இப்போது வயது நாற்பத்தி ஆறு, தோற்றம் வயதைத் தெரிவிக்காது என்றாலும் முதிர்ச்சி பெற்ற கருத்துகளை மேடைகளில் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சற்று குனிந்து வளைந்து ஆனால் யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருகிறார். கறுப்புச் சட்டை மேனியை அலங்கரிக்கிறது. கையிலே சொற்பொழிவுக்கான குறிப்புகள், அருகேயுள்ள மேஜையிலே அன்றைய பேச்சுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பான பெரிய பெரிய புத்தகங்கள். இங்கேதான் நீங்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டும். அது தான் முக்கியமானது. மிக முக்கியமானது, என்ற சொற்றொடர், அடிக்கடி பேச்சினிடையே வந்து கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் பேசுகிறார். யார் இவர்?
வேறு யாருமல்ல, தனது பத்தாவது வயதிலேயே திராவிடர் இயக்க மேடைகளில் பேச ஆரம்பித்தவர், இன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் - விடுதலை நாளிதழின் ஆசிரியர் - வீரமணி அவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.
பத்து வயது முதற்கொண்டே பெரியாருடன் பணி புரிந்து கொண்டு - பள்ளியிலும் பயின்று - கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்று - திராவிடர் கழகத்தின் ஓய்வறியாத் தொண்டராகவும் விளங்கிய வீரமணி, இளந்தளிர்ப் பருவத்திலே மேடையிலே பேசுகின்ற வியப்புமிகு நிகழ்ச்சியைக் காணப் பெருங்கூட்டம் திரளும்.
- பேசும் கலை வளர்ப்போம் கலைஞர் மு. கருணாநிதி, பக்கம் 77 - 78
No comments:
Post a Comment