பிரதமர் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
புதுடில்லி,ஜன.31- சர்ச்சைக்குரிய 3 புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற
நிதிநிலை அறிக்கை கூட்
டத் தொடர் நேற்று முன்தினம் (29.1.2021) தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரை யுடன் கூட்டம் தொடங்கியது. இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி குடி யரசுத் தலைவர் உரையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்த மாக புறக்கணித்தன. இதன் காரணமாக நாளை (1.2.2021) காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நாளை (1.2.2021) காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில்,
நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோரி, பிரதமர் மோடி தலை மையிலான அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று (30.1.2021) நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி மற்றும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். காணொலி மூலம் நடந்த இக் கூட்டத்தில், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென அனைத்து எதிர்க்கட்சித் தலை வர்களும் வலியுறுத்தினர்.
குலாம்
நபி ஆசாத்
காங்கிரஸ்
மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ‘‘விவசாயிகள் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் ஏற்கெனவே அரசை எச்சரித்து வந்தது. தற்போது அப்போராட் டத்தின் விளைவுகளையும் அரசுதான் சமாளிக்க வேண்டும். இதற்கு ஒரே தீர்வு 3 வேளாண் சட்டங்களையும் நிரந்தரமாக ரத்து செய்வது மட்டுமே,’’ என்றார்.
சரத்
பவார்
தேசியவாத
காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசுகையில், ‘‘வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி முறையை பலவீனப்படுத்தி விடும். குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிப்படுத் தப்பட வேண்டும், மேலும், அதை வலுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தம், கார்ப்பரேட் நிறுவனங்கள் விளைபொருட்களை பதுக்கி வைத்து அதிக லாபத்தில் நுகர்வோருக்கு விற்க வழிவகுக்கும். எனவே, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்,’’ என்றார்.
சுதிப்
பந்த்யோபாத்யாய்
திரிணாமுல்
காங்கிரஸ் எம்பி சுதிப் பந்த் யோபாத்யாய் பேசுகையில், ‘‘20 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்து, வேளாண் சட்டங்களை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டுமென்ற வலுவான செய்தியை அரசுக்கு உணர்த்தி உள்ளன. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக விவசாயிகள் பாதிப்படைய அனுமதிக்க முடியாது,’’ என்றார்.
ஆம்
ஆத்மி கட்சியின் பகவந்த் மன் கூறுகையில், ‘‘விவசாயிகள் போராட்டத்தில் சில அந்நிய சக்திகள் நுழைந்து, வன்முறையை தூண்டி விட்டுள்ளன. ஆனால், உண்மையான விவசாயிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். மேலும், நாடாளுமன்ற நிநிலை அறிக்கைக்கான கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்கள் குறித்து மீண்டும் அரசு விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு
பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:
நாடாளுமன்றத்தில்
எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சினையில் அரசு திறந்த மனதுடனே செயல்படுகிறது. இப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும்.
வேளாண்
சட்டங்களை 18 மாதத்திற்கு நிறுத்தி வைத்து, அதிலுள்ள பிரச்சினைகளை பேசித் தீர்க்கலாம் என 11 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பரிந்துரைத்துள்ளார். அதே நிலைப்பாட்டில் அரசு இப்போதும் உள்ளது. விவசாயிகள் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்காக அமைச்சர் தோமருக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு செய்தால் போதும். பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது. நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத் தொடரை சுமூகமாக நடந்த பெரிய கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். சிறிய
கட்சிகளுக்கு அதிக நேரம் பேச வாய்ப்பு வழங்கப்படும். சிறிய கட்சிகளின் எம்.பி.க்கள் தங்கள்
கருத்துகளை முழுமையாக எடுத்து வைக்க பா.ஜ.க.
உள்ளிட்ட பெரிய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை விவகாரத்தை பொறுத்தவரையில், சட்டம் அதன் கடமையை செய்யும்.
இவ்வாறு
அவர் பேசினார்.
காந்தி
சிலை அவமதிப்புக்கு கண்டனம்
அனைத்து
கட்சிக் கூட்டத்தில் காந்தி நினைவுநாள் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, ‘‘காந்தியின் கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும்’’ என்றார். மேலும், அமெரிக்காவில் காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘‘இதுபோன்ற வெறுப்பு சூழல்களை உலகில் யாரும் வரவேற்க மாட்டார்கள்,’’ என்றார்.
சிராக்
பஸ்வான் புறக்கணிப்பு
மத்தியில்
பா.ஜ.க. தலைமையிலான
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, சமீபத்தில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் பாஜ கூட்டணியில் இருந்து விலக பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் அதிரடி முடிவெடுத்தார்.
அத்தேர்தலில்
லோக் ஜனசக்தி ஒரு இடத்தில் மட்டுமே வென்றாலும், நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தள ஓட்டுகளை பிரித்தது.
இந்நிலையில், நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க லோக் ஜனசக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி,
இக்கூட்டத்தை சிராக் பஸ்வான் புறக்கணித்தார்.
No comments:
Post a Comment