அய்யாவின் கொள்கைகளை
அகிலத்திற்கும் எடுத்துச்சென்ற
ஆசிரியர் பெருந்தகை!
அறிவாயுதம் ஏந்தியே
ஆரியத்தை வேரறுக்கும்
ஆற்றல்மிகு தலைமை!
அடுக்கடுக்காய் வாதங்களில் அள்ளித்தருகின்ற
ஆதாரச்செம்மல்!
திராவிட சிந்தனைகள்
திக்கெட்டும் பரவச்செய்த செம்மாந்தத் தலைவர்!
இளமைப் பருவம்தொட்டு
இயக்கம் வளர்த்துவந்த
இனமான பேராசான்!
விடுதலை ஆசிரியராய்
விண்ணளவில் ஒளிவீசம் விஞ்ஞானத்தலைவர்!
வாழ்வியல் சிந்தனையை
வளப்படுத்தி, வகைப்படுத்தி வழிகாட்டும் நல்ஆசான்!
இயக்கத்தின் வேராய்
இன்தமிழர் நலனாய்
இருந்துவரும் பெருமகனார்!
இவரது அகவை என்பது
எண்பத்தி எட்டு!
உழைப்பின் வயது
எழுபத்தி எட்டு!
சுற்றிவரும் சூரியன்போல்
சுழன்றடிக்கும் காற்றைப்போல்
எந்நாளும் பெரியார்வழி!
எப்போதும் பொதுத்தொண்டு!
இவரை வாழ்நாள் சாதனையாளர் என்று
வாசிங்டன் மகிழ்ந்தது!
தமிழர்தலைவரென்று
தரணியும் புகழ்ந்தது!
வாழ்க! ஆசிரியர்!
கவிமுகில் பெ.அறிவுடைநம்பி
திண்டுக்கல்
No comments:
Post a Comment