மிசா சட்டத்தின் கீழ் 358 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு விடுதலை பெற்ற நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 23, 2021

மிசா சட்டத்தின் கீழ் 358 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு விடுதலை பெற்ற நாள்

தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்அவசர நிலைஎனும் இருண்ட காலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்பட எப்படி திராவிடர் கழகத் தோழர்கள் தமிழ்நாட்டில் வேட் டையாடப்பட்டனர் என்பதையும், ‘விடுதலைஏட்டின் மீது பார்ப்பனக் கத்திரிக்கோல் பாய்ந்து, பார்ப்பன அதிகாரிகள் தடை போட்ட வரலாற்றையும், தோழர்கள் 358 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு 23.1.1977 அன்று காலை விடுதலை (இன்று) செய்யப்பட்ட வரலாற்றையும் நினைவுக்குக் கொண்டு வருகின்றோம்.

இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நள்ளிரவு வேளையிலேயே நெருக்கடி நிலையை எதிர்க்க கூடும் எனக்கருதப்பட்ட அரசியல் கட்சியினரும் ஜன நாயக அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத் தலை நிகழ்த்தக் கூடியவர்கள் என்ற சட்டப் பிரிவுகள் அவர்கள் மேல் பதிவு செய்யப்பட்டன. தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் 31.1.1976 அன்று கலைக்கப்பட்டதுடன் திமுக கட்சித் தலைவர் களையும், தொண்டர்களையும், திராவிடர் கழக முக்கியப் பொறுப்பாளர்கள் சிலரையும் என்னையும் (கி.வீரமணி) கைது செய்து சிறையில் அடைத்தனர். 1976 பிப்ரவரி 2ஆம் தேதி என்னைச் சிறைச்சாலையில் இரவு 9 மணிக்கு மேல் அடித்து துன்புறுத்தினர்.

சென்னை மத்திய சிறையிருந்த சிறிய அறைகளில் எட்டுப்பேர் அடைக்கப்பட்டதில் தொடங்கி, வேப்ப எண் ணெய் கலந்த உணவை வழங்குதல், திடீர்த் தாக்குதல்கள், மருத்துவச் சிகிச்சை மறுப்பு, உறவினர்கள் பார்க்க அனுமதி மறுப்பு, நடமாடக்கூட அனுமதி மறுப்பு என சிறைக்குள் நெருக்கடி நிலை எதிர்ப்பாளர்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டனர்.

358 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு நானும், கழகத்தோழர்களும் விடுதலை பெற்றோம். இதே ஜனவரி மாதம் 31ஆம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் நினைவுளே இந்த கட்டுரை. எதிர்கால சந்ததினருக்கு உதவும் என்பதால் இதனை எழுதுகிறோம்.

24.1.1977 அன்று "பெருமிதம் கொள்கிறேன்என்ற தலைப்பில் கழகத் தலைவர் அமமா அறிக்கை விடுத்தார் கள். தங்கள் குடும்பத்தின் ஜீவஓட்டமாக இருந்து வந்த கழகத் தோழர்களை எல்லாம் பிரிந்து, கடந்த ஓராண்டுக் காலத்தில் பல்வேறு தொல்லைகளுக்கும், இழப்புகளுக்கும், சுகக்கேடுகளுக்கும் ஆளான குடும்பத்தினருக்கெல்லாம் எப்படி என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வது என்று புரியாமல் தவிக்கிறேன் என்று வரவேற்றார்கள்.

சிறையேகி மீண்ட தோழர்களுக்கும், அவர்கள் பிரி வால் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு ஆளான அவர்களது குடும்பத்தினருக்கும் நமது அருமைத் தந்தையை இழந்த நிலையில் மீண்டும் மீண்டும் எனது வணக்கத்தையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்” - அறிக்கையின் ஒரு பகுதியில் இவ்வாறு கூறப்பட்டது.

விடுதலையான கழகக் கண்மணிகள்!

மிசாஎன்ற காட்டுமிராண்டித்தனமான கொடூர ஆள் தூக்கிச் சட்டத்தினால் பிடிக்கப்பட்டு, 358 நாட்கள் காராக் கிரகத்தில் மிருகத்தனமான சித்திரவதைக்கு ஆளாகி, 23.1.1977 அன்று விடுதலை செய்யப்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் விவரம்:

சென்னை மத்திய சிறையிலிருந்து

1. கி. வீரமணி (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்)

2. கே. தியாகராசன் (மத்திய கமிட்டி உறுப்பினர்)

3. எஸ்.பி.தட்சிணாமூர்த்தி (தென்சென்னை மாவட்ட தி.. தலைவர்)

4. மு.போ. வீரன் (வடசென்னை மாவட்ட தி.. செயலாளர்)

5. .குணசீலன் (தென்சென்னை மாவட்ட தி.. செயலாளர்)

6. இரா.கனகசபாபதி (தென் ஆற்காடு மாவட்டச் செயலாளர்)

7. எம்.சச்சிதானந்தம் (புவனகிரி தி.. தலைவர்)

8. .சத்தியேந்திரன், (சென்னை மாவட்ட திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்)

திருச்சி சிறையிலிருந்து

1. .ஆறுமுகம் (தஞ்சை மாவட்ட தி.. தலைவர்)

2. என்.செல்வேந்திரன் (திருச்சி நகர தி.. தலைவர்)

3. திருவாரூர் வி. சுப்ரமணியம் (தஞ்சை மாவட்ட தி.. துணைச் செயலாளர்)

4. மாயூரம் கே. ராஜமாணிக்கம் (மாயூரம் நகர தி.. பொருளாளர்)

5. திருவாரூர் .சி. சிவசங்கரன் (தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்)

6. லால்குடி கழகத் தோழர் ராமசாமி.

கோவை சிறையிலிருந்து

1. வழக்குரைஞர் எஸ்.துரைசாமி (மாநில திராவிடர் கழக அமைப்பாளர்)

2. கே.ராமகிருஷ்ணன் (கோவை மாவட்ட தி.. செயலாளர்)

3. மேயர் ராமசாமி

மதுரை சிறையிலிருந்து

1. ராஜபாளையம் .பொன்னுசாமி

2. பாளையங்கோட்டை சி.எம். பெருமாள்

3. அருப்புக்கோட்டை எஸ்.எஸ்.கருடன் (13.1.1977 அன்று விடுதலை செய்யப்பட்டவர்)

சேலம் சிறையிலிருந்து

1. பொத்தனூர் .சண்முகம் (சேலம் மாவட்ட தி.. தலைவர்)

2. எஸ்.சி.வெங்கடாசலம் (சேலம் மாவட்ட தி.. செயலாளர்)

3. சேலம் எஸ்.டி.அழகரசன், (சேலம் நகர தி.. தலைவர்)

ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட கழகத் தோழர்களின் விவரம்

1. என்.எஸ்.சம்பந்தம் (மத்திய கமிட்டி உறுப்பினர்)

2. திருநெல்வேலி டி..தியாகராசன் (நெல்லை மாவட்ட தி.. செயலாளர்)

3. எம்.என்.நஞ்சையா (தர்மபுரி மாவட்ட தி.. தலைவர்)

4. கிருஷ்ணகிரி ஜி.எச்.கோதண்டராமன் (தருமபுரி மாவட்ட தி.. துணைத் தலைவர்)

5. திண்டுக்கல் பொ.கு.பெ.பூமண்டலம் (மதுரை மாவட்ட தி.. துணைச் செயலாளர்) 28.5.1976 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

6. தேசாய் வேணுகோபால் (தருமபுரி மாவட்ட தி.. துணைத்தலைவர்)

7. மதுரை .வி.கே.நீர்காத்தலிங்கம் (மதுரை நகர தி.. தலைவர்

8. எஸ்.கிருஷ்ணன் (வழக்குரைஞர், நிலக்கோட்டை)

9. கடலூர் சீனிவாசன்

10. வாடிப்பட்டி எஸ்.சுப்பையா (மதுரை மாவட்ட தி.. தலைவர்)

இறுதியாக விடுதலை செய்யப்பட்டவர்

தெ.. மாவட்ட தி.. தலைவர் பண்ருட்டி திரு நா. நடேசன் அவர்கள் 363 நாட்கள் மிசாசிறைவாசத்திற்குப் பிறகு 29.1.1977 அன்று சென்னை மத்திய சிறைச்சாலையி லிருந்து இறுதியாக விடுதலை செய்யப்பட்டார்.

மேலும், ஏராளமான கழகத் தோழர்கள் அவ்வப் பொழுது கைது செய்யப்பட்டு, சிறிது காலம் சிறைச்சாலை யில் வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் திண்டிவனம் முத்தாலு, காரைக்குடி சாமி. திராவிடமணி, தஞ்சை சாமி நாகராஜன், தஞ்சை நகர செயலாளர் இரா.காந்தி, புதுக்கோட்டை விடுதி பெ.இராவணன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சங்கரலிங்கம், (1.2.1976 முதல் 2.3.1976 வரை), அம்பாசமுத் திரம் பெருமாள், நடராசன் அறந்தாங்கி வட்ட தோழர்கள் மு. இரணியன், . மெய்யநாதன். .மகாலிங்கம், பெ.சாமிநாதன் (அறந்தாங்கி வட்ட தோழர்கள் 11.2.1976 முதல் 5.3.1976 வரை), ஈரோடு புதுப்பாளையம் செ.தங்கவேலு, தொழுவூர் கிருஷ்ணமூர்த்தி (வலங்கைமான் கழகச் செயலாளர்), குப்பசமுத்திரம் வெடிவேல், (கிளைக் கழகத் தலைவர்), வெங்கடாசலம் (கிளைக் கழகச் செயலாளர்), கோயில்தேவராயன்பேட்டை வி.மகாலிங்கம் (பாபநாசம் வட்ட பொருளாளர்), வெ. நாகராசன் மற்றும் ஏராளமான தோழர்கள்.

இப்படி 1975 இல் தொடங்கப்பட்ட அவசரநிலைதான் இந்தியாவில் 18 மாத காலம் கோரத் தாண்டவம் ஆடி, சிறைக்கொட்டடியில் பல தலைவர்களையும் மாணவர் களையும் பலி வாங்கவும் நாட்டையே சீரழிக்கவும் காரண மாக அமைந்தது.

இதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர். அரசு துரோகச் செயல் ஒன்றைச் செய்தது. அதைக் குறிப்பிட்டுக் காட்டுவது முக்கியம் என்பதால் அதனைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன். தமிழகத்தில் அவசர நிலை என்ற இருண்ட காலத்தில் - சென்னை சிறைச்சாலைகளிலே ரத்த ஆறு ஓடியது; மிசாவின் கீழ் கைது செய்யப்பட்ட தலைவர்கள் எல்லாம் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர்! சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி இஸ்மாயில் அவர்களைக் கொண்டு அதற்காக ஒரு விசாரணை ஆணையமே அமைக்கப் பட்டது. விசாரணை அறிக்கை - அப்போது சிறை அதி காரிகளாக இருந்த பலரைக் குற்றம் சாட்டியது! “நான் இங்கே அரசர்களுக்கெல்லாம் அரசன்என்று கொக்கரித்த - வித்யாசாகரன் என்பவர்தான் அப்போது சென்னை சிறைச்சாலை உயரதிகாரி! விசாரணை ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட அந்த அதிகாரி மீது உரிய நடவடிக் கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் குரல் கொடுத்தது! கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது தலைமையில் கழகத் தோழர்கள் இந்தப் பிரச்சினைக்காக கோட்டை முன் போராட்டம் நடத்தினார்கள்!

ஆனால், குற்றம் சாட்டப்பட்ட அந்த அதிகாரி மீது எம்.ஜி.ஆர். அரசு எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? - அவருக்குப் பதவி உயர்வு கொடுத்ததுதான்!

காவல் கைதிகளாக இருந்தவர்கள் மூர்க்கத்தனமாக சிறைச்சாலைக்குள்ளே தாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த ஓர் அதிகாரிக்கு அரசு தந்த பரிசு பதவி உயர்வு. அப்போது விசாரணைக் கைதிகளாக இருந்தவர்களின் நிலைமை என்ன? 1981 ஜனவரி முதல் மே மாதம் வரை 17 மாதங்களில் விசாரணைக் கைதிகளாக இருந்த 60 பேர் தமிழ்நாட்டில் இறந்திருக்கிறார்கள்! இந்தியாவில் - வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு விசாரணைக் கைதிகள் இறக்கவில்லை! அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற வழக் குரைஞர்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இந்தச் சம்பவங்கள் பற்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் கோரி, வித்யாசாகரன்களுக்கு - இந்த அரசு தரும் பதவி உயர்வு மரியாதைகள் இந்த நாட்டில் இப்படிப்பட்ட கொடுமைகளை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கின்றது என்று குறிப் பிட்டிருந்தார்கள். சிறைச்சாலைகள் சீர்திருத்தச்சாலை களாக இருக்க வேண்டுமே தவிர சித்திரவதை சாலைகளாக இருக்கக்கூடாது என்பதுதான் நாகரிக சமுதாயத்தின் தார்மீக நெறியாகும்!

மன்னர்கள் காலத்தில் - நடந்த இந்தக் கொடுமைகள் இந்தஜனநாயகஆட்சியிலும் தொடர்வது என்பது வெட்கப்படத்தக்க வேண்டியதல்லவா?

இந்தியாவிலேயே - இப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நசுக்கும் கொடுமையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றால் அது - தமிழகத்துக்கே ஏற்பட்ட தலைக்குனிவு அல்லவா?

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு - எந்தப் பிரச்சினை யையும் இந்த அரசு அணுகுவதால் குற்றவாளிகளுக்குக் கூடப் பரிசு வழங்கத் துடிக்கிறது

நேர்மை, நீதி, நியாயங்கள் புதை குழிக்குப் போய் விடுவதால் இப்படிப்பட்ட விபரீதங்கள்துணிவோடு நடக் கின்றன! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்றுதான் இந்த அரசு முரட்டுத்தனமான பிடிவாதத்தோடும் நடந்து கொண்டது.

- "அய்யாவின் அடிச்சுவட்டில்" நூலில் ஆசிரியர் கி.வீரமணி

No comments:

Post a Comment