ஒற்றைப் பத்தி - பலே, பலே, நடராசன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 5, 2020

ஒற்றைப் பத்தி - பலே, பலே, நடராசன்!

கிரிக்கெட்(டு) என்பது இந்தி யாவைப் பொருத்தவரை உயர் ஜாதி பார்ப்பனர்களின் ‘தொப்புள் கொடி' விளையாட்டாக ஆக்கப் பட்டு விட்டது.


ஊடகங்களும், பார்ப்பனர்கள் கையில் சிக்கிக்கொண்டு இருப்ப தால், இந்தப் பார்ப்பன விளை யாட்டுக்கு விளம்பர வெளிச்சம் தந்து, மற்ற மற்ற விளையாட்டுகளை முகவரியில்லாமல் ஆக்கிவிட் டனர்.


இந்திய மண்ணுக்கே உரித் தான ‘ஹாக்கி'யை மூளியாக்கி மூலையில் ஒதுக்கித் தள்ளி விட்டனர்.


உலகில் அதிக நாடுகள் விளையாடும் கால்பந்தாட்டத்தின் காலை முறித்துவிட்டனர். இந்தி யாவில் - உலகப் போட்டியில் தகுதிச் சுற்றுக்குக்கூட வர முடியாத அளவுக்கு மட்டையடி கொடுத்து மடக்கிவிட்டனர்.


அர்ஜென்டினா போன்ற சின்னஞ்சிறிய நாடுகள் முன்னி லையில் ஜொலிக்கும்போது 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் கால் பந்து ஆட்டம் ‘உதைபடுகிறது!'


கிரிக்கெட்டை ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் புரளும் ஒரு தொழிலாக்கி விட்டனர்  பார்ப் பனர்களும், கார்ப்பரேட்டுகளும். சூதாட்டத்திற்கும் (மேட்ச் பிக்சிங்) பஞ்சமில்லை.


கிரிக்கெட்டில் இடம் கிடைக்க வேண்டும் என்றால், முதுகில் பூணூல் தொங்கவேண்டும். ‘‘ஜீவா'' என்ற ஒரு திரைப்படம் வந்தது. கிரிக்கெட்டின் பூணூல் தன்மை யைக் கிழித்துப் பாடம் செய்து ‘உப்புக்கண்டம்' போட்டு விட்டது.


ஏதோ தப்பித் தவறி கபில்தேவ், தோனி போன்றவர்கள் அத்தி பூ பூத்ததுபோல, வேறு வழியின்றி  அவர்களுடைய திறமையை மறைக்கவே முடியாது என்ற நிலையில் உள்ளே விட்டனர்.


ஆனால், உண்மை என்ன வென்றால், பார்ப்பனர் அல்லாத இந்த இருவர் தலைமையில்தான் உலகக் கோப்பையை இந்தியா வால் பெற முடிந்தது.


இப்பொழுது ஒரு அதிசயம், அற்புதம்! அவர்தான் நடராசன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட் டியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராமவாசி (பெற்றோர் - இறைச்சிக்கடை).


நடராஜன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட்டில் இடம் பிடித்து இரண்டு ஆட்டங்களிலும் அசத்தித் தள்ளிவிட்டார்! ‘யார்க்கர் (Yorker) மன்னர்' என்று பெயர் எடுத்துவிட்டார்.


முறையான பயிற்சி இல்லை - வயல்வெளியில் டென்னிஸ் பந்தில் விளையாடியவர்தான். வாய்ப்புக் கிடைத்தால் மண் ணுக்குள் புதைந்து கிடக்கும் இந்த வைரங்கள் ஜொலிக்கும்.


வருண்சக்ரவர்த்தி என்ற ஒரு பார்ப்பனர் காயம் பட்டதால் அந்த இடத்தில் நடராசனை ஆட வைத்தனர், அவ்வளவுதான்.


அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டு இரண்டு ஆட் டங்களிலும் அபாரமாகத் திற மையை வெளிப்படுத்திவிட்டார். 5 விக்கெட்டுகளை சாய்த்தார். உப்புக் கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்திபோல கிரிக்கெட் உலகம் கிறுகிறுத்துப் போய்விட்டது.


பலே நடராசன், பலே, பலே!!


 - மயிலாடன்


No comments:

Post a Comment