சென்னை, டிச. 5- கர்நாடகாவை சேர்ந்த அக்ஷயகல்பா நிறுவனம் சென்னையில் தனது பால் விநியோகத்தை தொடங்கியுள்ளது. இதற்காக உத்திரமேரூரில் பால் பண்ணையை நிறுவியுள்ளது. இந்த பால் பண்ணையில் பசு மாடுகளுக்கு பசுந் தீவனம், தவிடு போன்ற இயற்கை பொருட்கள் மட்டுமே உணவாக வழங்கப்படுகிறது.
தனது நிறுவனத்தின் செயலி மூலமாக நுகர் வோர் பால் பொருட்களை தங்கள் வீடுகளுக்கு நேரி டையாக பெற்றுக்கொள்ளலாம் என்று காணொ லிக் காட்சி வாயிலாக செய்தியாளரிடம் பேசிய இந்நிறுவனர் சசிகுமார் விவசாயிகள் அனைவரை யும் ஒருங்கிணைத்து அவர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து உடனுக்குடன் கொள்முதல் தொகையும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். பால் மட்டுமல்லாது வெண்ணை. யோகார்ட். காய்கறிகளும் தமது செயலி மூலமாக கிடைக்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னையில் 10 ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாக ஆர்கானிக் பால் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment