விடுதலைப் புரட்சியாளர் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 1, 2020

விடுதலைப் புரட்சியாளர் கி.வீரமணி


தி.வேல்முருகன்


(நிறுவனத் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி)


திருவிவிலியத்தில் கிறிஸ்து இயேசு, “உண்மை” உங்களுக்கு “விடு தலை” வழங்கும் என்கிறார். இது கிறிஸ்தவர் கள் மட்டு மல்ல, கிறிஸ்தவர் அல்லாதவர் களும் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாத வர்களுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இந்த 'உண்மை' மற்றும் 'விடுதலை' என் கின்ற பெயர்களில் இரண்டு பத்திரிகைகளை வெளியிடுகிறது திராவிடர் கழகம். இந்த இரு பத்திரிகைகளின் பெயர்களுமே திரு விவிலியத்தில் கூறப்பட்டுள்ள, “உண்மை உங்களுக்கு விடுதலை வழங்கும்” எனும் நற்செய்தியை உறுதி செய்வதாகத்தான் நான் நம்புகின்றேன்.


உண்மை என்பது, உள்ளது எதுவோ அதையும் பகுத்தறிவு மற்றும் அறிவியலை யும் பிரதிபலிக்கிறது. அதே நேரம் விடு தலை என்பது தனிமனித, சமூக, பொருளி யல், அரசியல், பண்பாட்டு விடுதலை ஆகி யவற்றை உள்ளடக்கிய மானுட விடுதலை யைக் குறிக்கிறது.


இந்த உண்மை அதாவது பகுத்தறிவு மற்றும் அறிவியல்தான் திராவிடர் கழகத் தின் கொள்கைக் கோட்பாடாகும். அனைத்து விடுதலைகளையும் சார்ந்த மானுட விடு தலைதான் திராவிடர் கழகத்தின் இலக்கு அல்லது இலட்சியம் ஆகும். அந்தத் திரா விடர் கழகத்தின் தலைவர்தான் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்கள்.


அகவை 88இல் அடியெடுத்து வைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களுக்கு இதயம் கனிந்த என் நல் வாழ்த்துக்களையும். எங்களது தமிழக வாழ் வுரிமைக் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக் களையும் தெரிவிப்பதில் ஆழ்ந்து அகமகிழ் கிறோம்.


ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவர் என்றால், அந்தத் திராவிடர் கழகம் ஏதோ ஒரு சாதாரண அமைப்பு அல்ல; உலகின் குறிப் பிடத்தக்க இரு புரட்சிகர இயக்கங்களுள் ஒன்றாகும் அது. புரட்சிகர திராவிடர் கழகத்தைப் போன்றதொரு மற்றொரு இயக்கம் பொதுவுடமை இயக்கம்.


திராவிடர் கழகத்தின் இன்றைய தலை வர் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்கள் என்றால், அதனைத் தோற்றுவித்தவரும். அன்றைய தலைவரும் பகுத்தறிவுப் பகல வன் தந்தை பெரியார் அவர்கள் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற மனிதாபிமானியும். புரட்சிகர சிந்தனையா ளருமான தந்தை பெரியார் உலகத் தலை வர்களாக விளங்கிய ஒருசிலரின் வரிசை யில் வைத்துப் போற்றத்தக்கவர்.


அந்த ஒருசில உலகத் தலைவர்கள்: உயிரினங்களின் பரிணாம வளர்ச்சித் தத்து வத்தைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வின்; இயக்கவியல் பொருள்முதல்வாதம், மூல தனம், பொதுவுடமைத் தத்துவம் ஆகிய வற்றின் பிதாமகன் மாமேதை காரல் மார்க்ஸ்; சமூகப் புரட்சியாளரும். இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த வருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் ஆகியோர். இவர்களுக்கு நிகராக மதிக்கத் தக்கவர்தான் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களும்.


எனக்கு அறிவு தெரிந்த காலத்திலிருந்தே நான் திராவிடர் இயக்கத்தால் ஈர்க்கப் பட்டுள்ளேன். அது இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரும் என ஆணித்தரமாகவும் அடித்தும் சொல்வேன்.


அதேபோல, அன்றும் இன்றும் என்றும் திராவிடர் இயக்கத்தின் குறியீடாகத் திகழ் பவர்தான் தந்தை பெரியார் என்றால், அவ ரது மறைவுக்குப் பின் அவரைப் போன்றே திராவிட இயக்கத்தின் குறியீடாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


அதே சமயம், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மீது எனக்குத் தனிப் பாசமே உண்டு என்பதையும் என்னால் மறைக்க இயலாது. அதற்குக் காரணம், அவரும் நானும் ஒரே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.


ஆசிரியர் அவர்களுக்கும் கடலூர் மாவட்டப் பற்று இல்லாமல் இருக்க முடியாது. அது அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி மூலம் தெரிவதாக நான் புரிந்து கொள்கிறேன்.


அந்தப் பேட்டியில் ஆசிரியர், தனது இயற்பெயர் சாரங்கபாணி எனவும். தனது பள்ளித் தலைமை ஆசிரியர் திராவிடமணி அவர்கள்தான் அந்தப் பெயரை மாற்றி வீரமணி என்று பெயர் சூட்டினார் எனவும். அவர் 'குடிஅரசு' போன்ற திராவிட இயக்க ஏடுகளைப் படிக்கத் தருவார் எனவும் 1943இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் 'திராவிட நாடு' ஏட்டிற்காக கடலூரில் தாங் கள் 112 ரூபாய் வசூலித்துக் கொடுத்தபோது நடந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் திராவிடமணி அவர்கள் எழுதிக் கொடுத் ததைத்தான் தான் மனப்பாடம் செய்து பேசியதாகவும் சொல்லியிருந்தார். இந்த நினைவு ஆசிரியரின் மனதை விட்டு அகலாதபோது கடலூர்ப் பாசமும் அவ ருக்கு அகலாமல்தானே இருக்க முடியும்?


முதன்முதல் 1944 ஜூலை 19ஆம் தேதி நீதிக்கட்சியின் சார்பில் பெரியாரும், அவ ரது செயலர் அன்னை மணியம்மையாரும் கலந்து கொண்ட மாநாடு ஒன்றிற்கு டார் பிடோ ஜெனார்த்தனன் தன்னை அழைத் துச் சென்றதாகவும், அப்போது தாடியுடன் பெரியாரைப் பார்த்தவுடன் ஒரு சிங்கத் தைப் பார்ப்பது போல தனக்குப் பயமாக இருந்தது எனவும், ஆனால் நீண்ட நாட் களாக பார்க்க நினைத்த ஒரு தலைவரை நெருக்கமாகப் பார்த்ததில் தனது மகிழ்ச் சிக்கு அளவே இல்லை எனவும் கூறி யுள்ளார் ஆசிரியர் கி.வீரமணி.


பிறகு சுயமரியாதை இயக்கத்தைத் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றும் மாநாட் டிற்கு ஆசிரியரை அழைத்துப் போனார் கள். இப்படி வரிசையாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ஆசிரியர்.


கோடை காலத்தில் பெரியார் தனது வீட்டில் ஒரு மாதத்திற்குக் கொள்கை வகுப்புகள் நடத்துவார். அதில் பேச்சுப் பயிற்சியும் வழங்கப்படும். அப்படிப் பயிற்சி பெற்றவர்கள் பல ஊர்களுக்கும் சென்று பேசுவார்கள். அவர்களில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் இருந்தார். அப்படித் தான் ஆசிரியருக்கும் பெரியாருக்கும் இடையிலான நட்பு வளர்ந்தது.


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆனர்ஸ் முடித்து, அங்கேயே பொருளாதாரத் துறையில் ஆய்வுப் பணியில் ஓராண்டு வேலை பார்த்தார் ஆசிரியர். பிறகு சென்னை சென்று அங்கு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். அந்த சமயத்தில் பெரியார் மீது அடிக்கடி வழக்குகள் தொடரப்படும். அப் போதெல்லாம் ஆசிரியரும் பெரியாருடன் நீதிமன்றங்களுக்கும் செல்வார். இதற்கி டையே திராவிடர் கழகக் கூட்டங்களிலும் கலந்துகொள்வார் ஆசிரியர்.


பிறகு திராவிடர் கழகத்தின் இரண்டு பொதுச் செயலாளர்களில் ஒருவராக ஆசிரியரை அறிவித்தார் அய்யா. 1949இல் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா பிரிந்து திமுகவைத் தொடங்கியபோது ஆசிரியர் திராவிடர் கழகத்திலேயே தொடர்ந்தார். பெரியாரின் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தை வழி நடத்தும் தலைவரானார்.


திராவிடர் கழகத் தலைவராக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்துவரும் பணி கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பெரும் பணிகளின் தொடர்ச்சியே ஆகும். மானுட விடுதலை என்னும் மகத்தான மனிதாபிமானப் பணியின் ஓர் அங்கம்தான் சமூக நீதி என்னும் புரட்சிப் பணி. அந்தச் சமூக நீதியின் தாயகமாக இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தலை நிமிர்ந்து, நிலை உயர்ந்துத் திகழ்கிறது என்றால், அந்தச் சாதனையின் மூலமுதற் காரணக் காரிய கர்த்தா திராவிடர் இயக்க மும், திராவிடர் கழகத் தலைவர் கி,வீரமணி அவர்களும்தான் என்று துணிந்து சொல்ல முடியும்.


தந்தை பெரியார் அவர்கள் நீதிக் கட்சியில் இருந்த காலத்தில் வெளியிடப் பட்ட வகுப்புவாரி அரசாணை (Communal G.O.) தொடர்ந்து திமுக, அதிமுக ஆட்சிகளில் பரிணாமம் பெற்று இறுதியில் அறுதிப் பெரும்பான்மையாக 69 விழுக் காடு என நிலைபெற்றிருக்கிறது என்றால், அதற்குப் பின்னணியில் இருந்ததுதான் ஆசிரியர் ஆற்றிய பணிகளிலேயே அரும் பெரும் பணியாகும்.


சமூக நீதிக் காவலராக அறியப்படும் அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் திராவிடர் இயக்கத்தின் உயிர்மூச்சுக் கொள்கையான சமூக நீதிக்காக, மண்டல் ஆணையப் பரிந்துரையை ஏற்று, ஒன்றிய அரசு நிறுவனங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை அறிவித்தார்; மாநிலங்களில் சூழலுக்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்றும் அறி வித்தார்.


இதை எதிர்த்து இந்திரா சஹானி என் பவர் தொடுத்த வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு (Constitutional Bench), மொத்த இட ஒதுக் கீடும் 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று 16.11.1992இல் தீர்ப்பு வழங்கியது.


இதனால் அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா கொண்டுவந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது. அப்போது ஆசிரியர் தன் பட்டறிவைப் பயன்படுத்தினார். தன் சட்ட அறிவைக் கொண்டு தனிச் சட்டமே உருவாக்கிக் கொடுத்து, அதனைக் குடியரசுத் தலைவ ரின் ஒப்புதலுடன் அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையிலும் சேர்க்க வைத்து 69 விழுக்காடு இடஒதுக்கீட்டத் தொடரச் செய்தார்.


இதில் தன் ஆலோசனைப்படி நடந்து கொண்ட அன்றைய முதல்வர் ஜெ.ஜெய லலிதாவுக்கு “சமூக நீதி காத்த வீராங்கனை” என்ற பட்டத்தையும் வழங்கினார் ஆசிரி யர். இவ்விதம் சமூக நீதியை நிலைநாட்டி, சனாதனத்திடமிருந்து தமிழக மக்களை விடுதலை செய்த ஆசிரியர் அவர்களை, “விடுதலைப் புரட்சியாளர் கி.வீரமணி” என்று அழைப்பதில் பெருமிதமும் பேரின் பமும் கொள்கிறேன்.


இன்று 88 அகவையைத் தொடும் இன மானத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித் துக் கொள்கிறேன்.


வாழ்க ஆசிரியர்! வளர்க அவர்தம் அரும்பெரும் பணி!


No comments:

Post a Comment