ஜன.1 அன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு யுனிசெப் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 2, 2021

ஜன.1 அன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு யுனிசெப் அறிவிப்பு

நியூயார்க்,ஜன.2, ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 3.70 லட்சம் குழந்தைகளும், இந்தியாவில் சுமார் 60 ஆயிரம் குழந்தைகளும் பிறந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுனிசெப் வெளியிட்டுள்ள  அறிவிப்பில் கூறியிருப்ப தாவதுஉலகளவில் குழந்தைகள் பிறப்பு என்பது 10 நாடுகள் அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்தி யாவில் 59,995 குழந்தைகள் புத்தாண்டு தினத்தன்று பிறந்திருக்கலாம் என எதிர் பார்க்கிறோம்.அதைத் தொடர்ந்து சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜிரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161 குழந்தைகள், எத்தியோப்பியாவில் 12,006 குழந்தைகள், அமெரிக்காவில் 10,312 குழந்தைகள் பிறந்திருக்கக் கூடும். 2021 ஆம் ஆண்டை வரவேற்கும் விதத்தில் பிஜி நாட்டில்தான் முதல் குழந்தை பிறந்தது, அமெரிக்காவில் கடைசிக் குழந்தை பிறந்தது.2021 ஆம் ஆண்டில், 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்றும் இதில் குழந்தையின் சராசரி வாழ்நாள் வயது 84 ஆகவும், இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் வாழ்நாள்சராசரி வயது 80.9 ஆகவும் இருக்கும் என்றும்  புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 3.70 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் எனக் கணிக்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பைசர் கரோனா தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி

ஸ்டாக்ஹோம்,ஜன.2, கரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப் படுத்தி கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறுநாடுகளில் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். சில நாடுகளில் தடுப்பு மருந்துபயன்பாட்டுக்கு வந்துள்ளதுஇந்நிலையில் பைசர், பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் கரோனா தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் பலகட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளன. இதனைத் தொடர்ந்து அவற்றை தன்னார் வலர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றனஇதில் வெற்றி பெறும் நிலையில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு முதற்கட்ட தடுப்பு மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்பைசர் மற்றும் பயோ என்டெக் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன் பாட்டுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது

லண்டனிலிருந்து வந்த 24 பேர் பாதிப்பு

தமிழகத்தில்  புதிதாக 921 பேருக்கு கரோனா

சென்னை,ஜன.2, தமிழகத்தில் தற்போது வரை லண்டனில் இருந்து வந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. நேற்று புதிதாக 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 67,151 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 921 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்து வந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,18,935 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மட்டும் 1,029 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்தம் 7,98,420 பேர் குணமடைந்துள் ளனர். 8,380 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் அரசு மருத் துவமனையில் 8 பேரும் தனியார் மருத்துவ மனையில் 5 பேர் என 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதை சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,135 ஆக உயர்ந்துள்ளது.


No comments:

Post a Comment