கோவையில் 4.12.2020 அன்று திராவிடர் கழகத்தின் மேனாள் பொருளாளர், மருத்துவர் அம்மையார் சு.பிறைநுதல் செல்வி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில். கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் திக செந்தில்நாதன் தலைமையில் மாவட்ட திக அலுவலகத்தில் காலை 10.30 மணிஅளவில் நடைபெற்றது நிகழ்வில் மே.பா.ரங்கசாமி, ஆட்டோ சக்தி, ஆசிரியர் பழனியப்பன், அ.மு.ராஜா ஜிடி நாயுடு நினைவு பெரியார் படிப்பக பொறுப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
தாராபுரம் பெரியார் திடலில் முன்னாள் கழக மேனாள் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி அம்மையாரின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் அன்று (4.14.2020) காலை 8.30 மணி அளவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுக்குழு உறுப்பினர் நா.சக்திவேல், மா.இ. அணி செயலாளர் ஆ.முனிசுவரன், நகர அமைப்பாளர் இரா.சின்னப்பதாசு, ஒன்றிய செயலாளர் சா.முருகன் வே.மாரியப்பன், மா.பழனிச்சாமி, கு.பொன்னரசு, ப.க. தோழர்கள் ஆசிரியர் புமுருகேசு, மு.மாரிமுத்து, மு.மோகன், விசிக விவசாய அணி மாநில துணை செயலாளர் வழக்குரைஞர் பி.முத்தமிழ்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு வீர முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment