ரூ.10.75 லட்சம் கோடியாக மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 2, 2021

ரூ.10.75 லட்சம் கோடியாக மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பு

புதுடில்லி,ஜன.2, மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை முன்னெப் போதும் இல்லாத வகையில் 10 லட்சத்து 75 ஆயிரம் கோடியாக அதிகரித்திருப்பது, மத்திய பொதுக் கணக்கு கட்டுப்பாட்டு அலுவலரின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

நவம்பர் மாதம் வரையில் மத்திய அரசின் மொத்த வருமானம் ரூ. 8 லட்சத்து 30 ஆயிரத்து 851 கோடி என்ற நிலையில், செலவு, ரூ.19 லட்சத்து 6 ஆயிரத்து 358 கோடியாக இருந்துள்ளது.  இது பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட நிதிப்பற்றாக் குறையைக் காட்டிலும் 135.1 சதவிகிதம் அதிகமாகும்.

அரசின் வருவாய்க்கும் செலவு களுக்கும் இடையிலான வித்தி யாசம்தான் நிதிப்பற்றாக்குறையாக கணக்கிடப்படுகிறது. அந்த வகை யில், 2020-21 நிதியாண்டின் நவம்பர் மாத இறுதி நிலவரப்படி நாட்டின் நிதிப்பற்றாக்குறை ரூ. 10 லட்சத்து 75 ஆயிரத்து 507 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவும் கூட 2020 ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான 8 மாத காலத்திற்கான கணக்கு மட்டும்தான்.

2020 - 21 பட்ஜெட்டில் எதிர் பார்க்கப்பட்டதில், வெறும் 37 சத விகித வருவாய் மட்டுமே அரசுக்கு வந்துள்ளது.  நிதிப்பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதத்திற்குள் அல்லது ரூ. 7 லட்சத்து 96 ஆயிரம் கோடிக்குள் வைத்திருக்க மோடி அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது.

ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 4.6 சதவிகிதம் அளவிற்கு அதிகரித் துள்ளது.

No comments:

Post a Comment