நாங்கள் பெரியார் கட்சிக்குக் காரணகர்த்தாக்கள் என்றால், பெரியாருடைய மாட்சிக்குக் காரணகர்த்தாவாக இன்றைக்கு விளங்குபவர் ஆருயிர் இளவல் வீரமணி என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது. நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே ஊடல் ஏற்பட்டு, ஏன், பேச்சுவார்த்தை இல்லாத சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம்கூட, அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தவன். ஏனென்றால், அப்படி எட்டிப் பார்த்தது, சதிக் குணத்தால் அல்ல; துர்குணம் என்பார்களே அந்தக் குணத்தால் அல்ல. எட்டிப் பார்த்தது நாம் அந்த வீட்டைத் தாய் வீடாகக் கொண்டவர்களாயிற்றே, அந்தத் தாய் வீட்டில் நடக்கின்ற காரியங்களை யொட்டித்தானே நம்முடைய வீட்டிலும் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்பதற்காக. சுருக்கமாகச் சொன்னால், புரியும்படி சொன்னால் அதைப் பார்த்து நாம் என்னென்ன செய்ய வேண்டும்" என்பதைக் கற்றுக் கொள்வதற்காக எட்டிப் பார்த்ததுண்டு. அது ஒன்றும் குற்றமல்ல.
- பெரியார் மணியம்மை பல்கலைக் கழக தொடக்க விழாவில் ஆற்றிய உரையிலிருந்து
No comments:
Post a Comment