‘‘மிஷன் 200'' : மானமிகு தளபதி மு.க.ஸ்டாலினின் வெற்றுச் சொல்லல்ல - வெற்றி முழக்கமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 3, 2021

‘‘மிஷன் 200'' : மானமிகு தளபதி மு.க.ஸ்டாலினின் வெற்றுச் சொல்லல்ல - வெற்றி முழக்கமே!

 * கலி.பூங்குன்றன்

காணொலியில்  தமிழர் தலைவர்

‘‘தமிழ்நாடும், தேர்தல் அரசியலும்'' எனும் பொருளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் நேற்று (2.1.2021) மாலை 6.30 மணிக்கு சிறப்புரை வழங்கினார்.

மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார். வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நன்றி கூறினார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆற்றிய உரையின் சாரம் வருமாறு:

திராவிடர் கழகம் அரசியல் கட்சியல்ல - கூட்டணி கட்சியும் அல்ல; அதேநேரத்தில் அரசியலில் என்ன நடந்தாலும் நமக்கென்னவென்று ஒதுங்கிச் செல்லும் அமைப்பும் அல்ல!

இந்த நாட்டுக்கான மக்களுக்கான ஆட்சி எதுவாக இருக்கவேண்டும்? யார் வரவேண்டும்? யார் வரக் கூடாது என்று வழிகாட்டக் கூடிய பொறுப்பும், கடமை யும் திராவிடர் கழகத்துக்கு உண்டு. தந்தை பெரியார் காட்டிய வழி இது.

ஓர் ஆட்சியை திராவிடர் கழகம் ஆதரிக்கிறது என்றால், எந்தவித சலுகையையும் எதிர்பார்த்தல்ல.

திராவிடம் வெல்லும்' என்று இந்தத் தேர்தலில் திராவிடர் கழகம் ஒரு முழக்கத்தைக் கொடுத்துள்ளது என்றால், கழகத்தின் கொள்கையின் அடிப்படையில் நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படையில்தான்.

அனைவருக்கும் அனைத்தும், சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, பெண்ணுரிமை, பிறவிப் பேத ஒழிப்பான ஜாதி ஒழிப்பு என்ற கழகக் கொள்கையின் வெளிப்பாடு அது.

இந்தக் கொள்கை நாட்டு மக்களுக்குத் தேவையான ஒன்றாகும். இந்தக் கொள்கைகளுக்கு நெருக்கமாக இருந்து தலைமை தாங்கும் கட்சியையும், அதில் இணையும் கூட்டணிக் கட்சிகளையும் ஆதரிப்பதுதான் திராவிடர் கழகத்தின் அணுகுமுறை! கருப்புச் சட்டைக் காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்!

அந்த வகையில் திராவிட இயக்கக் கொள்கையை முன்னிறுத்தி தலைமை தாங்கி ஏறுநடை போட்டுச் செல்லுவது தளபதி மு..ஸ்டாலின் தலைமை தாங்கும் தி.மு..தான்.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.. விலகி நிற்க வேண்டும் என்று ஓர் அரசியல் புரோக்கர் தொடர்ந்துதுக்ளக்'கில் எழுதி வந்தார்.

ஆனால், தளபதி மு..ஸ்டாலின் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் பளிச்சென்று பதிலடி கொடுத்தார்.

தி.மு..வின் கொள்கைப் பாதையை நிர்ணயம் செய்வது பெரியார் திடல் என்றார். திராவிடர் கழகம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் வழிகாட்டும் தாய் என்று தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் தன் கொள்கை உள்ளத்தைத் திறந்து காட்டினார் (தஞ்சாவூர், 24.2.2019).

‘‘திராவிடர் கழகப் பவள விழா மாநாடு நமக்குப் பயிற்சிக் களம்!'' என்று எழுதினார் (‘முரசொலி', 27.8.2019).

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் இல்லாத காலத்தில், 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 இடங்களில் 38 இடங்களை வென்று காட்டிய வீரர் தளபதி ஸ்டாலின்.

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.. தலைமையில் திரண்டு இருக்கும் கூட்டணி என்பதில் குழப்பத்திற்கு இடம் இல்லை. தெளிவாக இருக்கிறது. யார் முதலமைச்சர் என்பதைக் கூட்டணியில் உள்ள அத்தனைக் கட்சிகளும் ஒருமனதாக அறிவித்துவிட்டன.

சமூகநீதி, மதச்சார்பின்மை கொள்கைகளில் தெளி வுடன் உறுதியாக இருக்கும் கட்சிகள் ஓர் அணியாக தி.மு.. தலைமையில் நிற்கின்றன.

எதிர் அணியின் நிலை என்ன? எந்தெந்த கட்சிகள் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன என்பது தெளிவாக்கப்படவில்லை.

முதலமைச்சர் யார் என்பதை - சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ தமிழ்நாட்டின் சார்பில் ஓரிடம் கூட இல்லாத பா...தான் யார் முதலமைச்சர் என்று அறிவிக்குமாம்.

செல்வி ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படி சொல்லும் துணிவு பா...வுக்கு வந்திருக்குமா?

.தி.மு.. என்பதில் உள்ள அண்ணாவுக்கோ, திராவிடத்துக்கோ சம்பந்தமில்லாத கட்சியாக - .தி.மு.. என்றால், அடிமையாகி விட்ட கட்சி என்று ஆகிவிட்டதே!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு ஏழரை சதவிகிதம் பெற்றுத் தந்துள்ளோம் என்று மார்தட்டுகிறார்கள், மகிழ்ச்சிதான். நூறு விழுக்காட்டை இழந்தல்லவா ஏழரை விழுக் காட்டைப் பெற்றுள்ளோம்.

நீட்' விலக்கு சட்டம் என்னாயிற்று? தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களுக்கான ஒப்புதலைப் பெற முடிந்ததா? ஜெயலலிதா இருந்தவரைநீட்' உள்ளே நுழைய முடிந்ததா?

குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை என்ற தகவலைக்கூட .தி.மு.. அரசு கூறவில்லையே! உச்சநீதிமன்றத்தில், ‘நீட்' தொடர்பான வழக்கில் மத்திய அரசு வழக்குரைஞர் தெரிவித்த பிறகுதானே அந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

டில்லியிலே விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் கொட்டும்பனியில் போராட்டம் நடத்திக் கொண் டுள்ளனர்.

மத்திய பி.ஜே.பி. அரசு - மாநில பட்டியலில் உள்ள விவசாயத்தைத் தன்னிச்சையாக எடுத்துக்கொண்டு சட்டங்களை அவசர அவசரமாக இயற்றுகிறது.

.தி.மு.. என்னும் அடிமை அரசோ மத்திய அரசின் பக்கம் நிற்கிறது. மாநில உரிமையைப்பற்றிக் கூடக் கவலைப்படவில்லை.

ஜி.எஸ்.டி.யில் மாநிலத்துக்குக் கிடைக்கவேண்டிய தொகையைக் கூட உரிமையோடு பெறும் திராணி இல்லை. குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடி என்ன சொன்னார்? ‘‘என் பிணத்தின்மீதுதான் ஜி.எஸ்.டி. வரி சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்'' என்று சொன்னாரா, இல்லையா?

நீட்'டையும் எதிர்த்தாரா இல்லையா? இவற்றை எல்லாம் பிரதமரிடம் சுட்டிக்காட்டும் திராணி இல்லையே, .தி.மு.. அரசுக்கு!

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு - குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூபாய் 15 லட்சம் என்று சொன்னது மோடிதானே - இவை எல்லாம் மக்களுக்கு எங்கே நினைவிருக்கப் போகிறது என்ற தைரியம்தானே!

ஏழை விவசாயியின் குரலுக்கு மதிப்பில்லை. ஆனால், கார்ப்பரேட்டுகளுக்குக் கடன் தள்ளுபடி 2 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய். அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு மட்டும் கூடிக் கொண்டே போகிறது.

No comments:

Post a Comment