மறைந்த பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி நினைவு நாளில்....!
திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து, பிறகு கழகத்தின் பொருளாளராகப் பொறுப்பேற்று, இயக்கத்தின் வளர்ச்சியிலும், பிரச்சாரத்திலும், முத்திரைப் பதித்த மகளிரணித் தோழர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.
அவரது கொள்கை முதிர்ச் சியும், எவரிடமும் பான்மையுடனும், பாசத்துடனும், பண்புடனும் பழகும் பாங்கும் அவரது தனித்தன்மை!
நம் இயக்கத்தின் எதிர்காலம் இவரைப் போன்ற வர்களிடம் நிச்சயம் பாதுகாப்புடன் மேலும் சிறப்புடனும், செம்மையுடனும் வளர்ச்சி பெறும் என்று எண்ணி இறுமாந்திடும் எம்மைப் போன்றவர்களுக்கு இயற்கையின் கோணல் புத்தி காரணமாக அவர் வாழ்வை பறித்ததன் மூலம் பெருத்த ஏமாற்றத்தையே தந்தது!
எந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலும் அதனை செம்மையுடன் செய்து முடிப்பதில் எந்த தொல்லையையும் ஏற்கக் கூடியவர்.
டாக்டர் கவுதமனை வாழ்விணையராகிய கால முதல் அவர் ஒரு ஜாதி ஒழிப்பு வீராங்கனை என்பதை நிலை நாட்டி, கொள்கையில் பரிமளித்தவர்.
அவரது பிரச்சாரப் பணியை இப்போது சேர்த்து இயக்கத்திற்கு நமது சகோதரர் குன்னூர் டாக்டர் இரா. கவுதமன் நாளும் தரத் தவறுவதில்லை என்பது நமக்கு ஒரு ஆறுதல் - பயணங்கள் தடைபடவில்லை, பாதைகள் மாறாமல்.
அவரது நினைவு நாளில் அவரைப் போல நாணயமும் நம்பிக்கையும் கொண்டு இலட்சியப் பயணத்தைத் தொடருவதுதான் நாம் வைக்கும் நினைவு வாடாத மலர் வளையம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
4.12.2020
No comments:
Post a Comment