்தகம் எழுதினார்.
பெரியாரைக்
கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று
கருதப்பட்டது போல, இந்த பத்து
ஆண்டுகளில் பெரியாரைப் பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம்
ஆகிப் போய்விட்டது.
பெரியார்
மீதான விமர்சனத்துக்குப் பெரியாரின் ஆளுமை இன்னமும் ஒரு
நூற்றாண்டிற்குத் தாங்கும். பெண் உரிமை பற்றி
வாய்கிழியப் பேசுகிற கூட்டம் கூட பெரியாருடைய தாலி
நிராகரிப்பு பற்றிப் பேசுவதில்லை. வட இந்தியப் பெண்கள்
இயக்கத்தில் கூட ‘தாலியை நிராகரியுங்கள்’
என்று யாரும் சொன்ன தில்லை.
பெரியார், கடவுளை மட்டும் அல்ல,
தாலியையும் நிராகரியுங்கள் என்று வலியுறுத்தினார்.
ஆனால் அதைப் பற்றிப்
பேசவோ சிந்திக்கவோ யாரும் தயாராக இல்லை.
ஆனால், பெரியாரைப் பழிக்கிறது என்பது ஒரு நாகரிகம்
(Fashion) ஆகிவிட்டது. பெரியார் வாழ்ந்த காலத்தின் சூழல் வேறு; இன்றைக்கு
இருக்கும் காலம் வேறு. பெரியாருக்குப்
பிறகு உலகம் முப்பது ஆண்டுகள்
சுற்றியிருக்கிறது.
முப்பது
ஆண்டு களுக்குப் பிறகு, புதிய அறிவியல்
கருவிகள் எவ்வளவு வந்திருக்கிறது! இதை வைத்துக் கொண்டு
பெரியாரை அளக்க முற்படுவோம். பெரியாருக்கு
அப்புறம் பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கிறது. பெரியாரே இருந்தால் இன்றைய பெண்கள் அடைந்து
இருக்கும் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்.
பெண்கள் இல்லை என்றால் உலகம்
இல்லை என்று நம்புகிறார்கள்.
- 2012ஆம்
ஆண்டு கீற்று இணையதளத்திற்கு
ஆய்வாளர்
தொ.பரமசிவன் அளித்த பேட்டி
No comments:
Post a Comment