மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை என்ற
வெளியீட்டை கழக இளைஞரணி சார்பில்
தமிழ்நாடெங்கும் - தமிழர் வீடெங்கும் கொண்டு சேர்ப்போம்
பேரன்புமிக்க கழக இளைஞரணி பொறுப்பாளர்களே - தோழர்களே! இக் கொடிய கரோனா காலகட்டத்தில் பார்ப்பனீய பாஜக அரசு மக்கள் விரோத சட்டங்களை -திட்டங்களை நாளுக்குநாள் முனைப்புடன் செயல் படுத்த துடிதுடித்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக, தெய்வீக தமிழக சங்கம் என்கிற பெயரில் பார்ப்பனீய பாசிச கும்பல் திராவிட இயக்கத்தின் மீது சேற் றைவாரி வீசும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறது.
இதனை முறியடிக்கும் வகையில் வணக்கத்துக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள 'தேசியம் காக்க தமிழினம் காக்க' புறப்படுவோரே பதில் கூறுங்கள் "மயக்க பிஸ்கட்டு"கள் ஓர் எச்சரிக்கை என்ற சிறிய நூல் வெளியீட்டை தமிழ்நாட்டு வீதிகளிலும் , தமிழர் வீடுகளிலும் கழக இளைஞரணி தோழர்கள் மாவட்ட ,மண்டல கழகப் பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலுடன் கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்கள் என்று சிற்றூர் முதல் மாநகரம் வரை கொண்டு சேர்ப்பது நமது முதல் பணியும், தலையாய கடமையுமாகும் .
கரோனா பெருந்தொற்று , புயல் வெள்ளம் என இயற்கை ஒரு புறம் நம்மை நோகச் செய்யும் சூழலை ஆரியம் வாய்ப்பாக்கிக் கொண்டு நடத்திவரும், ஆரிய திராவிடப் போர், நடத்தும் இக்காலகட்டத்தில் கழகத்திற்கு 3 அவசிய அவசரத் தேவையாக உள்ளது. அவை 1. பிரச்சாரம், 2. பிரச்சாரம், 3. பிரச்சாரம் எனும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் திட்டத்தை நிறைவேற்ற விரைந்து புறப்படுவோம். காவிக் கூட்டத்தின் கொட்டத்தை அடக்குவோம். வாய்ப்புள்ள இடங்களில் மாநில பொறுப் பாளர்களும் பங்கேற்பார்கள். நன்றி.
இவண்
த.சீ.இளந்திரையன்,
மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment