வாசிங்டன்,ஜன.24- கரோனாவால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் நேற்றைய நிலவரப்படி, 2 கோடியே 48 லட்சத்து 22 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். 4 லட்சத்து
14 ஆயிரத்து 117 பேர் இறந்துள்ளனர். மேலும், நாட்டின் பொருளாதாரமும் சரிந்து, மக்கள் பாதித்துள்ளனர். இதனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா ரூ.1.46 லட்சம் கரோனா நிதியுதவி வழங்குவதற்கான சட்டம், கடந்த டிரம்ப் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கான சட்டத்தில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் நேற்று
கையெழுத்திட்டார்.
நாட்டின்
பொருளாரத்தை மீட்டும் நடவடிக்கை என்ற பெயரில், பைடன் நேற்று பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில், மக்களுக்கு கரோனா நிதியுதவி வழங்கும் உத்தரவும் ஒன்றாகும். இதன் மூலம், பொருளாதார பாதிப்பில் இருந்து அமெரிக்கர்களை மீட்கும் திட்டத்தின் கீழ், கரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 1.46 லட்சம் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இதற்காக, பல லட்சம் கோடி
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment